Wednesday 12 July 2017

திண்ணனுக்கு   ஐயன்   மீது   அன்பு   அளவு   கடந்து   பெருக்கெடுத்து   ஓடியது .அந்தணர்   செய்த்து   ஈசனுக்கு   பிடித்தமானதாகத்தான்   இருக்க   வேண்டும்  என்று   முடிவெடுத்து   தானும்   அவ்வாறு   செய்ய   முடிவு   செய்தான் . அப்போது   அவனுக்கு   ஐயன்   பசியோடு   இருப்பான்   என்ற   நினைவு   வாட்டி   எடுத்தது .  உடனே   காடன்   தனக்காக   சமைத்து   வைத்திருக்கும்   பன்றி   மாமிசம்   நினைவுக்கு   வந்தது .. உடனே   ஒரே   ஓட்டமாக   காடன்   இருக்குமிடம்   வந்தான் .   நாணன்   அதற்குள்   திண்ணன்   நிலையை   சொல்கிறான் .  திண்ணன்   வேகவைத்த   மாமிச   துண்டங்களை   ருசித்து   எலும்பை   நீக்கி   துண்டங்களை   ஒரு   இலையில்   பத்திரப்படுத்துகிறான் .  மற்ற   இருவரும்   ஆச்சர்யமாக   பார்க்கிறார்கள் ..

Monday 10 July 2017

மலையை   நெருங்க   நெருங்க   திண்ணனின்   உள்ளத்தில்   இன்ப   உணர்வு   அதிகரித்து   கொண்டே   போனது .  மலை  உச்சியை   அடைந்து   அங்கு   ஒரு   மரத்தடியில்   லிங்க   வடிவில்   குடடுமித்தேவரை   கண்டு   அவன்   உடல்   சிலிர்த்தது .  கட்டி   அனைத்து   கண்ணீர்   சொரிந்தான் .  சுற்றிலும்   காடாக   இருப்பதை   கண்டு   உள்ளம்   பதறினான் .  இங்கேயா   தனியாக   எப்படி   இருக்கிறாய் ? என   மனம்  மிக   நொந்து   வினவினான் .  லிங்கத்தின்   சிரசில்   பூவும்   வில்வமும்  இருக்க   கண்டு   நாணனை   அதை   பற்றி   வினவினான் . நாணன்   முன்பு   திண்ணனின்   தந்தையுடன்   தான்   வந்த   போது   ஒரு   பெரியவர்   லிங்கத்தை   நீரால்   அபிஷேகம்   செய்து   மலர்களை   வைத்ததாக   கூறினான் .  திண்ணன்   ஒரு    வேளை   அதுதான்   சரியான   முறையாக   இருக்க   வேண்டும்   என்று   எண்ணி   தானும்   அவ்வாறே   செய்ய   எண்ணினான் 

Thursday 6 July 2017

திண்ணன்   ஓய்வெடுக்க   விரும்பி   நண்பர்களை   அழைத்து  தான்   பன்றியை   சமைத்து   உணவு   தயாரித்து   உண்பதற்க்கு   ஏற்ற   நீர்   வசதி   உள்ள   இடம்   எங்கு   இருக்குமென   வினவினான் . நாணன்   பக்கத்தில்   பொன்முகலி   நதி   ஓ டுவதாகவும்   அங்கு   செல்லலாம்   என்று கூறினான்.   மூவரும்   பன்றியை   சுமந்து   கொண்டு   ஆற்றங்கரையை   நெருங்கினர் .  திண்ணன்   ஆற்றின்   மறுபக்கம்   இருந்த   குன்றை   கண்டு   விவரிக்க   முடியாத   உணர்ச்சிக்கு   ஆளானான் .  அவன்   நாணனை   கூப்பிட்டு  குன்றை   காட்டி   அதை   பற்றி   கேட்டான் .  நாணன்   அது   காளத்தி   மலை   என்றும்   அக்குன்றின்   மேல்   குடுமித்தேவர்   வாசம்   செய்வதாகவும்   கூறினான் . அக்குன்றை   கண்ட   திண்ணன்   மேனி   சிலிர்க்க   கண்டான் .  தான்   புது   மனிதனாக   மாறி   விட்டது   போல்   உணர்ந்தான் . நாணனை   கூப்பிட்டு    தன்னை   அங்கு   அழைத்து   செல்லுமாறு   கேட்டுக்கொண்டான் .  கா டனை   பன்றியை   சமைக்க   சொல்லி விட்டு   நாணனும்    திண்ணனும்   ஆற்றை   கடந்து   அம்மலையை   நோக்கி   சென்றனர் .

Monday 3 July 2017

அந்த   பன்றி  வெகு   தூரம்   ஓடி   அலைக்கழித்தது .  திண்ணனும்  அதை   துரத்தியபடி   தன்   கூட்டத்தை   விட்டு   வெகு   தூரம்   வந்து   விட்டான் . சிறிது   நேரத்தில்   பன்றி   களைத்துப்போய்   நின்று   விட்டது .  திண்ணன்   அதை   அம்பை   எய்து   கொல்ல  விரும்பாமல்   தன்   குத்துவாளால்   அதை   எதிர்த்து   போராடி   கொன்றான் .  அவனுடன்   வந்த   இரு   நண்பர்களும்   அவனை   வெகுவாக   பாராட்டினார்கள் .  களைத்து   போன   மூவரும்   ஓய்வெடுக்க   விரும்பினார் .