Tuesday 25 November 2014

navukarasar

நாவுக்கரசர்   தன்  அந்த பாவ  உடலுடன்  ஈசனை  நெருங்கவே  கூசினார் . தன்னை  தூய்மை  படுத்திக்கொள்ள  ஈசனின்  மூவிலை  சூலத்தை  தன்  உடலில்  பொறித்துக்கொள்ள  விரும்பினார் . அவர்   திருதூங்கானை மாடம்  எனும்  திருத்தலத்தை  அடைந்து  இப்பதிகம்  பாடுகிறார் .
 பொன்னார்  திருவடிக்கு  ஒன்றுண்டு  விண்ணப்பம்  போற்றி  செய்யும்
என்னாவி காப்பதற்கு  இச்சை யுண்டேல்  இருங்கூற்றகல
மின்னாரும்மூவிலை  சூலமென் மேற்பொறி ,மேவு கொண்டல்
துன்னார்  கடந்தையுள்  தூங்கானை மாட  சுடர் கொழுந்தே .
இப்பதிகம்  பாடியவுடன்    ஐயனின்    சன்னதியிலிருந்து  கிளம்பி  வந்து  நாவுக்கரசரின்  கையில்  மூவிலை  சூலம்  தன்  உருவை  பதித்து  சென்றது . திருநாவுக்கரசர்  பெரிதும்  மன  அமைதி  அடைந்தார் .

Monday 24 November 2014

thoonganaimadam

நாவுக்கரசர்  இவ்வாறு  சிவத்தில்  மூழ்கி  இருந்தாலும்  அவர்  மனத்தில்  ஒரு  நெருடல்  இருந்துகொண்டே  இருந்தது . 'வேதவேள்வியை  நிந்தனை ' செய்தும்  சிவநிந்தனை  செய்தும்  வாழ்ந்த  சமணர்களுடன்  தான்  அத்தனை   காலம்  துணையாக  இருந்ததை  நினைத்து  அவர்  உடலும்  உள்ளமும்  பெரும்  வேதனை  கொண்டது  . தன்னை  தூய்மை  படுத்திக்கொள்ள  துடித்தார் . 

Wednesday 19 November 2014

angamalai

நாவுக்கரசர்  தன்  பக்தி  பயணத்தை  தொடர்கிறார் . அவர்  பாடிய அங்கமாலை  மனித பிறவி  எடுத்ததன்  பயனை  விளக்குகிறது . நமது  ஒவ்வொரு  அங்கமும்  படைக்கப்பட்ட  பயனை  கூறுகிறார் . தலையே  நீ  வணங்காய்  என்று  தொடங்கி , கடல் நஞ்சுண்ட  கண்டனை  காண    கண்கள் , எரிபோல்  மேனி  பிரான்  திறன்  கேட்க  செவிகள்  இவ்வாறே  கைகாள்  கூப்பி தொழீர் , அரன்  கோயில்  வலம்வர  கால்கள்  இவ்வாறே  சொல்லி ,உற்றார்  யார்  உளர்  உயிர்  கொண்டு  போகும்போது குற்றா லதுறை  கூத்தனல்லால்  என்று  வினவுகிறார் ,கடைசியாக  அவர் பாடுகிறார்
தேடி  கண்டுகொண்டேன்  திருமாலொடு  நான்முகனும்
தேடி  தேடொணா  தேவனை  என்னுள்ளே ///
பெரும் வேத தத்துவத்தை  அவர்  ஒரே  வரியில்  விவரித்து  விடுகிறார் . தன ஆன்மா  வேறல்ல  சிவம்  வேறல்ல  என்னும்  பெரும்  தத்துவத்தை  அதில்  அடக்கிவிட்டார் .    

angamalai

இத்தனை  சோதனைகளையும்  வெற்றிகரமாக  சந்தித்து  பின்  சமணர்களையும்  வாதில் வென்று  மன்னரின்  மனதில்  பெரும்  மாற்றத்தை  உண்டாக்குகிறார் . பல்லவ மன்னன்  மிக  வருந்தி  நாவுக்கரசரை  குருவாக  ஏற்று கொள்கிறார் . தன்  பாவத்திற்கு  பிராயச்சித்தமாக  தொண்டை  மண்டலத்தில்  நிறைய  சிவ  விஷ்ணு  ஆலயங்களை  எழுப்புகிறார் . நாவுக்கரசரை  ஈசனுக்கு  சமமாகவே   மதிக்கிறார் .   

Monday 17 November 2014

masil

பட்டத்து  யானையை  விட்டு  அவரை மிதிக்க  ஏவுகிறான் . அவர்
சுண்ண  வெண்ணீர்  அணி  சாந்தும்  சுடர்  திங்கள்  சூளாமணீயும்
என்னும்  பாடலால்  ஐயனை  வருணித்து  இத்தனை யும் 'யுடையார்  தமர்  நாம் '
அஞ்சுவது  யாதொன்றும்  இல்லை  அஞ்ச  வருவதும்  இல்லை '
என்று  பாட  பட்டத்து  யானை  அவரை  வல ம் வந்து  வணங்கி  செல்கிறது .
மன்னன்  அவரை  சுண்ணாம் பு  காளவாயில்  இட   ஆணை  இ டுகிறான்
 மாசில்  வீணையும்  மாலை  மதியமும்
வீசு  தென்றலும்  வீங்கிளவேனிலும்
போன்ற  ஈசன்  இணையடி  நிழல்   கண்ட  அனுபவத்தை  பாடுகிறார் . அவரில்  எவ்வித  துன்ப  சாயலே  காணப்பட வில்லை . 

appar

நாவுக்கரசரை  கொல்வதற் கு மன்னனால் பல  முயற்சிகள்   செய்யப்படுகிறது .  

