Friday 27 April 2018

நாவுக்கரசருக்கு   ஒரு   குறை   மனதை   வாட்டிக்கொண்டிருந்தது .  உமை   அன்னை  பாலூட்ட   ஞானம்   பெற்று   ஐயன்   அம்மை   மீது   பக்தி   ததும்பும்   பாடல்கள்   பாடி    பக்தர்களை   மெய்மறக்கச்செய்யும்   காழிப்பிள்ளையை   தான்    காலில்   விழுந்து   வணங்கி   சந்திக்க  எண்ணம்   கொண்டார் .  அனால்   மாறாக   அவர்   எதிர்கொண்டு   வந்து   இவரை   அழைத்து   சென்றது   அவர்   மனத்தை   உறுத்திக்கொண்டே   இருந்தது .  இப்போது   சம்பந்தர்   திருஆரூரிலிருந்து   வரும்போது   தான்   சென்று   வரவேற்க   வேண்டுமென்ற   ஆவல்   அதிகமாக   இருந்தது .  அவ்வாறே   அவரை   தொண்டர்   குழாத்துடன்   சென்று   வரவேற்று   மகிழ்ந்தார் .   பிறகு   இருவரும்  சேர்ந்து   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு   திருவிழிமழலை   அடைந்தனர் .  விஷ்ணு   பகவான்   சக்ராயுதம்   பெற   வேண்டி   சிவபெருமானை   ஆயிரத்தெ ட்டு   மலர்கள்   கொண்டு   அர்ச்சனை   செய்தார் .  அவரை   சோதிக்க   எண்ணிய   எம்பிரான்   அதில்   ஒரு   மலரை   மறைத்தார் .  பூஜையை   பாதியில்   நிறுத்த   மனமில்லாத   பெருமான்   தன்   ஒரு   விழியை   எடுத்து   அர்ச்சிக்க   முற்பட்டார் .  ஐயன்   அவரை   தடுத்து   நிறுத்தி   அவருக்கு      சக்ராயுதத்தை   வழங்கினார் .  இதன்   காரணமாக   அவ்வூர்   திருவிழிமழலை   என்று   வழங்கலாயிற்று .

Wednesday 25 April 2018

மக்கள்   தம் மீது   காட்டிய   அன்பில்   நெகிழ்ந்து   போன   அப்பர் தேவாசிரிய   மண்டபத்தில்   அடியார்களை   தொழுது   பிறகு   உள்ளே   சென்று   ஆலயம்   வலம்   வந்தார் .  அவ்வாறு   தொழுது   வரும்கால்    நீரில்   விளக்கேற்றிய   நமிநந்தி   அடிகளையும்   பாடினார் .உழவார   பணி   செய்து   கொண்டு   இருக்கும்கால்   திருவாதிரை   பெருவிழா   திருநாள்   வந்தது .  விதிவிடங்க   பெருமான்   வீதிவலம்   வந்த   கண்கொளா   காட்சியை   தொண்டர்களுடன்   சேர்ந்து   கண்டு    களி ப்பெய்தினார் .   அங்கிருந்து   அவர்   திருப்புகலூர்   வந்தார்   அங்கு   முருகன்   அடியார்   க்ருஹத்தில்   ஞானசம்பந்தரை   சந்திக்க   நேர்கிறது .   சம்பந்தர்   ஆதிரை   விழாவை   பற்றி   அப்பரிடம்   வினவ   'முத்துவிதானம் '  என்ற   பதிகம்   பாடி   விளக்கினார் .  அதை   கேட்ட   சம்பந்தர்   தானும்   அவ்விழாவை   கண்டு   களிக்க   ஆவல்   கொண்டு   கிளம்பி   சென்றார் .

