Thursday 31 July 2014

padhigam

பதிகம்
சிலந்தியும்  ஆனைக்காவில்  திரு  நிழல்  பந்தல்  செய்து
உலந்தவண்  இறந்தபோதே  கோ ச்செங்கனானுமாக
கலந்த  நீர்  காவிரி  சூழ்  சோணாட்டு  சோழர்  தங்கள்
குலந்தனில்  பிறப்பித்திட்டார்  குறுக்கை  வீரட்டனாரே .
ஆதலால்  இந்த  சம்பவம்  உண்மை  என்றே  கொள்ள  வேண்டும் .

bhakthi era

சோழ  கோ செங்கணான்  வாழ்ந்த  காலத்திலேயே  பக்தி  அலை  தொடங்கி  இருக்க  வெண்டும் . இது  3 அல்லது  4 நூற்றாண்டாக  இருக்கலாம் . அந்த  காலகட்டத்தில்  சிலந்தி  மன்னரானது  எல்லோராலும்  நம்பப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு  உண்மை . இதை  யாரும்  சந்தேகிக்க வில்லை .சில  நூற்றாண்டு  பின்   தோன்றிய  அப்பர் , சம்பந்தர்  இவர்களின்  பாசுரங்களில்   எதிரொலிக்கின்றன . அப்பர்  திரு  குறுக்கை வீரட்டானம்  என்னும்  தலத்தில்  பாடிய  பாசுரம் ,
 

Friday 25 July 2014

sivam

சிலந்தி  ஒன்று   அந்த  லிங்கத்தின்  மேல்  காய்ந்த  இலை  தழைகள் விழுவதை   காண  சகியாமல் , தன வலையால்  ஒரு பந்தல்  அமைத்து  பாதுகாக்க  முற்பட்டது . ஓர் யானை  லிங்கத்தை  பூஜை  செய்ய  வந்து  அந்த  பந்தலை தகர்த்து  தண்ணீர்  ஊற்றி  அபிஷேகம்  செய்தது . இவ்வாறே  தொடர்ந்தது .  கோபம்  கொண்ட  சிலந்தி  யானையின்  துதிக்கையில்  புகுந்து  பெரும் அவஸ்த்தை  உண்டாக்கியது  வேதனை  தாளாத  யானை  துதிக்கையை  தரையில்  அடித்தது .அதில்  யானை, சிலந்தி  இரண்டுமே  மாண்டன .  அந்த  சிலந்தியின்  பக்தியை  மெச்சிய  சிவபெருமான்  சோழ  அரச  தம்பதியினருக்கு  மகனாக  பிறக்க  செய்தார் . பிற்காலத்தில்  அவர் பக்திமானாக  விளங்கி  நிறைய  சிவாலயங்களை  எழுப்பினார்   இவரைத்தான்  திருமங்கை  ஆழ்வார்   தன்  பாசுரத்தில்  குறிப்பிட்டுருக்க  வெண்டும்  என்பது  ஐயங்காரின்  அனுமானம் .  அனால்  அவர் வாழ்ந்த  காலத்தை  சரியாக  கணிக்க  இயலவில்லை அவரே  கோ  செங்கணான்  என்னும்  மன்னராவார் ..

Wednesday 23 July 2014

sivam

இந்த  பக்தி  அலை . ஈசனின்  திருவிளையாடல்கள்  இவை  அரங்கேறிய  காலம்  பற்றி  சிந்திப்போம் . நாயன்மார்கள்  பக்தி  பரவசத்தில்  ஈசனுக்கு  சூடிய  பாமாலை .  மற்றும்  அவர்கள்  ஆற்றிய  பல  தொண்டுகள்  இவை 3 அல்லது  4 நுற்றாண்டு  துவங்கி  9 நுற்றாண்டு  வரை,  சுந்தரர்  வாழ்ந்த  காலம்  வரை  இருந்த்திருக்க  வேண்டும்  எனறு  சரித்திர  பேரறி ஞர்   சக்கோட்டை  கிருஷ்ணசாமி  ஐய்யங்கார்  அவர்கள்  தம்  ஒரு  கட்டுரையில்  குறிப்பிட்டுள்ளார் .இதற்குமுன் நான்   எழுதி  இருந்த  பகுதிகளிலும்  அவர்  புதினங்களில்  இருந்து  எடுத்த  குறிப்புகள்  இடம்  பெற்றுள்ளன  என்பதை  இங்கு  குறிப்பிட  விரும்புகறேன் .
  திருவானைக்காவல்  என்ற  ஊர்  எல்லோரும்   கேள்விப்பட்டிருக்கிறோம் .ஜம்புகேஸ்வரர்  அந்த  கோவிலின்  மூல மூர்த்தி .அந்த  கோவில்  எழும்பும்  முன்பு  அவர்  லிங்க  வடிவில்  ஒரு  மரத்தடியில்  எழுந்தருளி  இருந்தார் .    

