Tuesday 31 July 2018

புனிதவதியும்   பரமதத்தனும்   மனமொத்த   தம்பதிகளாய்   சநதோஷமாக   இல்லற   வாழ்க்கையை   நடத்தலானார்கள் .  பரமதத்தனும்   அவள்   மனம்படி   பல   தரும   காரியங்கள்   செய்துவந்தான் .  சிவனடியார்களுக்கு   அமுது   செய்வித்து   மகிழ்ந்தான் .  இவ்வாறு   மகிழ்ச்சியுடன்   இருந்த   காலத்தில்   ஒருநாள்   அவனுடைய   நண்பர்கள்   அவனை   காண   வந்தனர் .  அவர்கள்   இரண்டு   மாங்கனிகளை   அவனிடம்   கொடுத்தனர் .  அவைகளை   புனிதவாதியிடம்   கொடுத்து   தான்   திரும்பி   வந்து   உண்பதாக   கூறினான் .   அவன்   சென்றதும்   ஒரு   சிவனடியார்   பிக்ஷைக்கு   வந்தார் .  அமுது   படைக்க   உணவு   தயாராகவில்லை   என்பதால்   புனிதவதி   பரமதத்தன்   கொடுத்த  கனிகளில்    ஒன்றை   அந்த   சிவனடியார்க்கு   கொடுத்தாள் .  அவர்   மகிழ்ச்சியுடன்   அதை   உண்டார் .

Monday 30 July 2018

புனிதவதி   வளர்ந்து   யுவதி     ஆனாள் .  அழகு   சிறந்த   குணம்,  நல்ல அறிவு   செல்வம்   எல்லாம்   ஒருங்கே   அமைந்த   அவளுக்கு   நல்ல   வரன்   அமைய   வேண்டுமென்ற   கவலை   பெற்றோர்களுக்கு.  அப்போது   நாகப்பட்டினத்தில்   நிதிபதி   என்றொரு   பெரும்   வணிகர்   வாழ்ந்து   வந்தார் .     அவருக்கு   பரமதத்தன்   என்றொரு   பிள்ளை   இருந்தார் .  புனிதவாதியை   பற்றி   கேள்விப்பட்ட   அவர்   பிள்ளைக்கு   அவளை   மணமுடிக்க   ஆவல்கொண்டு   தனதத்தனை   பெண்   கேட்டு   வந்தார்.  இருவருக்கும்   சம்மதம்   இருந்ததால்   திருமணம்   நிச்சயிக்கப்பட்டு    வெகு   விமரிசையாக   திருமணம்   நடந்தது .  பெண்ணை   பிரிந்திருக்க   மனமில்லாமல்     தனதத்தன்   காரைக்காலிலேயே   தனியாக   ஒரு   மாளிகையில்    அவர்களை   குடியமர்த்தினான் .

Saturday 28 July 2018

காரைக்கால்   நகரில்   தனதத்தன்  என்று   ஒரு   வணிகர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்   நேர்மை   தவறாத   வணிகர் .  தருமநெறி   தவறாமல்   வாணிபம்   செய்து   பெரும்   பொருள்   ஈட்டி   இருந்தார் .  அவர்   வணிக   குலத்திற்கு   தலைவனாக   இருந்தார் .  அவருக்கு   அழகான   பெண்    ஒன்று   பிறந்தது .  அவளை   பார்த்த   எல்லோரும்   அவள்   பிற்காலத்தில்   எல்லோராலும்   கொண்டாடப்படுவாள்   என்று   கொண்டாடினர் .  சர்வ   லக்ஷணங்கள்   பொருந்திய   அவளுக்கு   தனதத்தன்   புனிதவதி   என்று   பெயர்   சூட்டி   மகிழ்ந்தா.ன்    

Tuesday 24 July 2018

(பெருமிழலை குறும்பர்க்கும்   பேயார்க்கும்   அடியேன் )
  மிழலை   நாட்டிலே   பெருமிழலை   என்றொரு   ஊர் .  அங்கு   குறும்பர்   எனும்   பெரும்   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்  சிவனடியார்களிடம்   மிகுந்த   அன்பு   கொண்டிருந்தார் .  அவர்களுக்கு   எவ்வித   சேவைகளையும்   தயங்காது   செய்து   வந்தார் .   அவருக்கு   சுந்தரர்   மீது   அளவு   கடந்த   பக்தி .  அவரை   போற்றி   புகழ்வதில்   பேரானந்தம்   அடைந்தார் .  அவருக்கு   அட்டமா  சித்திகளும்   சித்தியாயின .   இவ்வாறு   இருக்கையில்   திருவஞ்சைக்களத்தில்   சுந்தரர்   மறுநாள்   கைலாசம்   செல்ல   இருப்பதை   தன்   ஞான   திருஷ்டியால்   உணர்ந்தார் .  சுந்தரர்   இல்லாத   இவ்வுலகில்   வாழ்வதை   அவர்   விரும்பவில்லை .  கண்   இழந்தவன்   போல்   வாழும்   வாழ்வை   விரும்பாமல்   அவருக்குமுன்   தான்   கைலாயம்   சென்று   விட   எண்ணினார் .    தன்   அபாரமான   யோக   சக்தியால்    தன்   உடல்கூட்டை   விட்டு   ஆன்மாவை   கைலாய   நாத.னின்   காலடியில்   சமர்ப்பித்தார்.அவரோடு  ஐக்கிய மானார் .