Tuesday 24 April 2018

அப்பூதி   அடிகள்   மகிழ்ச்சிக்கு   எல்லையே   இல்லை .  மகனை   உயிர்ப்பித்த   அப்பருடைய   பெருமை   அவரை    அவர்   மீது   கொண்டிருந்த   பக்தியை   இன்னும்   அதிகமாக்கியது .  அப்பரும்   மகிழ்ச்சியுடன்   அவர்களுடைய   இல்லத்தில்   அமுது   செய்து   விட்டு  திருப்பழனம்    திரும்பினார் .   அங்கு கோயில்   கொண்டிருக்கும்   ஆபத்சகாயபெருமானை    சேவித்து   'சொன்மாலை   பயில்கின்ற '  எனும்   பதிகம்   பாடி   அப்பூதி   அடிகளின்   பெருமையும்   குறிப்பிட்டு   அவரையும்   வாழ்த்தி   பாடினார் .  அங்கு   சிறிது   காலம்   தங்கிவிட்டு   மறுபடியும்   நல்லூர்   சென்றார் .  அங்கு   சிலகாலம்   தங்கி   பிறகு   தலயாத்திரை   புறப்பட்டார் .   சில   இடங்களை   தரிசித்த   பிறகு   திருவாரூர்   சென்றார் .  அங்கு    அவரை   வரவேற்க   ஏராளமான   பக்தர்கள்   கூடி   இருந்தனர் .  அவரை   பணிந்து   அழைத்து   சென்றனர் .

Saturday 21 April 2018

அப்பர்   நல்லூரில்   சில   நாட்கள்   தங்கிவிட்டு   திருப்பழனம்   புறப்பட்டு   சென்று   அங்குள்ள   ஈசனை   சேவித்துக்கொண்டு   பக்கத்திலுள்ள   திங்களூர்  செல்ல  எண்ணி   கிளம்பினார் .  வழியெல்லாம்   திருநாவுக்கரசர்   மடம் ,  அன்ன   விடுதிகள் ,  தண்ணீர்   பந்தல்   என   அத்தனை  தர்ம   கைங்கைர்யங்களும்   அவர்   பேராலேயே   இருப்பதை   கண்டு   வியப்பு   மிகுதியால்   அங்குள்ளவர்களை   வினவினார் .  அவர்கள்   அவ்வூரில்  அப்பூதி   அடிகள்   என்றொரு  சிவனடியார்   வாழ்வதாகவும்   அவர்   அப்பரடிகள்   மீது   அளவிலா   பக்தி   கொண்டவர்    என்றும்   அவரே   அவர்   பெயரில்   இத்தனை  தர்ம   காரியங்களும்   செய்வதாக   கூறினர்.  ஆச்சர்யம்   அடைந்த   அப்பர்   அவரை   காண   விரைந்தார் .  அப்பூதியடிகளும்   இவரை   வரவேற்க   வந்து   கொண்டிருந்தார் .  அப்பரை   கண்டதும்   அவரை   வணங்கி   அமுது   செய்ய   தமது  கிருஹத்திற்கு    அழைத்து   சென்றார் .  அப்பரும்   ஆலயம்   சென்று   வந்து   விடுவதாக   கூறி   சென்றார் .  அப்பூதி   அடிகளின்   மனைவி   அமுது   தயாரித்து   விட்டு   தன்   மகனை   வாழை   இலை   பறித்து   வர   அனுப்பினார் .   தோட்டத்தில்   பையனை   பாம்பு   தீண்டியது .  பையன்   இலையை   தாயிடம்   கொடுத்துவிட்டு   விஷம்   தலைக்கேறி   இறந்து   போனான் .  திரும்பி  வந்த   அப்பர்   தெய்வ   அருளால்   நடந்ததை   அறிந்து   அவர்கள்   மகனின்   உடலை   சுமந்து   கொண்டு   ஈசன்   முன்   கிடத்தி   மனமுருக  ' ஒன்று  கொலாம் '  எனும்   பதிகம்   பாடி   மனமுருக   வேண்டினார் .  ஆச்சர்ய தக்க   விதமாக   சிறுவன்   துக்கத்திலிருந்து   விழிப்பது   போல்   எழுந்து   வந்தான் .  பெற்றோர்களுக்கு   ஆனந்தம்   தாங்கவில்லை .  அப்பர்   நிகழ்த்திய   இந்த   அற்புதம்   எல்லோரையும்   மெய்சிலிர்க்க   வைத்தது .