Saturday 19 July 2014

kannappa

ஒருநாள்  அவன்  பூஜை  செய்ய  வரும்போது லிங்கத்தின்  கண்ணில்  ரத்தம்  வழிவதை  காண்கிறான். அதை  காண  சகியாத  அவன்  தன  ஒரு  கண்ணை  பிடுங்கி  எடுத்து  கண்  தானம்  செய்கிறான் .  அந்த  கண் பொருந்தி  குருதி  நின்றதும்  பேரானந்தம்  கொள்கிறான் . ஆனால்  அந்தோ , அவரது  மறு கண்ணில்ருந்து  ரத்தம்  கொட்ட  தன்  கால் கட்டை  விரலை  அந்த  இடத்திற்கு  அடையாளமாக  வைத்துகொண்டு  தன மறு  கண்ணையும்  பிடுங்க  யத்தனிக்கிறான் . அப்போது அன்பே  உருவான ஈசன்  எதிரில்  தோன்றி  'கண்ணப்பா ' என்று  அழைத்து  ஆர  தழுவிக்கொள்கிறார் .  இவர்கள்  சிவபதம்  அடைந்ததில்  வியப்பென்ன ? ஈசனிடத்தில்  திண்ணன்  காட்டிய  கலப்படமில்லாத  பேரன்பு  எல்லாவித  ஆசார  அனுஷ்டானங்களையும்  கடந்து  அவன்  நெஞ்சில்  அமர்கிறது . திண்ணன்  உயர்ந்து  கண்ணப்ப  நாயனாரகிறான் .என்னே  ஈசனின்  அன்பு .
சண் டிகேஸ்வரர்  தான்  பூஜித்த  சிவலிங்கத்தை உதைத்த  தந்தையை  காலை  வெட்டி  கொன்றார் . கண்ணப்ப  நாயனார்   கதை  அறியாதவர்  யாரும்  இருக்கமாட்டார்கள் . திண்ணன்  எனும் வேடுவ  குலத்தை  சேர்ந்த    ஒன்றும்  அறியாத  வேடுவன்  கண்ணப்பன் ஆனது  எவ்வாறு ?காலஹஸ்தி  காட்டில்  வாழ்ந்து  வந்த  அவன்  அங்கு  கண்ட  ஒரு  சிவலிங்கத்தை  கண்டு   அதனால்  பெரிதும்  ஈர்க்கப்பட்டு  லிங்கத்தை காணாமல்  ஒரு  நாள்  கூட  இருக்க முடியாத  நிலை  அடைகிறான் . ஒரு  சிவாசாரியார்  பூஜை  செய்வதை  கண்டு  தானும் செய்ய  நினைத்து வாயில்  நீரை   எடுத்து கொண்டு  கையில்  காட்டு  பூக்களையும்  சமைத்த  பன்றி  மாமிசத்தையும்  கொண்டு  வந்து  வாயிலுள்ள  நீரால்  அபிஷேகம்  செய்து  பூக்களை  போட்டு அர்ச்சித்து  மாமிசத்தை  படைக்கிறான் .

Friday 18 July 2014

சைவ  சித்தாந்தம்  இதற்கு  வழி  காட்டுகிறது .  அத்தகைய  பக்தர்கள்  மனம்  முழுவதுமாக  சிவனுக்கே  அர்பண மாக இருக்கிறது . அவருக்காக  எத்தகைய  த்யாகமும்  அவர்களுக்கு  ஆனந்தம் . பிள்ளை கறி  சமைத்தார்  சிறுத்தொண்டர்  என்கிறது   பெரிய புராணம் . ஈசன் காளபைர வர்  உருவில்  வந்து  பசிக்கு  உணவளிக்க  வேண்ட  சிறுத்தொண்டர்  மிக்க  ம கிழ்ந்து  அவரை  உபசரித்தார் . ஈசன்  சிறுத்தொண்டரின்  பிள்ளை கறி தான்  தமக்கு  உகந்த உணவு , தர இயலுமா  என்று  வினவ  சிறுத்தொண்டர் , அவர்  மனைவி  மகன்  மூவரும்  சிறிதும்  சலனமின்றி  அதை  நிறைவேற்ற ,சிவபெருமான்  மகிழ்ந்து  தன்னுடன்  சேர்ந்து  உணவருந்த  மகனை யும்  அழைக்க  சொல்கிறார் .தொண்டரும்  சீராளா  என்று  தன்  மகனை  கூப்பிட  மகன்  ஓடி  வருகிறான்  ஈசன்  அருளால் . சிறுத்தொண்டரின்  பெருமையை  உலகறிய  செய்ய  ஈசன் ஆடிய  திரு  விளையாடல் .அன்பே  உருவான  சிவன்  இத்தகைய  கொடூரமான  கோரிக்கை  வைத்ததும்  அதன் காரணமே ,

Saturday 12 July 2014

ஆன்மா  அழிவில்லாதது .சிருஷ்டி  ஆண்டவன்  தொழிலானாலும்  அவரவர்  பிறப்பு  ஆன்மாவையே   பொறுத்து  உண்டாகிறது .முன்  பிறவியின்  அவரவர்  செய்த  கர்ம  வினையின்  விளைவாகவே  நிகழ்கிறது . வேத ம்  காட்டிய  வழி  நடந்தவன்  உயர்  பிறவியும் , தவறான  வாழ்க்கை  வாழ்ந்தவன்  தாழ்ந்த  பிறவி எய்து  அல்லலுறுகிறான் . இது  இயற்கையின்  நியதி .  ஆனால்  அன்பே  வடிவான   ஈசன்  பிறப்பெய்திய   அத்தனை  ஜீவன்களும்   பிறவாநிலையான  சிவபதம்  அடைவதையே  விரும்புகிறான்.  ஈசன்  தன்  பக்தர்களை  அந்நிலைக்கு  அழைத்து  வர  எத்தனை  திருவிளையாடல்கள்   புரிகிறான் .