Sunday 30 September 2018

ஈசனின்   லீலை .  மனைவி   தண்ணீர்   எடுத்து   வருவதற்குள்   அவர்   அங்கேயே   படுத்து   உறங்கி   விட்டார் .   அவர்   கனவில்   ஐயன்   தோன்றி   'நமிநந்தி   ஆரூரில்   பிறந்த   அனைவரும்   நம்   கணங்கள்   என்பதை   எவ்வாறு   மறந்தாய் ?  நாளை        ஆரூரில்   அதை   காண்பாய் '  என்று   சொல்லி   மறைந்தார் .    தன்   தவறை   உணர்ந்த   அடிகளார்   பிராயச்சித்தத்தை   மறந்து   காலையில்        எழுந்து   ஸ்நானம்   செய்து   மனைவியுடன்   திருவாரூர்     கிளம்பி   சென்றார் .  அங்கு   நடமாடும்   அத்தனை   பேரும்   சிவஸ்வரூபமாக   காட்சி  அளித்தனர் .  ஒரு   கணம்   அக்காட்சியால்   மெயசிலிர்த்து    ஆரூர்  வீதியில்   விழுந்து   வணங்கினார் .  அவர்   எழுந்தபோது   அக்காட்சி   மறைந்து   எல்லோரும்   சாதாரண   மனிதர்களாக   மாறி   இருந்தனர் .   இறைவனின்   திருவருளை   எண்ணி   பரவசமடைந்து   தன்   அறியாமையை   குறித்து   வெட்கித்து   தன்   பிழையை   பொருத்தருளுமாறு      ஈசனை   மனமாற   பிரார்த்தித்தார் .  அதன்   பிறகு   ஆரூரையே   இருப்பிடமாக   கொண்டு   தன்   தெய்வீக   சேவையை   விடாது  நடத்தி   ஈசன்   அடி   சேர்ந்தார் .  அப்பர்   பெருமான்   இவர்   சேவையை   போற்றி   இருக்கிறார் 

Saturday 29 September 2018

இவ்வாறு   நமிநந்தி   அடிகள்   மனநிறைவோடு   சேவை   செய்து   வருகையில்   பங்குனி   உத்திரம்   மஹோத்சவ   திருநாள்   வந்தது .  வீதிவிடங்கர்   வீதி   உலா   சென்று   மக்களை   ஆனந்தமயமாக்கும்   பெரு   விழா.  அன்று   ஐயன்   ஊர்வலம்   மணலூர்   வரை   சென்று   திரும்புவார் .  அடிகளாரும்   உடன்   சென்று   திரும்பினார் .    எம்பெருமான்   கோயில்   திரும்பியதும்   நமிநந்தி   அடிகள்   வீடு   திருப்பினார் .  திரும்பியவர்   வீட்டில்   நுழையாமல்   புறக்கடை   பக்கம்   சென்று   மனைவியை   அழைத்தார் .  அவளிடம்   தான்   ஐயனுடன்   மணலூர்  வரை   சென்றதால்   வழியில்   பலர்   மீது   பட்டு   தீட்டு   ஏற்பட்டிருக்கும் .   ஆகையால்   பிராயச்சித்தம்   செய்ய   ஜலம்   கொண்டு    வரும்படி   ஆணை   இட்டார் .      சிவன டியார்களில்   பேதம்   பார்ப்பதை   விரும்பாத   ஆரூர்ப்பெருமான்   அடிகளுக்கு   அதை   உணர்த்த   விரும்பினார் 

Thursday 27 September 2018

அன்று  முதல்   நமிநந்தி   அடிகள்      தினமும்   ஆலயம்   முழுவதும்  நீரில்   விளக்கேற்றி   மகிழ்ந்தார் .  அவர்   பெருமையை   மக்கள்   வெகுவாக   புகழ்ந்து    அவரை   வணங்கினர்  இவ்வாறு    இருக்கையில்     தண்டியடிகள்    என்பவரின்   பெரும்   முயற்சியால்   ஆரூரிலிருந்து   சமணர்கள்   விரட்டப்பட்டனர் .  சைவர்கள்   மிக்க   மகிழ்ச்சியுடன்   ஆரூர்   ஈசனை   வழிப்பட்டனர் .    அடிகளும்   தம்   தெய்வத்தொண்டுகளை   குறைவின்றி   செய்து   வந்தார் .  இவரை  பற்றி   கேள்விப்பட்ட    சோழ  மன்னனும்   அடிகளை   தியாகராஜர்   திருக்கோயில்   திருப்பணிகள்   எல்லாம்   செய்ய   தலைமை   தாங்கி   நடத்தும்   பொறுப்பை   ஏற்க்க   செய்தார்     .  அவரும்   அப்பொறுப்புகளை   பக்தியுடன்   ஏற்று   குறைவின்றி   நடத்தி   வந்தார் .

