Tuesday 31 March 2015

esan kodai

 ஈசன்  சுந்தரருக்கு  அளித்த  கொடைகள்  பிரமிக்க  வைக்கும் . பங்குனி  உத்திரத்தன்று  தன்  அடியார்களுக்கெல்லாம்  தானம்  வழங்க  பொருள் வேண்டி திருபுகலூர்  ஈசனிடம்  தஞ்சம்  அடைகிறார் . அவரை  பாடி  துதித்து  களைப்பு  மேலிட  செங்கல்களை  அடுக்கி  அதில்  தலை  வைத்து  படுக்கிறார் . எழுந்து  பார்க்கையில்  அவை  தங்கமாக  மாறி  இருப்பது  கண்டு  ஈசனின்  கருணையை  கண்டு  வியந்து  பாடுகிறார் 

Friday 27 March 2015

paravaiyar

கைலையில்  சுந்தரரை  கவர்ந்த  மங்கையரில்  ஒருவர்  திருவாரூரில்  பிறந்து  வாழ்கிறார்  .பரவையார்  என்பது  அவர்  பெயர் . அழகிலும்  மற்ற  கலைகளிலும்  தேர்ந்தவர் . சிறந்த  சிவபக்தி  உடையவர் . தினமும்  த்யாகேசர்  முன் பாடி  ஆடும்  பழக்கமுடையவர் . தியாகேசர்  அருளால்  அவர்கள்  சந்திக்க  நேர்கிறது . ஈசன்  திருவருளால்  அவர்கள்  திருமணம்  இனிதே  நடைபெருகிறது . சுந்தரர்  அழகும்  பக்தியும்   அவர் பாடிய  பாக்களும்  அவருக்கு பெரும்  மதிப்பை  எற்படுத்தி  இருந்தது . சில  பெரியவர்கள்  தங்கள்  பெண்களை  மணக்குமாறு  சுந்தரரை   வேண்டினர் . ஆனால்  சுந்தரர்  மறுமுறை  அத்தவறை  செய்வாரா ? அப்பெண்களை  தன்  மடியில்  இருத்தி  காதில்  மந்திரம்  ஓதி  தன்  மகளாக  ஏற்று   கொள்கிறார் . இவர்கள்  பற்றி  தன்  பாடலிலும்  குறிப்பிட்டிருக்கிறார் .  

Monday 23 March 2015

thirvarur

சுந்தரர்   திருவாரூர்  அடைகிறார் . திருவாரூர்  த்யாகேசர்  கண்டு  வணங்கி  எழுகிறார் . அப்போதே  அவ்விருவருக்கும்  ஒரு  அசைக்கமுடியாத  பந்தம்  ஏற்படுகிறது . அவர்  சுந்தரருக்காக ஆற்றிய  பணிகள்  வியக்க  வைக்கும் . அப்படிப்பட்ட  தோழமை . அவரே  ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு   அடியேன் ''  என்று  அடி  எடுத்து  கொடுத்து  சிறந்த  சிவ  பக்தர்கள்  அனைவரையும்  பாட  வைக்கிறார் . அதுவே  திருத்தொண்டர்  தொகை  என  புகழ்  பெற்றது . இவர்  பாடிய  சிவ  தொண்டர்களே  பிற்காலத்தில்  63 நாயன்மார்களாக  எல்லா  சிவாலயங்களிலும்  வீற்றுருக்கின்றனர் .இதுவே  சிறப்புமிக்க  சேக்கிழார்  பெருமானின்  பெரியபுராணம்  உருவாக  காரணமாக  இருந்தது . பெரியபுராணத்தில்  முதலிலும்  கடைசியிலும்  சுந்தரர்  இடம்  பெறுகிறார் . சுந்தரர்  இப்பதிகத்தில்  திருவாரூர்  பிறந்தார்கள்  எல்லோர்க்கும்  அடியேன்  என்று  பாடுகிறார் 

Sunday 22 March 2015

sndarar

'பால்  நினைந்து  ஊட்டும்  தாயினும்  சால  பரிந்து '  என்ற  வாசகத்தின்படி  சுந்தரர்  பசியால்  வாடும்போது ஈசனே   அவருக்கு  பசியாற  அன்னமிட்ட  சம்பவங்களும்  உண்டு . கேட்கவே  மெய்  சிலிர்க்கிறது  அல்லவா? ஆனால்  தவறு  செய்தபோது  தண்டிக்கவும்  தவறவில்லை . அதை  பிறகு  பார்க்கலாம் . சுந்தரர்  இரு  பெண்களை  கண்டு  தடுமாறியதால்  அவர்  புவியில்  பிறந்தார்  என  நினைப்பது  தவறாகும் . அவருடைய  பாக்கள்  சைவத்திற்கு  கிடைக்க  வேண்டும்  என்பதே  ஐயனின்  இச்சை . அவர் பாடிய  'திரு  தொண்டர்  தொகை ' சைவத்திற்கே  ஒரு  பொக்கிஷம் . அவர்  ஆலயங்களை  வழிப்பட்டுகொண்டே  தில்லையை  அடைந்தார் . அங்கு  அவர்  தன நிலை  மறந்து  தொழுது  கொண்டிருந்த  போது  சுந்தரா  திருவாரூர்   செல்  என்ற  கட்டளையை  கேட்டு  திருவாரூர்   செல்கிறார் 