Friday 20 July 2018

மஹாராணியாரும்   அரசனின்   இந்த   போக்கால்   மனமுடைந்து   போயிருந்தார் .  அந்த   சமயத்தில்   சம்பந்த   பெருமான்   சோழ   நாட்டு   திருப்பதிகள்   தோறும்   சென்று   சிவபெருமான்   மீது   பதிகங்கள்   பாடி   நாடு   தோறும்   சைவம்   தழைத்தோங்க   பெரும் பாடு   பட்டுக்கொண்டிருந்த   செய்தி   ராணியாரை   எட்டியது .  உடனே   அவர்   குலச்சிறையாரை   அனுப்பி   அவரை   பாண்டிய   நாட்டிற்கு   வரவழைத்து   எவ்வாராவது   சமணர்களை   வாதில்   வென்று   சைவத்தை   பாண்டிய   நாட்டில்   மறுபடி   ஸ்தாபிக்க   செய்ய   எண்ணி   அவரிடம்  அனுப்ப   எண்ணம்   கொண்டார் .  அவ்வாறே    குலச்சிறையாரும்    சம்பந்தரை   பணிந்து   அவரை   பாண்டிய   நாட்டிற்கு   அழைத்து   வந்து  சமண  குருமார்களை   எல்லா   வாதங்களிலும்   வென்று  மறுபடியும்  சைவம்  தழைக்க    செய்தார் .  சமணர்களை   கடுமையாக   தண்டிக்க  செய்து   நாட்டை   விட்டு   விரட்ட செய்தார் . மன்னனும்   தன்   தவறை   உணர்ந்து   பிராயச்சித்தமாக   பல   சிவாலயங்களை   கட்டினான்   குலச்சிறையார்   தொடர்ந்து   சைவத்திற்கு   பல   தொண்டுகள்  செய்து  கொண்டு   சில   காலம்   வாழ்ந்து   பிறகு   சிவனடி   சேர்ந்தார் .

Thursday 19 July 2018

[பெருநம்பி   குலச்சிறைதன்   அடியார்க்கு   அடியேன் ]

பாண்டிய   நாட்டிலே   மணமேல்குடி   என்றொரு   ஊர்.  அவ்வூரில்   பிறந்தவர்   குலச்சிறையார் .    அவர்   சிவபெருமான்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டவர் .  திருநீறு ,  ருத்திராக்ஷம்   அணிந்த   யாரை   கண்டாலும்   சிவனடியாராக   நினைத்து   உபசரித்து   திருவமுது   செய்வித்து   மகிழ்வார் .  இப்பெரும்   குணம்   பாண்டிய   மன்னன்   நெடுமாறனை   கவர்ந்தது .  மன்னன்   அவரை    அமைச்சராக   நியமித்து   கொண்டார் .   பாண்டிய   பட்டமகிஷி   மங்கையர்க்கரசியார்      சிவபக்தி   மிகுந்தவர் .  ஆதலால்   அவர்க்கு   குலச்சிறையார்   மீது   மிகுந்த   மரியாதை   உண்டாயிற்று .   சமணர்கள்   போதனையால்   மனம்  மாறிய   மன்னன்   நெடுமாறன்    சிவனை  மறந்து     சமண   மதத்தை   தழுவலானான் .  அதனால்   மனமுடைந்த    மந்திரியார்   அரசனை   அணுக   தைரியமில்லாமல்   மஹாராணியிடம்    தன்   ஆதங்கத்தை   தெரிவித்தார் .   