Wednesday 18 April 2018

அப்பர்   பெருமானும்   திருக்கோலக்காவிலிருந்து   புறப்பட்டு   தன்   யாத்திரையை   தொடங்கினார் .  காவிரி   கரையோரத்திலுள்ள   அநேக   தலங்களை   தரிசித்து   அங்கு   குடிகொண்டிருக்கும்   பரம்பொருளை   பதிகங்களால்   பாடி   மகிழ்வித்து   பரமானந்தம்   எய்தினார் .  அவர்   அவ்வாறு   திருப்புன்கூர் , மயிலாடுதுறை , ஐயன்   அன்னையை   மணமுடிக்க   வேள்வி   நடத்திய   திருவேள்விக்குடி ,  திருஆவடுது றை ,  திருநாகேஸ்வரம்   முதலிய   தலங்கள்   சில . அவர்   சத்திமுற்றம்     திருக்கோவிலை   அடைந்து   சிவக்கொழுந்திஸ்வரரை   கண்டு   வணங்கும்போது   அவருக்கு  ஒரு   ஆவல்   தோன்றியது .  தாம்   வயது   முதிர்ந்து   சக்தி   இழந்து   போவதற்குமுன்   தன்   தலைமீது   ஐயனின்   திருவடி   சூட்ட  வேண்டுமென்ற   பேராவல் .  ஈசனிடம் குறையை     மனமுருக   வெளியிட்டார் .  தன்   பக்தர்களின்   குறை   தீர்ப்பதில்   என்றும்   தயங்காத   தயாளன்  அசரீரியாக   அப்பனே   நல்லூருக்கு   வா   என்று அழைப்பு   விடுத்தார் .  அப்பர்   புல்லரித்து   போனார் .  உடனே   நல்லூருக்கு   பயணமானார் .  ஆலயத்திற்கு   சென்று   வணங்கி   அந்த   சன்னதியிலேயே   ஈசன்   பாதம்   தன்   தலையில்   பதிவதை   உணர்ந்து   மெய்சிலிர்த்து   உள்ளம்  உருகி   கண்ணீர்   பெருக ; 'நினைந்துருக்கும்   அடியாரை '  எனும்    தாண்டகம்   பாடினார் .  நல்லுரை   விட்டு   நகர   கால்கள்   எழவில்லை .  சில   நாட்கள்   அங்கு   தங்கினார் . 

Monday 16 April 2018

சம்பந்தர்   தந்தைக்கு   சமமாக   நாவுக்கரசரை   மதித்தார் .  அப்பா   என்றால்   கூட   மரியாதை   குறைந்து   விடும்   என்ற  எண்ணத்தில்   அப்பர்   என்று   அழைத்து   அவரை   மரியாதையுடன்   வணங்கி   வரவேற்றார் .  அது   முதல்   அவருக்கு   அப்பர்   என்ற  பெயரே   நிலைத்தது .  கூடி   இருந்த   தொண்டர்களும்   மகிழ்ச்சி   ஆரவாரம்   செய்தனர் .  இருவரும்   தோணியப்பர்   ஆலயத்தை   அடைந்து    பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தனர் .   அப்பரை   சம்பந்தர்   தன்   மடத்திற்கு   அழைத்து   சென்று   அமுது   செய்வித்து   சிறிது   நேரம்   உரையாடினர் .  அப்போது   சம்பந்தர்   தாம்   காவிரி   கரையோரம்   எழுந்தருளி   கோவில்கொண்டிருக்கும்   இறைவனை   தொழது   ஆனந்தம்   எய்தியதை   சம்பந்தர்   விளக்கியதை   கேட்ட   அப்பருக்கும்   அவ்வாறு   யாத்திரை   செய்து   எம்பெருமானை   வணங்க   பெரும்   ஆவல்    ஏற்பட்டது .  சம்பந்தரும்   அதற்கு  சம்மதித்து   திருக்கோலக்கா   வரை   சென்று   அவரை   வழி   அனுப்பினார் .

