Thursday 19 February 2015

yamamani

பரமாச்சாரியார்   கூறியவாறு  பதம்  பிரித்து  இருக்கிறது .
யாம்  ஆமா? நீ  ஆம்  ஆம்  மாயாழி | காமா | காணா நாகா |
காணாகாமா |காழியா |மாமா ய | நீ  மாமாயா |
யாம் ஆமா? அற்ப  மனிதர்களான  எங்களால்  ஏதும்  பண்ண  முடியுமா ?'நீ  ஆம்  ஆம் ' சர்வ  சக்தனான  உன்னால்  முடியும் , நிச்சயம்  முடியும் .' மாயாழி ' பெரிய  யாழை  கையில்  வைத்த  வீணாதார  தட்சிணா மூர்த்தியாக  ஈஸ்வரன் . 'காமா' பேரழகனே , 'காணாநாகா ' காணும்படியாக  நாகாபரணம்  பூண்டிருப்பவனெ . 
'காணாகாமா ' காமனை  கண்  காண  முடியாது  எரித்து விட்டவனே  'காழீயா ' சீர்காழியில்  குடிகொண்டிருப்பவனே |(சீர்காழி  சம்பந்தர்  பிறந்த  ஸ்தலம் ). 'மாமாயா 'மஹா லக்ஷ்மி பதியான ,மாயாச்வரூபியான  விஷ்ணுவே .(சிவ  விஷ்ணு  பேதம்  இல்லை என்று  வருகிறது )'நீ  மாமாயா '  நீ  என்றால்  நீக்கு .ஒரே  இருட்டாயுள்ள  மாயையை  நீக்கு . என்று  ப்ரார்த்திக்கிறார் .
 அப்பர்  தண்டகத்திலும் 'நாரணன் காண்  நான்முகன்காண் ' என்று  சிவ விஷ்ணு  பேதமின்மை  வருகிறது .

Tuesday 17 February 2015

cont.

இந்த  தொடரின்  ஆரம்பத்தில்  சம்பந்தரின்  ஓர்  அற்புதமான  பதிகத்தை  பற்றி  குறிப்பிட்டிருந்தேன் . ''மாலை  மாற்று '' அதாவது  அப்பாட்டின்  அடிகள்  இடமிருந்து  வலமாகவும் , வலமிருந்து  இடமாகவும்  ஒரே  வாசகம்  இருக்கும் . மேலும்  அதில்  6 எழுத்துகளே  உபயோக  படுத்தி  உள்ளார் . அதற்கு  அப்போது  அர்த்தம்  எழுத  வில்லை . மகா  பெரியவர்  எழுதிய  ' தெய்வத்தின்  குரல்' லிருந்து  எடுத்து  எழுதுகிறேன் . பாட்டு ,
யாமாமா  நீ  யாமாமா  யாழி காமா  காணாகா |
காணாகாமா  காழீயா  மாமாயா  நீ  மாமாயா .

Sunday 15 February 2015

sambandarcont.

சம்பந்தர்  கோளறு  பதிகத்தில் ,
தானுறு  கோளும்  நாளும்  அடியாரை  வந்து
  நலியாத  வண்ணம்  உரை  செய்
ஆனசொல்  மாலை  ஓதும்  அடியார்கள்  வானில்
  அரசாள்வர்  ஆணை  நமதே |
இவ்வாறு  இவருடைய  பதிகங்களில்  ஒரு உறுதி  காண்கிறோம் . உமை  அன்னையையும்  ஈசனையும்  பெற்றோராக  அடைந்த  அவருக்கு  அல்லாமல்  வேறு  யாருக்கு இவ்வுறுதி   சாத்தியம் .