Saturday 14 July 2018

உலக   பற்றையெல்லாம்   அடியோடு   துறந்த   அவர்க்கு  இந்த   பொன்னும்   மணியும்   எவ்வித   சலனத்தையும்    உண்டாக்க   முடியவில்லை .  விட்டாரா   ஈசன்   அவர்   மனத்தூய்மையை   சோதிக்க   தேவலோக   பெண்களை   வர   செய்து   அவர்முன்   கவர்ச்சியான   உடைகளுடன்   நடனமாட   செய்தார் .   அவர்   பெண்களை   ஏறெடுத்தும்   பார்க்கவில்லை .   அவர்கள்   அவரை   நெருங்கி   தொட   முயன்றபோது   அவர்   கோபத்தோடு   ஆரூர்   ஈசன்   குடிகொண்டிருக்கும்   என்   இதயத்தை   உங்கள்   அலங்கோலத்தால்   அசைக்க   முடியாது   என்று   கூறி   'பொய்  மாயப்   பெருங்கடலுள் '   எனும்   பதிகம்   பாடினார் .  அம்மாதர்கள்   வெட்கி   தலை   குனிந்து   அவரை   பணிந்து   திரும்ப   சென்றனர்.  நாவுக்கரசரின்   இப்பூலோக   வாழ்வு   முடியும்   காலம்   நெருஙகியது.அவர்  தி  னமும்  மனம்   கசிந்து  உருகி    தன்னை  ஏற்று   கொள்ளும்படி   வேண்டலானார் .  ஐயனும்   மனம்   இரங்கினார் .சித்திரை  மாதம்   சதய   நக்ஷத்திரம்   அன்று '  'உன்னடிக்கே  வருகிறேன் '  எனும்    பதிகம்   பாடினார்   .  ஆடவல்லானும்  மனமிரங்கி   அவரை   ஏற்றுக்கொண்டார் .  அடிகளும்   சிவத்தில்   கலந்து ஐக்கியமானார் .  நமசிவாய !

Friday 13 July 2018

அப்பர்பெருமான்   பாண்டிய   நாட்டு   தலங்களை   சேவித்து   பதிகங்கள் ,  தாண்டகங்கள்   பாடிக்கொண்டும்   உழவார   பணிகளை   செய்து கொண்டும்   சோழநாட்டு   தலங்களையும்   சேவித்து   மனமகிழ்ந்தார் .  திருப்புகலூர்   வந்தடைந்தார் . அங்கு   ஐயனை   மனதார   தொழுது   கொண்டும்  பதிகங்கள்  பாடிக்கொண்டும்   தன்   உழவார   பணியையும்   விடாமல்   செய்து   கொண்டும்   காலம்   கடத்திக்கொண்டு   இருந்தார் .  ஈசனுக்கு   அப்போது   அவருடைய   உள்ளத்தை   சோதிக்க   எண்ணம்   எழுந்தது .  அவர்   பணி   செய்யும்   இடங்களில்   எல்லாம்   முத்துக்கள் ,  மணிகள் ,  வைரம்   விலை   உயர்ந்த   பொருள்கள்   தோன்ற   செய்தார் .  பணியில்   ஈடுபட்டிருந்த   நாவுக்கரசர்     இவை   எதையும்   கவனித்ததாக   தெரியவில்லை.  எல்லாவற்றையும்   சுத்தம்  செய்து   குளத்தில்   எறிந்தார் .

Tuesday 10 July 2018

திருப்பூந்துருத்தியில்   அப்பரும்   சம்பந்தரும்   சேர்ந்து   இறைவனை   தொழுது    மகிழ்ந்தனர் . பிறகு   அப்பர்  சம்பந்தரிடம்  அவருடைய   பாண்டியநாட்டு     பயணத்தை   குறித்து   அறிந்து   கொள்ள   ஆவலை   தெரிவித்தார் .  சம்பந்தரும்   பாண்டிய   பட்டத்தரசி   மங்கையர்க்கரசி   அமைச்சர்   குலச்சிறையார்   அவர்களின்   வேண்டுகோளுக்கு   இணங்கி   மதுரை   சென்றதையும்   அங்கு அனல்   வாதம்   புனல்   வாதம்   என்று   எல்லா   வாதங்களிலும்  சமணர்களை   வென்றது ,  கூன்பாண்டியனின்   நோயை   குணமாக்கி   அவருடைய  கூனை   நிமிர்த்தி   அவரை  'நின்றசீர்நெடுமாறன் '  ஆக   மாற்றியதை   விரிவாக  கூற  .  அப்பர்  புளகாங்கிதம்   அடைந்தார் .  அரசன்   மனம்   மாறி   சமணர்களை   கடுமையாக    தண்டித்ததையும்  தானும்   முழுமையாக   சைவத்திற்கு   மாறி   எம்பிரானுக்கு   பல   ஆலயங்கள்   எழுப்ப   பேராவல்   கொண்டது  பற்றியும்   தெரிவித்தார் .  அப்பர்   இச்செய்திகளை   கேட்டு   பேரானந்தம்   அடைந்தார் .  சம்பந்தர்   அங்கிருந்து   சென்றதும்   அப்பரும்   சில   நாட்கள்   அங்கு   தங்கி   உழவார   பணி   செய்துவிட்டு   தன்  பயணத்தை   தொடர்ந்தார் .  திருநெல்வேலி ,  திருப்புகலூர்  போன்ற   இடங்களுக்கு   சென்றார் .