Saturday 14 April 2018

ஆளுடை   பிள்ளையாரை   சந்திக்க   செல்வது   சாதாரணமா ?  தில்லை   விதிகளில்   வலமாக   புரண்டு   சென்றே   எல்லையை   அடைந்தார் .  பிறகு   காழியம்பதிக்கு   பயணமானார் .  சம்பந்த   பெருமானும்   புற   சமயத்தில்   வீழ்ந்த   வாகீசரை   ஐயன்   எத்தனை   சோதனைகளுக்கு   பின்   ஆட்கொண்டார்   என்ற   வரலாறை   அறிந்திருந்தார் . அத்தகைய   முதியவரை   சிறுவனான   தான்   சென்று   சந்திப்பதே   முறை   என்று   முடிவெடுத்து   தொண்டர்கள்   புடைசூழ   காழி   எல்லையில்   அவரை   வரவேற்க   சென்றார் .    அங்கு   வாகீசர்   காழிப்பிள்ளையை  வணங்க   குனிந்தவரை    தடுத்து   ' அப்பரே' என்று   அழைத்து   தழுவிக்கொண்டார் .    இருவரும்   பக்தி   வெள்ளத்தில்   மூழ்கினர் .  

Friday 13 April 2018

நாவுக்கரசர்    ஈசனின்   பெரும்   கருணையை   நினைத்து   மெய்சிலிர்த்து    போனார் .  மறுநாள்   அங்கிருந்து   புறப்பட்டு   மற்று ம்   பல   சிவாலயங்களை      தரிசித்து   பிறகு   தில்லையை   அடைந்தார் .  அங்கு   அவரை   தில்லை   வாழ்   அந்தணர்கள்   மிக்க   அன்புடன்   வரவேற்றனர் .  சில   நாட்கள்   அங்கு   தங்கி   பல   பதிகங்கள்   பாடி   அம்பலக்கூத்தனை   மகிழ்வித்தார் .  ஐயனும்   பெரும்   மகிழ்ச்சி  அடைந்தார் .  பக்கத்தில்   திருவேட்களம்   திருக்கழிப்பாலை   முதலிய   இடங்களுக்கு   சென்று   அங்கு   குடிகொண்டிருக்கும்   பரம்பொருளையும்   சேவித்து   கொண்டு   தில்லை   திரும்பினார் .  ஒருநாள்   திருக்கழுமலத்தில்   அன்னையிடம்   ஞான  பாலுண்டு   கவிபாட   தொடங்கிய  ஞானசம்பந்த   பெருமான்   தங்கி   இருப்பதாக   கேள்விப்பட்டார் .  அவரை   காண   பேராவல்   கொண்டவராய்   தில்லை   ஈசனிடம்   விடை   பெற்று   கொண்டு   அடியார்கள்   தொடர   காழியம்பதியை   நோக்கி   புறப்பட்டார் .

Thursday 12 April 2018

நாள்தோறும்   ஆலயத்தில்   தொண்டு   செய்தும்   எம்பெருமானை   வழிபட்டும்   வந்த   நாவுக்கரசருக்கு   மற்ற   சிவாலயங்களுக்கு   சென்று   அங்கும்   ஆலய   சேவை   செய்து   அங்குள்ள   ஈசனையும்   தொழுது   மகிழ   ஆவல்   கொண்டு   ஆலயங்களுக்கு   சென்று   பதிகம்   பாடி   மகிழ்ந்தார் .  அப்படியே   அவர்   தூங்கானை   மாடம்   எனும்   இடத்தை   அடைந்தார் .  அவர்   மனதில்   சிறிது   காலமாகவே   ஒரு   பெரும்   உறுத்தல்   இருந்து   வந்தது .   சிலகாலம்   சமணர்களோடு   உழைத்து   தூய்மை   இழந்த   இந்த   உடலோடு   ஐயனை   தொழ   அவர்   மனம்   ஒப்பவில்லை .   தன்   மனம்   பரிசுத்தமானது   போல்   உடலும்   தூய்மை   பெற   இச்சை   கொண்டார் .   தகாத   சேர்க்கையால்   மாசுபட்ட   உடல்   தூய்மை   பெற    தூங்கானை   மாட   ஈசனை   நோக்கி   'பொன்னார்   திருவடிக்கு   ஒன்றுண்டு   விண்ணப்பம்   போற்றி   செய்யும் '  'மின்னாரும்   மூவிலை   சூலமென்மேல்   பொறி '   என்னும்   விருத்தம்   பாட  சிவகணம்   ஒன்று   தோன்றி   அவருடைய   இரு   தோள்களிலும்   சூல   குறியும்   ரிஷப   குறியும்   யாரும்   அறியா  வண்ணம்   பொரித்தது .  நன்றி   பெருக்கால்   கண்ணீர்   சொரிந்தார்   நாவுக்கரசர் .  இதனை   அறியவந்த   மக்கள்   அவர்   பெருமையை   பேசி   கொண்டாடினர் .

