Sunday 27 January 2013

மதுரகவிஆழ்வார்   மறைந்த   சில காலம்   பிறகு   பிரபந்தங்கள்   மறைந்து   போயின .சில  நூரற் றாண்டுகள்   கடந்து  பின் நாதமுனிகள்  எனும்   பெரும்   வைணவர்  தற்செயலாக   நம்மாழ்வார்  பாடல்   ஒன்றை   கேட்க   நேர்ந்தது . பாட்டின்   முடிவில்   "இவை   மாறன்   சடகோபன்   பாடிய   ஆயிரத்தில்   ஒரு   பத்தாம் " என்று      முடிந்தது   கேட்டு   ஆச்சர்யம்   அடைந்தார் .  மற்ற    பாடல்களை   பற்றீ  யாரும்   அறியவில்லை .  நாதமுனிகள்   பலவாறு   தி ரி ந்து   மதுரகவிகள்   வாழ்ந்த   இடத்தை   அடைந்தார் .  அங்கு   மதுரகவிகள்   பாடிய   11  பாக்களை   கிடய்க்க பெற்றார் .  அவைகளை   12000  முறை   துதித்து   பாடி னார் .  அப்போது   ஓர்   அதிசயம்   நிகழ்ந்தது .  நம்மாழ்வாரே   தோன்றி   4000  பாக்களையும்   அவருக்கு   அளித்தார் .  பெருமகிழ்ச்சி   கொண்டு   அவைகளை   பெற்றுகொண்டு   நாதமுநிகளார்   தொகுத்து   நமக்கு   அளித்தார் .  

Wednesday 23 January 2013

நம்மாழ்வார்  பெருமாளின்   அவதாரமாக   கருதப்படுகிறார் . மதுரகவி ஆழ்வார்   மற்றோர்  பெரும்   ஞாநி . அவர்  உயரந்த   ஒரு   குருவை   தேடி   வடநாட்டில்   அலைந்து   கொண்டிருந்தார் . அப்போது   வானில்   ஒரு  ஒளி  தோ ன்றி யது .  அதை   பின்   தொடரந்து   வெகு வாக  அலைந்து   பின்   ஆழ்வார்திருநகர்   வந்து   அடைந்தார் .  மதுரகவிஆழ்வார்   நம்மாழ்வார்  குடியருக்கும்  மரத்தை   கண்டார் .  அவரை   பலவிதமாக  துதித்து   பாடி  அவரிடமிருந்து   எல்லா   பிரபந்த  பாக்களை   பெற்றார் . அவருடைய   ஆனந்தத்திற்கு   எல்லையே  இல்லை . அவர்   நம்மாழ்வாரை  துதித்து   '"  கண்ணிணுள்    சிறுதாம்பு "  என   தொடங்கும்   11   பாக்களை   பாடினார்