thiruathikai

திருஅதிகை  அப்பர்  அடிகள்  பிறந்து  வாழ்ந்த  இடம்  .ஆதலால்  சுந்தரர்  அந்த  மண்ணில்  கால்  வைக்க  கூசி  ஊர்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  உறங்குகிறார் . இதை அறிந்த  ஈசன்  சுந்தரரை  காண  தான்  சென்று  இந்த  நாடகமாடுகிறார் . சுந்தரரின்  பக்தி  அத்தனை  உயர்வானது . ஆலால  சுந்தரர்  கைலையில்  ஈசனுடன்  இருந்தபோது   பாற்கடலில்  எழுந்த  விஷத்தை  இவர்  ஏந்தி  ஈசனிடம்  ஒப்படைத்ததால்  இவருக்கு  ஆலால  சுந்தரர்  எனும்  பெயர்  வழங்கலாயிற்று . இதன்  காரணாமாக  ஈசனுக்கு  அவர்  மீது  அத்தனை  வாஞ்சை .

Wednesday 18 March 2015

cont.

சுந்தரருக்கு  வாக்களித்தபடி  ஈசன்  அவருக்கு  தன்னை  காட்டிகொண்ட  நிகழ்ச்சிகள்  பல .முதல்  முறையாக  சுந்தரர்  தன்னை  மறந்து  ஒரு பெண்ணை  மணக்க  முனைந்த  போது  முதியவராக  வந்து  திருமணத்தை  நிறுத்தி  அவரை  ஆட்கொண்டது  கண்டோம் . பிறகு  திருவதிகை  என்னும்  ஊரின்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  உறங்குகையில்  சுந்தரர்  தன தலை  மீது  யாரோ  பாதம்  வைப்பதை உணர்ந்து  வேறு  பக்கம்  தலை  வைத்து  படுக்கிறார் . அப்போதும்  அதே  போல்  தன்  தலைமேல்  பாதம்  வைப்பதை  கண்டு  வியப்படைகிறார் . அப்போது  ஈசன்  சுந்தரா , என்னை  தெரியவில்லையா ?   என்று  கேட்டு  மறைகிறார் .சுந்தரர்  ஈசன்  கருணையை  நினைத்து  நெ க்குருகுகிறார் . 

sundararcont.

சுந்தரரின்  பக்தி  தோழமையான  பக்தி  நிறைய  பாடல்களில்  அது  வெளிப்படும் . சில பாடல்களில்  அதிக சலுகை  எடுத்து  கொள்வதாககூட  தோன்றும் . ஈசனும்  அவ்வாறே  அவருடன் தோழமையுடன்  பழகியதை  காணமுடிகிறது . சுந்தரருக்காக  தூது  செல்கிறார் . ஈசன் கருணை  தான்  என்னே ? இதன்  காரணாமாக  சுந்தரருக்கு  தம்பிரான்  தோழன்  என்ற  பெயரும்  உண்டு  

Tuesday 17 March 2015

cont.

சுந்தரர்  இவ்வாறு  ஈசனுடன் வாதம்  செய்து   பின்  கண்டுகொண்டு  சரணடைந்ததால்  அவருக்கு  வந்தொண்டன்  என்ற  பெயர்  வழங்கலாயிற்று .  

Friday 13 March 2015

sundarar2 cont.

சுந்தரர் 3 படிக்குமுன்  இந்த  பகுதியை  படிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன் . எழுதியது  கை  தவறுதலால்  அழிந்துவிட்டது . மன்னிக்கவும் .
 சுந்தரரின்  அழகை  கண்டு  திருமுனைப்பாடி அரசன்  நரசிங்க முனையரையன்  சுந்தரரை  தானே  வளர்க்கிறான் . அரண்மனையில்  வளர்ந்தாலும்  சுந்தரர்  தன குல தர்மம்  மறக்காமல்  வேத  பாடங்களையும்  கற்று  தேர்ந்தான் . அவனுக்கு  தக்க  வயது  வந்தபோது  பெரியோர்கள்  சுந்தரருக்கு  திருமணம்  செய்ய  ஏற்பாடுகள்  செய்தனர் . திருமண  சடங்குகள்  நடக்கையில்  அங்கு  ஒரு முதியவர்  தோன்றி  ஒரு  ஓலையை  காண்பித்து  சுந்தரர்  குடும் பத்தவர்  3தலைமுறையாக  தம்  குடும்பத்திற்கு  அடிமை  என்று  சொல்லி  திருமணத்தை  நிறுத்த  ஆணை  இடுகிறார் . பெரும்  கோபம்  கொண்ட  சுந்தரர்  அந்த  ஓலையை  கிழித்து  எறிந்து  அந்தணர்களை  அடிமை  படுத்த இயலாது  என்று  பித்தன்  பேயன்  என்று   பலவாறு  ஏசுகிறார்    