Tuesday 25 September 2018

ஒரு   நாள்   திருவாரூரில்   மாலை   வீதிவிடங்கர்   ஆலயத்தை   சுற்றி   வரும்போது   சில   சந்நிதிகளில்   விளக்கு   எரியாமல்   இருந்தது.  அது   கண்ட   நமிநந்தி   அடிகள்   விளக்கேற்ற   நினைத்தார் .  எண்ணெய்   தேடி   பக்கத்திலுள்ள   வீட்டிற்கு   சென்று   விளக்கேற்ற   எண்ணெய்   கேட்டார் .  அது   சமணர்     வாழும்   வீடு .  சிவபெருமான்   ஆலயத்திற்கு   தீபமேற்ற   எண்ணெய்   கேட்டது   மிக   கோபத்தை   உண்டாக்கியது .   ஏளனமாக   கையில்   அனலேந்தும்   ஈசன் அவர்   ஆலயத்திற்கு   தீபம்   ஏற்ற   நீர்   போதுமே   என்று  பரிகாசமாக    வினவினர்.  மிக்க   வேதனையும்   அவமானமும்   அடைந்து   ஆலயம்   திரும்பி  மன   உளைச்சலுடன்   இருந்தார் நமிநந்தியடிகள்  .  பக்தனின்   மன வருத்தம்    கண்டு   பொறுக்காத   ஈசன்   அவருக்கு   குளத்து   நீரை   ஊற்றி   விளக்கேற்றுமாறு   அசரீரியாக   அறிவுறுத்தினார் .  மகிழ்ச்சி   அடைந்த   நம்நந்திகள்   ஒரு   செம்பில்   நீர்   எடுத்து   வந்து   விளக்கேற்ற   விளக்கு   பிரகாசமாக   எரிவது   கண்டு   மட்டற்ற   மகிழ்ச்சி   அடைந்து   கோயில்   முழுவதும்   தண்ணீர்   விளக்கேற்றி   பெரும்   ஆனந்தம்   அடைந்தார் .

Friday 21 September 2018

அருநம்பி   நமிநந்தி   அடியார்க்கும்   அடியேன் |

சோழ  நாட்டில்     திருவாரூருக்கு   அருகே ஏமப்பேறு   என்றொரு   தலம்.  அங்கு   நமிநந்தி   அடிகள்   என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   அவ்வூரில்   குடிகொண்டிருக்கும்   புற்றிடம்   கொண்ட   பெருமானிடம்   மிக்க   பக்தி   கொண்டவர் .  சிறந்த   சிவபக்தர் .   தினமும்  விடியற்காலை    எழுந்து   நீராடி   பூஜை   முடிந்ததும்   திருவாரூருக்கு   சென்று    ஆலயத்தில்   காலை   முதல்  மாலைவரை  இருந்து   எம்பெருமானை   வணங்கிவிட்டு   திருத்தொண்டுகள்   புரிவார்.  மாலை   அபிஷேகம்   முடிந்ததும்தான்   வீடு   திரும்புவார் .  இவ்வாறு    நாள்தோறும்   தொண்டு   செய்து   வந்தார் .

Wednesday 12 September 2018

  சம்பந்தப்பெருமான்   சாத்தமங்கையை   விட்டு   செல்லுகையில்   நீ லநக்கருக்கு   அங்கு   இருந்து   கொண்டு   இனிதாக   இல்லறம்    நடத்திக்கொண்டு   சிவபெருமானுக்கும்   சிவத்தொண்டர்களுக்கும்   இனிய   சேவைகளை   செய்துகொண்டு   வாழும்படி   ஆணை   இட்டு   சென்றார் .  அவரும்   அவ்வாறே   நடந்து   தம்பதிகள்   தங்கள்   கடமைகளை   தொடர்ந்து   செய்து   கொண்டு   இனிதே  வாழ்ந்து   வந்தனர்   இப்படி   இருக்கையில்  ஒருநாள்   சம்பந்தப்பெருமானுக்கு   திருமணம்   என்று   அழைப்பு   வர   தம்பதிகள்   அத்திருமணத்தில்   கலந்து   கொண்டு   சம்பந்தருடன்   ஜோதியில்   கலந்து   கொண்டு   சிவத்தில்   ஐக்கியமானார்கள்      