Monday 9 April 2018

திருவதிகையை   அடைந்த நாவுக்கரசர்   அந்த  ஈசனை    உளமுருக   துதித்து   அவர்   மீது   பதிகங்கள்   பாடி   நன்றி   பெருக்கால்   கண்ணீர்   சொரிந்தார் .  மக்களும்   மெய்மறந்து   அதை   ரசித்தனர் .  இதனிடையே   பாதிரிபுலியூரில்   பத்திரமாக   கரையேறி   அதிகை   சென்று   தம்   உழவாரப்பணியில்   ஈடுபட்டார்   என்ற   செய்தி   அரசனுக்கு   எட்டியது .  நாவுக்கரசரின்   பெருமை   உணர்ந்தார் .  அப்போதே   அவருக்கு   சமணர்கள்   மீதிருந்த   பற்று   அறுந்தது .  தான்   அவருக்கு   இழைத்த   கொடுமைகளை   எண்ணி   வெட்கி   மிக   வருத்தம்   அடைந்தார் .   அவர்   காலில்   விழுந்து   மன்னிப்பு   கோர   அதிகை   விரைந்தார் .  அங்கு   நாவுக்கரசர்   சைவத்தின்   பெருமையை   உணர்த்த   ஐயன்   ஆடிய  திருவிளையாடல்   அதில்   அரசன்   ஒரு   கருவியே   என்று   கூறி   சமாதானம்   செய்தார் .  அரசன்   அவர்  காலடியில்   விழுந்து   வணங்கினார் .  பல்லவ   அரசன்   சமணர்களை   அடித்து   துரத்தி   விட்டு   அந்த   பள்ளிகளையும்   இடித்து   தள்ளினார் .  நிறைய   சிவாலயங்களை   எழுப்ப   துவங்கினார் .

Sunday 8 April 2018

தாய் பசுவை   பிரிந்த   கன்று   போல்   நாவுக்கரச ருக்கு  அதிகை   விரட்டானேஸ்வரரை   காண   உள்ளம்   துடித்தது .  தன்   நோயை   தீர்த்ததுடன்   தன்னை   இத்தனை   பேராபத்துகளிலிருந்தும்   காத்தருளி   ஒரு   தாய்க்கும்   மேலாக   தன்னை   காத்தருளிய   அந்த   ஈசனை   நினைந்து   நெக்குருகி   வீரட்டானம்   ஓடி வந்தார்.  அங்குள்ள   மக்கள்   நாவுக்கரசர்   சமணர்கள்   போதனையால்   பல்லவ   மன்னன்   எத்தகைய   கொடுமைகளுக்கு   ஆட்படுத்தப்பட்டார்   என்பதையும்   ஈசன்   அவரை  அத்தனை   கொடூரமான   தண்டனைகளிலிருந்தும்   அதிசயிக்க   வைக்கும்   வகையில்   எவ்வாறு   காத்து   அருளினார்   என்பதையும்   அறிந்து   இருந்தனர் .  அவர்கள்   அத்தகைய   பெருமை   வாய்ந்த   மகானை   தகுந்த   மரியாதையுடன்   வரவேற்க   மிக்க   ஆவல்   கொண்டு   மேளதாளங்களுடன்   மாலை   மரியாதையுடன்   விதிகளில்    ஊர்வலமாக   அழைத்து   சென்றனர் .