Thursday 12 March 2015

s.4

சுந்தரா  என்னை  நீ  உணரவில்லையா ? என்ற  குரலை  கேட்ட  சுந்தரர்  பிரமித்து  போய்  தன்  தவறை  உணர்கிறார் . வந்தது  ஈசன்  என்பதை  உண ர்கிறார் .தனக்கு  வார்த்தை  கொடுத்ததை  ஈசன்  மறவாமல்  தான்  செய்ய  இருந்த  பெரும்  பாவத்திலிருந்து  தன்னை  காத்த  ஈசனின்  அன்பை  வியந்து  நெகிழ்ந்து  பலவாறு  பிதற்றுகிறார் . ஈசன்  'என்னை  பாட  அல்லவோ  நீ  பிறந்தாய் ? பாடு ' என  கட்டளை  இடுகிறார் . என்ன  பாடுவேன்  என  தன அறியாமையை நினைந்து   நெக்குறுகி  வினவுகிறார் . ஈசன்  தன்னை  பித்தா  என்றெல்லாம்  ஈசினாயே  அதையே  பாடு  என்று  சொல்ல  ''பித்தா  பிறை  சூடி  பெருமானே  அருளாளா '' என்ற  பதிகம்  பாடுகிறார் .   

no.3

முதியவர்  கோபத்துடன்  கடுமையாக  பேசிய   சுந்தரரையும்   மற்ற  பெரியோர்களையும்  நோக்கி  எனக்கு  இந்த  ஊரில்  ஞாயம்  கிடைக்காது . என்  ஊரில்  பெரியோர்கள்  என்ன  சொல்கிறார்களோ  அதன்படி  நடக்க   சித்தமாக  இருப்பதாக  தெரிவித்தார் . அவர்  ஊர்  யாது  என்று வினவ  திருவெண்ணைநல்லூர்  என  பதில்  உரைக்கிறார் .  உடனே  எல்லோரும்  அங்கு  விரைகின்றனர் . அங்கு  தீர்ப்பு  முதியவருக்கு  சாதகமாக  இருக்க  வேறு  வழியின்றி  சுந்தரர் முதியவரை  பின்  தொடர்கிறார் . முதியவர்  அவ்வூர்  ஆலயத்தில்  நுழைந்து மறைந்து  விடுகிறார் .          

Monday 9 March 2015

sundarar2

ஆலால  சுந்தரர்  ஈசன்  ஆணை ப்படி  தென் திசையில்  திருமுனைப்பாடி  என்னும்  நாட்டில்  நாவலூர்  எனும்  கிராமத்தில்  பிராம்மண  குலத்தை  சேர்ந்த  சடையனார்  என்பவருக்கும்  இசைஞாநியருக்கும்  மகனாக  பிறந்தார் . மிக  அழகனாகவும்  அறிவானவனாகவும்  இருந்ததில்  அதிசயம்  ஒன்றும்  இல்லை . நம்பிஆரூரன்  என்பது  அவருடைய  பெயர் . பெற்றோர் இருவரும்  சிறந்த  சிவபக்தர்கள் . பிற்காலத்தில்  நாயன்மார்களாக்  போற்றப்பட்டவர்கள்  என்பது  குறிப்பிடதக்கது . 

Friday 6 March 2015

sundarar

இப்போது  நாம்  7 ஆம்  திருமுறையை  காண்போம் . இந்த  திருமுறை  சுந்தரமூர்த்தி  நாயனார்  அவர்களால்  பாடப்பெற்றது .
ஆலாலசுந்தரர்  கைலாயத்தில்  வாழ்ந்த  சிவதொண்டர் . ஒரு  நாள்  பூங்காவில்  தேவி  பார்வதியின்  இரு  தோழிகள்  மலர்  பறித்து  கொண்டிருப்பதை  கண்டு  அவர்கள்  மீது  மையல்  கொண்டார் . இதையறிந்த  ஈசன்  சுந்தரரை  பூலொகத்தில்  சில காலம்  இருந்து  அவ்விருவரையும்  மணந்து  சிகாலம்  வாழ்ந்து  பிறகு  கைலாயம்  திரும்ப  கட்டளை  இட்டார் . மனம்  வருந்திய  சுந்தரர்  பூலோகத்தில்  ஈசன்  திருவடியை  தான்  மறவாதிருக்க  அவ்வப்போது  தனக்கு  அவர்  திருவடியை  காட்ட  வேண்டும்  என்று  விண்ணப்பித்து  கொண்டார் . ஐயனும்  அவ்வாறே  ஆகட்டும்  என்று  வாக்களித்தார் .