Monday 10 September 2018

தம்பதிகள்   தொடர்ந்து   தங்கள்   தெய்வீக   பணிகளை   செய்து   கொண்டு   மகிழ்ச்சியாக    இல்ல.றம்   நடத்தி     கொண்டிருந்தனர் .  அப்போது   ஞானசம்பந்தர்     தொண்டர்களுடன்   அங்கு   எழுந்தருளினார் .   தம்பதிகள்   மிக்க   மகிழ்ச்சியுடன்   அவர்களை         உபசரித்து   அமுது   செய்வித்து   மகிழ்ந்தனர் .   நீலநக்கர்   அவர்களை   இரவு   தங்கிவிட்டு   மறுநாள்   செல்லும்படி   கேட்டுக்கொண்டார் .  சம்பந்தபெருமான்    நிலநக்கர்   பெருமையை   நிறைய   கேள்விப்பட்டிருந்தார் .   ஆதலால்   அவர்   பெருமையை   மேலும்   எடுத்துக்காட்ட   எண்ணம்   கொண்டார் .  ஆகையால்   அவர்   என்னைப்பற்றி  கவலை   வேண்டாம் .  என்னுடன்   அடியார்   ஒருவர்   வந்துள்ளார்.  நீலகண்ட   பெரும்பாணரும்   அவர்   மனைவி   விறலியாரும்   என்னுடன்   வந்துள்ளனர் .  அவர்களுக்கு   இரவு   தங்க   இடம்   கொடுங்கள்   என்று   கேட்டுக்கொண்டார் .    நீலநக்கர்   மகிழ்ச்சியோடு   அவ்விருவரையும்   சுடர்விட்டெரியும்   குண்டத்து   அருகிலேயே     அவர்கள்   படுக்க   இடமளித்தார்     கு  ண்டத்தில்   எரிந்த   தீ   அவர்கள்   நெருங்கியதும்   ஒதுங்கி   வலம்வந்து   எரிந்தது .    கூடி   எல்லோரும்   நீலகண்டர்     தாழ்ந்த  வகுப்பில்    பிறந்தவரானாலும்   தான்   வணங்கும்   இறைவனுக்கு    சமமாக   பாவித்த   நிலநக்கரை   வெகுவாக   கொண்டாடினார்கள் .

Friday 7 September 2018

ஈசன்   நீலநக்கர்   கனவில்   இவ்வாறு   இவர்   மனைவி   பெருமையை   எடுத்து   கூறி   மறைந்தார் .   திடுக்கிட்டு   எழுந்த   நீலநக்கர்   தம்  மனைவி   பெருமையை   உணர்ந்தார் .  ஆறு  காலமும்   விடாமல்   தாம்   செய்யும்   பூஜையைவிட    தாய் பாசத்தோடு   தம்   மனைவி   செய்த   அச்சேவை   உயர்வாக  மதித்த   ஈசனின்   அன்பு   உள்ளத்தை   கண்டு   நெகிழ்ந்து   போனார் .  உடனே   மனைவியை   காண   துடித்தார் .  பொழுது   விடிந்ததும்   மனைவியை   காண   கோவிலுக்கு    சென்று   கனவில்   ஐயன்   தோன்றி   கூறியதை   மனைவியிடம்   சொல்லி   மகிழ்ந்து   அவளை    வீட்டிற்கு   மகிழ்ச்சியுடன்   அழைத்து   சென்றார் .