Thursday 5 April 2018

நாவுக்கரசரின்   இத்திடமான   ஈசனிடம்   கொண்ட   நம்பிக்கை   அவரை  இத்தனை   பேராபத்திலிருந்து   காப்பாற்றிய   அதிசயம்   பல்லவனை   சிறிது   கலக்கமடையவே   செய்தது .  அனால்   சமணர்கள்   விடுவதாக   இல்லை .  அவரை   பெரும்   பாறையில்  கட்டி    கடலில்   எறிய   செய்தனர் .  'சொற்றுணை    வேதியன்   சோதி   வானவன் '  எனும்   நமசிவாய   பதிகம்   பாட   அந்த   பாறையே   தோணியாகி   அவரை   திருப்பாப்புலியூர்   கரையில்   சேர்த்து .  நாவுக்கரசர்   நன்றி   பெருக்குடன்   அவ்வூர்   ஆலயத்தில்   ஐயனை   பதிகங்கள்   பாடி   மனமாற   தொழுது   மகிழ்ந்தார் .  பிறகு   சிவாலயங்களை   தொழ   பயணம்   புறப்பட்டார் .  மன்னனுக்கு   அப்போதுதான்   அவர்   மகிமை     விளங்கியது.   

Wednesday 4 April 2018

தலைநகரை   அடைந்ததும்   அரசன்   தகுந்த   தண்டனை   அளிக்க   திட்டமிட்டு   சமண   தலைவர்களை   யோசனை   கேட்டான் .   அவர்கள்   நாவுக்கரசரை   சுண்ணாம்பு   காள வாயில்   இடுமாறு   யோசனை   கூறினர்.   நாவுக்கரசர்   சிறிதும்   அஞ்சவில்லை   ஈசன்   தன்னை   காப்பான்   என்ற    முழு   நம்பிக்கை   அவரை   இத்தண்டனையை   கேட்ட   பிறகும்   சிறிதும்   அசரவைக்கவில்லை .    அவருக்கு   மனக்கண்ணில்   கண்டது   'ஈசன்   திருவடி  நிழலே '.  மாசில்   வீணையும்   மாலை   மதியமும்   வீசு   தென்றலும்' இவ்வாறு   அவர்   அனுபவித்து   பாடினார் .  ஆறு   நாட்கள்   பிறகு   திறந்தால்   அவர்   முன்பைவிட   பொலிவுடன்   வெளியே   வந்தார்   எல்லோருக்கும்    அதிர்ச்சி .  சமண   தலைவர்கள்   தங்களிடம்   கற்ற   பயிற்சிகளால்தான்   இவ்வாறு    வெளிவரமுடிந்தது   என்று   சொல்லி   விஷமிட   யோசனை   கூறினர் .  ஆலகால   விஷமுண்ட   ஐயன்   துணை   இருக்கும்போது   இந்த விஷம்   என்ன   செய்யும் .  அரசனுக்கு   அதிர்ச்சி .  ஆனால்   சமணர்கள்   விடுவதாக    இல்லை .  பட்டது   யானையை   விட்டு   அதன்   காலால்   இடற   செய்தனர் .  நாவுக்கரசர்  'சுண்ணவெண்    சந்தன   சாந்தும்   சுடர்   திங்கள்   சூளாமணியும் '  என்ற   பதிகம்   பாடி   அஞ்சுவது   யாதொன்றுமில்லை   என   பாட   யானை   மண்டியிட்டு   வணங்கி   சென்றது .