Thursday 12 February 2015

sambandar

அன்னையால்  பால்  ஊட்டப்பட்டு  பாட  தொடங்கிய  சம்பந்தர்  ஈசனையும்  அன்னையையும்  தன்  பெற்றோராய்  ஏற்று  பக்தி  செலுத்தியதில்  வியப்பேதும்  இல்லை .பெற்ற  பாசத்தோடு  தங்க  தாளமும்  சிவிகையும்  ஈந்த  அவர்கள்  பாசத்தையும்  நாம்  உணரலாம் . ஆகையால்  அவர்  பாக்களில்  ஒரு உறுதியும் அவர்  சொல்  ஓர்  ஆணை என  மதிக்க  தக்கதாகவும்  இருந்தன . முதல்  பாட்டிலேயே
''தோடுடைய  செவியன் '' என்றா பாட்டிலேயே  தெரியவரும் .
''ஒரு  நெறிய  மனம்  வைத்துணர்   ஞானசம்பந்தன்  உரைசெய்த
திரு  நெறிய  தமிழ்  வல்லவர்  தொல்வினை  தீர்த்தல்  எளிதாமே ''
மங்கயற்கரசி  எனும்  ஆலவாய்  பதிகத்தில்
''கன்னலம்  பெரிய  காழியுள்  ஞானசம்பந்தன்  செந்தமிழ்  இவைகொண்டு
இன்னலம்பாட  வல்லவர்  இமையோர்  ஏற்ற  வீற்றிருப்பவர்  இனிதே ''
அவர்  ஈசன்  அடி  சேர்வதன்  முன் பாடிய  'காதலாகி  கசிந்து ' ஏனும்  பதிகத்தில்
''ஞானசம்பந்தன்  சொல்  சிந்தையால்  மகிழ்ந்து
ஏத்த  வல்லார்  எல்லாம்  பந்த பாசம்  அறுக்க  வல்லார்களே '' என்று  பாடுகிறார் . கூடியிருந்த  அனைவரும்  அவருடைய  அருளலால்  ஈசனடி  சேர்கின்றனர்




Wednesday 11 February 2015

cont.

நின்னாவார்  பிறரின்றி  நீயே  ஆனாய் '' எனும்  தாண்டகத்தில்
   பூமிமேல்  புகழத்தக்க  பொருளே  உன்னை
என்னானாய்  என்னானாய்  என்னின்  அல்லால்
   ஏழையேன்  என்  சொல்லி  எத்துகேனே |
  என்று  அப்பர்  அரற்றுகிறார் .''
 ''திருவடியென்  தலைமேல்  வைத்தார்   நல்லூரெம்பெருமானார்  நல்லவாறே '' மேலும்  உற்றிருந்த  எனும்  திருவையாறு  தாண்டகத்தில்  ''பிரானாய்  அடியேன்மேல்  வைத்தாய்  நீயே '' இவையெல்லாம்  அப்பரடிகளின்   எளிமையான  பக்தியை  காண்பிக்கின்றன
 இப்போது  திருஞான சம்பந்தரின்  பாக்களை  நோக்கினால்  அவ ரூடைய  பக்தியின்  தன்மை  காணலாம் . அவர்  அன்னையால்  ஞானப்பால்  ஊட்டப்பட்டு  குழந்தை யாகவே  பாட  தொடங்கினார் 

Monday 9 February 2015

appar,sambanthar

அப்பருடைய  பக்தி  தா சபாவம்  ஈசனுக்கு  அடியார்க்கும்  அடியேன்  என்கிற  பாவம் .உழவார  பணியே  மூச்சு  என்று  வாழ்ந்தவர் . எல்லா  பதிகங்களிலும்  தன்னை  மன்னித்து  எல்லா  சோதனைகளிலும்  தன்னை  உடனுக்குடன்  காத்து  ரக்ஷித்ததையும்   நினைவு  கூறுகிறார் . ஈசனின்  தன்னை  மன்னித்து  ஏற்ற  தயாள  குணத்தை  அடிக்கடி  நினைவு கூறுகிரார்  அவர்  பாடல்களில்  இந்த  எளிமை  அதிகம்  காணப்படும் . "தலையே  நீ  வணங்காய் " "நற்துணை  ஆவது  நமசிவாயவே '' சிராப்பள்ளி  பதிகத்தில்  "பேயனேன்  எனை  ஆண்ட  பெருந்தகை " என்று  தன்னை  பேயாக  சித்தரித்து  கொள்கிறார் .

