Wednesday 29 October 2014

appar

அடுத்த  3 திருமுறைகள்  சம்பந்தரால்  அப்பர்  என்று  பணியன்புடன்  அழைக்கப்பட்டவரும்  வீரட்டானத்துறை  ஈசனால்  நாவுக்கரசர்  என்று  பெயர்  சுட்டப்பட்டவருமான   அப்பர்  பெருமானால்  பாடப்பட்டவை . அவருடைய  இயற்பெயர்  மருண்னீக்கியர் . அவர்  சிறந்த  சிவ பக்தர்கள்
குடும்பத்தில்  பிறந்தவர் . அவருடைய  தமக்கையார்  திலகவதி  அம்மையார்  சிறந்த  சிவத்தொ ண்டர் . மருள்நீக்கியார்   சிறுவனாக  இருக்கும் போது திலகவதிக்கு  அவ்வூர்  சேனை  தலைவருடன்  திருமணம்   நிச்சயமானது . ஆனால்  துரதிஷ்டவசமாக  அவர்  திருமணத்திற்கு  முன்பே  போரில்  உயிர்துறந்தார் .

Saturday 18 October 2014

kadalaagi

சம்பந்தர்   16 வயதை  அடைந்த  போது  அவருடைய  பெற்றோர்  அவருக்கு  திருமணம்  செய்ய  விரும்பினர் . பெற்றோர்  இச்சையை  பூர்த்தி  செய்ய  சம்மதிக்கிறார் .பூஉலகில்  தன்  கடமை  முடிந்தது  தெரிந்தும்  சம்மதம்  தெரிவிக்கிறார் .திரு நல்லூர் பெருமணம்  என்னும்  இடத்தில்  திருமணம்  நடக்கிறது .திருமண  சடங்கு  முடியும்  தருவாயில்  அங்கு  பெரும் ஜோதி  தோன்றுகிறது . அந்த ஜோதியில்  திருமண த்தில்  கலந்து  கொண்ட  அனைவரும்  கலந்து  சிவபதம்  அடைகின்றனர் .சம்பந்தரும்  தன்  மனைவி  கை பற்றிக்கொண்டு  அந்த  ஜோதியை  வலம்வந்து  ஜோதியில்  கலக்கிறார் . அத்தருணத்தில்  அவர்  கடைசியாக  பாடிய  பதிகம் ,
காதலாகி  கசிந்து கண்ணீ ர்  மல்கி
ஓதுவார்  தமை  நன்னெறிக்  குய்ப்பது
வேத  நான்கினும்  மெய்ப்பொருளாவது
நாதன்  நாமம்  நமச்சிவாயவே  


சிந்தை யால்  மகிழ்ந் தேத்த வல்லாரெல்லாம்
பந்தபாசம்  அறுக்க  வல்லார்களே ..

Monday 13 October 2014

kolarupathigam

சம்பந்தர்  பாண்டியனின்  நோயை  குணப்படுத்தவும்  சமணர்களை  வாதில்  வெல்லவும்  மதுரை  புறப்பட்ட  போது  நேரம்  சரியில்லை  என   அப்பர் அடிகள்  தயக்கம்  தெரிவித்தபோது  சம்பந்தர்   வேயுறு தோளிபங்கன்  துணை  இருக்கும்போது  நாளும்  கோளும்  என் செய்யும்  என  வினவுகிறார் .இந்த  பாட்டையும்  வரலாறையும்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறேன் . இந்த பாடல்  பெரிதும்  பாடப்படுகிறது . சில  வருடங்களுக்கு  முன்  8 கிரகங்களும்  ஒரே  நேர்  கோட்டில்  வரும்போது  மகாபெரியவர்  இந்த  பதிகத்தை  எல்லோரும்  பாராயணம்  பண்ணுமாறு  கேட்டுக்கொண்டார்  என்பது  குறிப்பிட  தக்கது .நவக்ரக  ப்ரீதிக்கு  உகந்தது .

Saturday 4 October 2014

poompavai (cont)

பூம்பாவை  விதி  வசத்தால்  நாகம் தீண்டி    இறந்தாள் . அவளை  பிறிய  மனமின்றி  சிவநேசர்  அவளது  எலும்பை யும் , சாம்பலையும்  ஒருகுடத்திலிட்டு  வைத்திருந்தார் . சில  காலத்திற்கு  பின் .சம்பந்தர்  திருமயிலை  கபாலீச்வரரை  வழிபட  மயிலை  வந்தார் . சிவநேசர்  மிக  துயரத்துடன்  தன்  மகளின்  சோக  கதையை  சம்பந்தரிடம்  தெரிவித்தார் . மனம்  நெகிழ்ந்த  சம்பந்தர்  கபாலீஸ்வரரை  நெஞ்சுருக  த்யானித்து  "மட்டிட்ட  புன்னை  யன் " என்னும்  பதிகத்தை  பாடி , அங்கு  ஈஸ்வரனுக்கு  நடக்கும்  ஒவ்வொரு  உத்சவத்தையும்  சொல்லி , இவை  அனைத்தயும்  காணாமல் " போதியோ"  பூம்பாவாய் என    பாடுகிறார் . ஈசன்  அருளால்  குடத்திலிருந்து  பூம்பாவை  உயிர்ப்பெற்று  வருகிறாள் . அளவிலா  ஆனந்தம்  கொண்ட  சிவநேசர்  தன்  மகளை  மணக்கும்படி  வேண்டுகிறார் .ஆனால்  தன்னால்  உயிர்ப்பிக்கப்பட்ட  பூம்பாவை  தனக்கு  மகளாவாள்  என்று  மறுத்து  சொல்லி  தன பயணத்தை  தொடர்கிறார்  சம்பந்தர் . இப்போதும்  மயிலை  கபாலீஸ்வரர்  உத்சவத்தில்  அறுபத்துமூவர்   அன்று  அங்கம்  பூம்பாவை  ஆக்கி  அருளல்  என்று  ஒரு நிகழ்ச்சி  நடைபெறுகிறது . அதில்  சம்பந்தர்  நிகழ்த்திய  இந்த  அற்புதம்  நினைவு   கூறப்படுகிறாது .

Thursday 2 October 2014

poompavai

திரு மயிலையில்  சிவநேசர்  என்று ஓர்   வணிகர்  வாழ்ந்து  வந்தார் .செல்வந்தரான  அவரது  ஒரே  மகள்  பூம்பாவை  அழகும்  சிவபக்தியும்  மிகுந்தவள் . தந்தை  அவள்மீது  மிகுந்த  பாசம்  வைத்திருந்தார் . சம்பம்தரின்  பெருமை  உணர்ந்த  அவர்  சிறுமி  பூம்பாவையை  அவருக்கே  மணமுடிக்க  ஆவல்  கொண்டிருந்தார் .