Tuesday 3 April 2018

தருமசேனர்   தங்களால்   எத்தனை   முயற்சி   செய்தும்   தீர்க்க   முடியாத   அவருடைய   சூலை   நோய்   இத்தனை   சிறிய   காலத்தில்   தீர்ந்து   அவரை   சைவத்திற்கு   மாற்றிய   அதிசயம்   சமணர்களை  பெரும்   பீதியில்   ஆழ்த்தியது .  மன்னருக்கு   செய்தி   எட்டி னால்   என்ன   நேரும்   என்ற   பயம்   அவர்களை   வாட்டியது .  அரசனுக்கு   செய்தி   எட்டுவதற்குள்   அரசனை   சந்தித்து   செய்தியை   தமக்கு   சாதகமாக   மாற்றி   அமைத்து   சொல்ல  நினைத்து   சிலர்கள்   ரகசியமாக   தலைநகர்   நோக்கி   சென்றனர் .அரசனிடம்   அவருக்கு   நோயே   இல்லை   என்றும்   நோயென்று   நாடகமாடி   தன்   தமக்கையாரிடம்   சென்று   திருநீறு   அவர்   நோயை   நீக்கி   விட்டது   என்று   நாடகமாடி   சைவத்திற்கு   மாறி   விட்டதாக   திரித்து   கூறி   அரசனை   நம்ப   வைத்தனர் .  அரசன்   கடும்   கோபமுற்று   என்ன   செய்யலாம்   என   யோசனை  கேட்டார் .  சமண   பெரியோர்களும்   அவருக்கு   கடும்   தண்டனை   அளிக்குமாறு   அரசனை   வேண்டினர் .  அரசனும்   சம்மதித்து  அமைச்சர்களை   அழைத்து   அவரை   சிறை   பிடித்து   வர   ஆணை   இட்டார் .  அமைச்சர்களும்   வீரட்டானம்   சென்று   அரச   கட்டளையை   தெரிவித்தனர் .  ஈசனை   தவிர   வேறு   யாருக்கும்   தான்   கட்டுப்பட   மாட்டேன்   என்றும்   அன்புக்கு   தான்   தான்   அடி   பணிவேன்   என்றும்   திடமாக   கூறி   'நாமார்க்கும்   குடியல்லோம்   நமனை   அஞ்சோம் '  எனும்   பதிகத்தை   பாடி   பதிலுரைத்தார் .  அமைச்சர்கள்   பயந்துபோய்   மரியாதையுடன்   தங்களுடன்   தலைநகர்   வர   வேண்டி   கேட்டனர் .

Monday 2 April 2018

இதனிடையில்   பாடலிபுரத்தில்   மறுநாள்   காலை   தருமசேனரை   காணாத   சமண   சீடர்கள்   பதறி   போயினர்   அவருடைய   பேரறிவு   காரணமாகவே   அந்த   பள்ளி   பல்லவ   மன்னனுடைய   பேராதரவு   பெற்று   வளர்ந்து   வந்தது .  அவர்   இல்லையென்றால்   மன்னனிடமிருந்து   மான்யம்   பெறுவது   கூட   அறிதே .  அவரை   தேடி   பார்த்து   எங்கும்   காணாமல்   அவர்   அறையில்  அவருடைய   உடை   களையப்பட்டு   கிடந்ததையும்   மற்ற   பொருள்களும்  கிடந்ததை   கண்டு   அவர்   நோயின்   கடுமை   தாங்காமல்   தன்   தமக்கையை  தேடி   தான்   சென்றுருக்க   வேண்டும்   என்று   ஊ கித்த னர் .  மதம்   மாறி   விட்டிருப்பாரோ   என்ற   ஐயமும்   எழுந்து   கலங்கி    போனார்கள் .  எல்லோரும்   அவரை   தேடி   வீரட்டானம்   வந்தனர் .  ஆனால்   அதற்குள்ளேயே   அவர்  கோலத்தை   கண்டு   திகைத்தனர் .  புத்தாடை   கட்டி   திருநீறு   பூசி   ருத்ராக்ஷம்   அணிந்து   உழவாரப்படையுடன்   ஆலயத்தை    தூய்மைப்படுத்தும்   கோலத்தில்   அவரை   கண்டதும்   காரியம்   கைமீறி   போய்விட்டதை   உணர்ந்து  பெரும்   திகைப்பில்   ஆழ்ந்தனர் .