velur

பத்திமையாற்  பணிந்தடியேன்  றன்னை  பன்னாட்
  பாமாலை  பாட  பயில்வித்தானை
எத்தேவு  மேத்து  மிறைவன்  றன்னை
  யெம்மானை  என்னுள்ளத்துள்ளே  யுறும்
அத்தேனை  யமுதத்தை  யாவின்  பாலை
  யண்ணிக்கும்  தீங்கரும்பை  யரனை  யாதிப்
புத்தேளை  புள்ளிருக்கு  வேளுரானை ப்
  போற்றாதே  யாற்ற நாள்  போக்கினேனே |
அப்பர்  போன  பதிகத்தில்  அரற்றிய து  போலவே   புள்ளிருக்கு  வேளுரானை  போற்றியும்  தான்  பாடாமல்  இத்தனை  நாட்கள்  வீணாக்கியதை  மனம்  நொந்து  தாண்டகங்கள்  பாடுகிறார் . தனக்கு  நாவுக்கரசன்  என்று  பெயரும்  சூட்டி  தன்னை  பாடவித்தான்  என்பதை  அடிக்கடி  நினைவு  கூறூகிறார் . திருவையாறு  ஈசன்  தன தலைமீது  பாதம்  வைத்து  ஆண்டு  கொண்டதையும்  நிறைய  பாடல்களில்  நினைவு  கூறுகிறார் .' ஓசை  ஒலியெல்லாம் '  என்னும்  திருவையாறு  தாண்டகத்தில்  
"பிரானாய்  அடியென்மேல்  வைத்தாய்  நீயே " என்று  பாடுகிறார் .

Wednesday 4 February 2015

thandakam

அரியானை  அந்தணர்தம்  சிந்தையானை
 அருமறையின்  அகத்தானை  அணுவையார்க்கும்
தெரியாத  தத்துவனை  தேனை  பாலை
 திகழொளியை  தேவர்கள்  தம்கோனை  மற்றை
கரியானை  நான்முகனை  கனலை  காற்றை
 கனைகடலை  குலவரையை  கலந்து  நின்ற
பெரியானை  பெரும்பற்ற  புலியுரானை
 பேசாத  நாளெல்லாம்  பிறவா  நாளே |
அப்பர்   தாம்  சமண  மதத்தில்  இருந்த  போது  தாம்  செய்த  சிவநிந்தனையை  எண்ணி   எப்போதும்  மன  வேதனை  கொண்டே  இருந்தார் . இவ்வாறு  பல  பாடல்களில்  தன்  மன  சோர்வை  வெளி  படுத்துகிறார் . ஈசனை  பாடாத  நாளெல்லாம்  வாழ்ந்தும்  வாழாத  நாளாகவே   கருதுகிறார் .அத்தனை  நாட்கள்  விணானதை  மிகுந்த  வேதனையுடன்  வெளிப்படுத்துகிறார் . பெரும்பற்ற  புலியூரானின்  மேல்  இவ்வாறு  10 தாண்டகங்கள்  பாடியுள்ளார் .

Monday 2 February 2015

apparcont.

உழவாரபணியெ  உயிர் 
மூச்சென  வாழ்ந்த  அப்பர்பிரான்  இவ்வாறு  பாடியதில்  வியப்பென்ன  இருக்கமுடியும் ? கோவில்  செல்லும்  பெண்கள்  செய்ய  வேண்டிய  பணிகளை  இத்தாண்டகத்தில்  விரிவாக  பாடுகிறார் .இவ்வாறு  ஆலையங்களில்  தொழ  செல்பவர்கள்  ஆற்ற  வெண்டிய  முறையை  இந்த  காலத்தில்  தான்  தோன்றி  இருக்குமோ  என்று  எண்ண  தோன்றுகிறது .