Friday 6 July 2018

திருவையாறில்   நாவுக்கரசர்   சில   நாட்கள்   தங்கி   உழவார   பணி   செய்தார் . பிறகு  சில   தலங்களை   தரிசித்தபின்   திருப்பூந்துருத்தி   வந்து   சேர்ந்தார் .  அப்போது   ஞானசம்பந்தர்   பாண்டிய   நாட்டில்   சமணர்களை  எல்லா  வாதிலும்   வென்று   அங்கு   சைவத்தை   நிலைநாட்டி   பாண்டியனின்   நோய்   தீர்த்து   அவர்   கூனையும்   நிமிர்த்தி   மனநிறைவோடு   வரும்   செய்தி   கேட்ட   அப்பர் பெருமான்   இறைவனின்   திருவருளை   பூர்ணமாக   பெற்ற   அத்திருமகனை   தோளில்   சுமக்க   பேராவல்  கொண்டார் .  அடியார்   கூட்டம்   பின்தொடர   பல்லக்கில்   அவரை   கண்டதும்   தனியாக   அந்த   கூட்டத்தில்   மறைந்து   சென்று   சிவிகையை   நெருங்கி   தாமும்   அச்சிவிகையை   தாங்கி   தொடர்ந்தார் .  திருப்பூந்துருத்தி   அடைந்ததும்   நாவுக்கரசரும்   அங்கிருப்பதை   கேள்விப்பட்டு   பெரும்   மகிழ்ச்சி   அடைந்த   சம்பந்தர்   அப்பர்பெருமான்   எங்கே  என்று   ஆவலுடன்   வினவ   அப்பர்  '  இதோ   தங்கள்   சிவிகையை   தாங்கும்   பாக்கியம்   பெற்று   இங்கே   இருக்கிறேன் '  என்று   பதில்   உரைத்தார் .   சம்பந்தர்   பதைபதைத்து   ஐயா   தாங்கள்   என்னை   சுமைப்பதா ?  என்னை   இப்பாபத்திற்கு   ஆளாக்கி   விட்டிர்களே '  என்று   சொல்லி   சிவிகையிலிருந்து   குதித்தார் .  அவரை   அப்பர்   வணங்க   சம்பந்தர்   அப்பரை   வணங்க   அடியார்கள்   மகிழ்ச்சி   ஆரவாரம்   செய்தனர் .   

Sunday 1 July 2018

ஈசன்   அப்பரின்   உறுதியை   கண்டு   மகிழ்ந்து     அவருக்கு   தோற்றமளித்து   'அன்பரே   பக்கத்திலுள்ள   குளத்தில்   மூழ்கி   திருவையாற்றில்   குளத்தில்   எழுந்திருங்கள் .  அங்கு   கைலை   காட்சியை   காண்பீ ர்கள்.'  என்று   கூறி   மறைந்தார் .  மெய்சிர்த்து   அப்பர்பெருமான்   அக்குளத்தில்   மூழ்கி   எழும் போது காவிரி   கரையில்   திருவையாற்றில்      ஐயாறப்பன்   கோயில்   குளத்தில்   எழுவதை   கண்டு   உள்ளம்   சிலிர்த்து    போனார் .  அதைவிட   அவர்  உடலில்   ஒருவித   காயமும்   இன்றி   தேய்ந்த   உறுப்புகளெல்லாம்   வளர்ந்து   பழைய   நிலையை   அடைந்த்திருப்பது   கண்டு   ஐயன்  கருணையை   நினைந்து   நெக்குருகி   போனார் .   'யாதும்   சுவடு   படாமல்    ஐயாறடைகின்ற   போது '' .  ஆலயத்தை   அடைந்து   ஐயனை  சேவிக்கும்போது   அவர்   கண்ட   காட்சி   அவரை   மெயசிலிர்க்க   வைத்தது .  பனி  மூடிய   கைலாய   சிகரம்   உச்சியில்   ஒரு  மணிமண்டபம் .  அதில்   உயர்ந்த   ஆசனத்தில்   ஈசன்   உமை   அன்னையுடன்   வீற்றிருக்கிறார்.  தேவர்கள்   சித்தர்கள்   கின்னரர்கள்   எல்லோரும்   வந்து    பணிந்து   போற்றுகிறார்கள் .  யோகிகள்  முனிவர்கள்  வந்து   போகிறார்கள் .  ஒரு   கணம்   இவ்வறிய   கைலாய   காட்சியை   கண்டு   மிக்க   ஆனந்தம்   எய்தி  '' மாதர்   பிறை   கண்ணியானை ''  என்ற   பதிகம்   பாடுகிறார் .