Sunday 16 November 2014

namasivaya

நாவுக்கரசர்  சைவத்திற்கு  மாறியதை  அறிந்த  மகேந்திர  பல்லவனும்   சமணர்களும்  பெரும் ஆத்திரமடைந்தனர் . சமணர்கள் நாவுக்கரசரை  கொல் வதற் கு மன்னருடன்  பல  வகைகளில்  முயற்சி   செய்தனர் .  நாவுக்கரசரால்  இடைவிடாமல்  நம்பிக்கையுடன்  ஓதப்பட்ட  நமசிவாய  மந்திரம் அவரை தொடர்ந்து  காத்தது . அவரை  பெரும் பாறையில்  கட்டி  கடலில்  வீசுகின்றனர்   அந்த பாறையே  தோணி  போலாகி  அவரை  கரை  சேர்க்கிறது .
  சொற்றுணை  வேதியன்  சோதி  வானவன்
 பொற்றுணை  திருந்தடி  பொருந்தக் கைதொழா
கற்றுணை  பூட்டியொர்  கடலில்  பாய்ச்சினும்
 நற்துணை  ஆவது  நமசிவாயவே .



          

Monday 10 November 2014

kuutraayina

சமண  தலைவனாக  மாறியிருந்த  மருள்நீக்கியார்  தன்  தமக்கையின்  காலடியில்  சரண்  அடைகிறார் . திலகவதியார்  தம்பியின்  நிலை  கண்டு  மிக வருந்தி  அவருக்கு  திருநீரை  பூசி  திருவீரட்டான  ஈசனை  சரண்  அடைய   செய்கிறார் . ஈசனும்  மனமிரங்கி  வாகீசா  என்று   அவரை  தன்  மீது  பாடுமாறு   அழைக்கிறார் . அது வரை  பாடி  அறியாத  வாகீசர்  பக்தி  பெருக்கெடுத்து  பாட  தொடங்குகிறார் . தன்  தமக்கையாரை  பின்பற்றி  உழவாரப்பணி  தொடங்குகிறார் . கண்
ணப்ப  நாயனாரைபோல்  இவரும்  ஈசனால்  பெயரிடப்படும்  பேறு  பெறுகிறார் . இவர்  பாடிய  எண்ணிறந்த  பாடல்களில்  நாம்  சில  பாடல்களே  கிடைக்கப்பெற்றோம் . இவருடைய  முதல்  பாடல்  இவரது  பிணி  நீக்கிய  பாடல் .
கூற்றாயினவாறு  விலக்ககிலீர்
   கொடுமை  பலசெய்தன  நானறியேன்
ஏற்றாயடிக்கே  இரவும்  பகலும்
    பிரியாது  வணங்குவன் எப் பொழுதும் 

Thursday 6 November 2014

appar

திலகவதியார்  தன்  தம்பி  சமண  சமயத்தில்  சேர்ந்ததை  அறிந்து  மிக்க  வேதனை  உற்றார் . திருவதிகை  வீரட்டான  ஈசனை  துதித்து  மிக  வருந்தினார் . அவள்  வருத்தப்படுவதை  காண  சகியாத  ஈசன்  மருள்நீக்கியாருக்கு  கடும்  சூலை  நோயை  கொடுத்தார் . நோயின்  கொடுமை  தாங்கமாட்டாமல்  மருள்நீக்கியார்  மிக  அவதிக்குள்ளானார் . சமணர்களால்  அவரை  குணப்படு த்த  இயலவில்லை .அப்போதுதான்  மருள்நீக்கியாருக்கு  தன அக்காவுக்கு  தான்  செய்த  கொடுமை  புரிந்து  மிக  வருந்துகிறார் . சமணர்களுக்கு  தெரியாமல்  திருவதிகை  வீரட்டானம்   தன அக்காவை  தேடி  வருகிறார் 

Monday 3 November 2014

appar

திலகவதியார்  திருமணம்  ஆகவில்லை  என்றாலும்  அவரை  கணவராக  வரிதுவிட்டதால்  அவர் மறைவுக்குப்பின்  வாழ  விரும்பாமல்  தீக்குளிக்க  எண்ணினார் . சிறுவன்  மருள்நீக்கியான்  திலகவதியார்   உயிர்  நீத்தால்  தான்  அநாதை  ஆகிவிடுவேன்   என்று  கதற  மனமிரங்கி  துறவு  வாழ்க்கை ஏற்று  வாழ  தொடங்கினார் . இச்சம்பவத்தால்  மிக  பாதிப்படைந்த  சிறுவன்  சிவ பெருமானை  வெறுக்க  தொடங்கினான் .திலகவதியாரோ  சிவத்தொண்டே இலட்சியமாக  கொண்டவர் . அவருடன்  வாழ  சிறுவனால்  முடியாததால்  அவன் வீட்டை  விட்டு  ஓடி  விடுகறான் . வளர்ந்து அவன்  சமண  மதத்தை  ஏற்று  பல்லவ  மன்னன்  மகேந்த்ரனிடம்   சேர்ந்து  விடுகிறான் .