Thursday 6 September 2018

கணவனின்   கோபத்தை   கண்டு   மிரண்டு   அம்மையார்   வீடு   செல்லவில்லை .  அவர்   சொல்லை   மீறி   வீடு   செல்ல   அந்த   கற்புக்கரசியின்   மனம்   இடம்   தரவில்லை .  இறைவனிடம்   முறை   இடுவது   தவிர   வேறு   வழி   தெரியவில்லை .  "இறைவா   இது   என்ன   சோதனை?  நான்   ஒரு   தவறும்   செய்யவில்லையே .    என்   குழந்தையாக   பாவிக்கும்   உன்   மீது   அந்த   சிலந்தி   விழுந்ததை   என்னால்   தாங்க   முடியாமல்   அன்றோ   அவ்வாறு   செய்தேன்.  எனக்கு   ஏன்   இப்பெரும்   தண்ட  னை ?"  என்று   புலம்பி   கொண்டு   ஆலயத்திலேயே   தங்கிவிட்டாள் .   வீடு   சென்ற   நிலநக்கருக்கு   மனம்   அலை   பாய்ந்தது .  ஊண்   உறக்கமின்றி   தவித்தார் .  தன்   மனைவி   இவ்வாறு   ஐயனை   எச்சிலால்   அசுத்தம்   செய்து   விட்டாளே   என்ற   எண்ணம்   அவரை   அலைக்கழித்தது .  பட்டினி   கிடந்தார் .   அவர்   தூக்கத்தில்   அய்யாவந்திநாதர்   அப்பனே   என்று   கூப்பிட்டார் .  மானும்   மழுவும்    தாங்கி   நின்ற   ஐயனை   கண்ட   நீலநக்கர்   திடுக்கிட்டார் .  அவர்   உடலெங்கும்   கொப்புளங்கள் .   ஈசன்   அப்பனே   பார் .  உடலெங்கும்   கொப்புளங்கள் .   உன்   மனைவி  அன்பு  மிகுதியால்   ஊதி   சிலந்தியை   விரட்டியதால்  என்   நெற்றி   மட்டும்   சிலந்திக்கு   தப்பியது  என்றார் .

Wednesday 5 September 2018

இவ்வாறு   அன்னியோன்னியமாக   தம்பதிகள்   வாழ்ந்து   வந்தனர் .  ஒரு  நாள்   மாலை   இருவரும்   அய்யவந்திநாதரை   சேவிக்க   ஆலயம்   சென்றனர் .  நிலநக்கர்   எம்பெருமானை   மலர்களால்   அர்ச்சித்து   பிறகு   எதிரில்   அமர்ந்து   பஞ்சாக்ஷரம்   ஜபிக்கலானார் .  மனைவி   பக்கத்தில்   நின்று   கொண்டு   எம்பெருமானை   சேவிக்கலானார் .  அப்போது  கர்பகிருகத்தின்   மேல்   சுவரிலிருந்து   சிலந்தி   ஒன்று   லிங்கத்திருமேனி   மீது   விழுந்து   அங்கும்   இங்கும்   ஓடலாயிற்று .  அதை   கவனித்த   அம்மையார்   ஒரு   தாய்க்கு   உரிய   கவலையுடன்   பக்கத்தில்   சென்று   வாயால்   ஊதி   சிலந்தியை   விரட்டினார் .  அதை   கவனித்த   நிலநக்கர்   மிக்க   கோபம்   கொண்டவராய்   ஐயன்   மேனியில்   எச்சில்   படும்படியாக   ஊதியதை    சகிக்கமாட்டாமல்   என்ன   காரியம்   செய்தாய்   இவ்வாறு   ஐயன்   திருமேனியை   அசுத்தம்   செய்ததை   பொறுக்க   முடியாது .  இனி   என்   முன்  நிற்காதே   போய்விடு.  இனி   உனக்கு   என்  வீட்டில்   இடமில்லை . என்று   கோபத்துடன்   கூறிவிட்டு   அவர்  வீட்டிற்கு   சென்று   விட்டார் .

Monday 3 September 2018

ஒலிபுனல்சூழ்   சாத்தமங்கை   நிலநக்கர்க்கு   அடியேன் |

சோழ   நாட்டிலே  சாத்தமங்கை   என்றொரு   தலம்   அங்கு   கோயில்   கொண்டிருக்கும்   ஐயன்   அய்யவந்திநாதர் .  அவ்வூரிலே    நீலநக்கர்     என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்   அக்கினிஹோத்திரம்   செய்ய     தவறாதவர் . அவர்   வீட்டில்   எப்பொழுதும்   அக்நி   சுடர்   பிரகாசித்து   கொண்டே   இருக்கும் .  அவருக்கு   சிவன்   மீதுள்ள   பக்தி   போல்   சிவனடியார்கள்   மீதும்   மிகுந்த   பக்தி .  அடியார்களுக்கு   அமுது   படைப்பதில்   எல்லையில்லா   ஆனந்தம்   அடைவார் .  அவர்   மனைவியும்   அவருக்கு   உறுதுணையாக   இருந்தார்