Thursday 31 January 2019

வாகீசப்பெருமானும்    சம்பந்தப்பெருமானும்   அக்காசுகளைக்கொண்டு   பொருள்களை   வாங்கி   உணவு   தயாரித்து   மக்களுக்கு   வழங்கி   அவர்கள்   பசியாறுவதை   கண்டு   ஆனந்தப்பட்டனர் .  ஆனால்   வாகீசர்   மடத்தில்   வெகு   விரைவிலேயே   உணவு   தயாராகி   மக்கள்   பசியாற   வழங்கப்பட்டது .  ஆனால்   சம்பந்தர்   மடத்தில்   உணவு   தயாராக   அதிக   நேரம்   ஆயிற்று .   சம்பந்தர்   வருத்தமடைந்து   அதன்    காரணம்   வினவினார் .  அதற்கு   அவர் அடியார்கள்   வாகீசப்பெருமான்   அளிக்கும்   சுத்தமானது   என்றும்   சம்பந்தர்   அளிக்கும்   காசு   சிறிது   மாற்று   குறைவானது   என்றும்   அதை   சரியாக்க   நேரம்   பிடிப்பதாகவும்   விளக்கினர் .   வாகீசர்  உடலை   வருத்தி   உழவார   பணி   செய்து   ஐயன்   மனம்   குளிர   வைப்பதால்   அவருக்கு   மாசற்ற   பொன்   கிடைப்பதே  தகும்   என்று   மனம்   தேறி    ஐயனை     வேண்டி   'வாசி   தீரவே   காசு   நல்குவீர்   மாசின்   மிழலையீர் '          எனும்   பதிகம்   பாடி  'கறைகொள்  காசினை   முறைமை    ஆக்குவீர்     என்று   வேண்டி   மாசிலா   பொன்   பெற்று   சேவை   செய்து   மகிழ்கிறார் .

Wednesday 30 January 2019

சம்பந்தப்பெருமான்   விழிமிழலையில்   சில   காலம்   தங்க   தீர்மானித்தார் .  அப்பர்பெருமானும்   மடத்தில்   வேறு   இடத்தில்   தங்கி   இருந்தார் .  இருவரும்   ஆலத் திற்கு    வந்து   இறைவனை   வணங்கி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தனர் .  இவ்வாறு   இருக்கையில்    நாட்டில்   வறட்சி   ஏற்பட்டு  ஆறு  குளங்கள்   வற்றி   மக்கள்   உண்ண   உணவுக்கே   சிரமமாகி   கஷ்டப்பட்டனர் .  இதனால்   மனம்   மிக   வேதனை   அடைந்த   வாகீசரும்   சம்பந்தரும்   ஈசனிடம்   மனமுருகி   வேண்டினர் .       ஐயன்   அவர்கள்   கனவில்   தோன்றி   பீடத்தின்  கீழ்  பொற்காசுகள்  வைப்பதாகவும்   மேற்கு   பீடத்தில்   உள்ள   காசை   அப்பரும்   கிழக்கு   பீடத்தில்   உள்ளதை   சம்பந்தரும்   எடுத்துக்கொண்டு   உணவு   பொருள்களை   வாங்கி   பஞ்சம்   தீரும்வரை   மக்களுக்கு   உணவு   அளிக்குமாறு   கூறினார் .  அவ்வாறே   இருவரும்   காலையில்   பொற்காசை   கண்டு   மகிழ்ச்சியுடன்   தங்கள்   சேவையை   தொடங்கினர் .

Monday 28 January 2019

சம்பந்தரும்   விடியற்காலை   எழுந்து   ஆலயம்   சென்றார் .  அங்கு   அவருக்கு   வியக்கத்தக்க   வகையில்   விமானத்தில்   தோணியப்பராக   காட்சி   அளித்தார்  மிழலை   ஈசர்    அதை   கண்ட   காழிப்பிள்ளையார்   மெய்   மறந்து   அக்காட்சியை   கண்டார் .  ஈசன்   பெரும்கருணை   அவரை   மெய்   சிலிர்க்க   வைத்தது .  உள்ளம்   குதூகலிக்க   பதிகங்கள்   பாடினார் .   ஆலயத்திலிருந்து   வந்து    காழியிலிருந்து   வந்த   பெரியோர்களை   சந்தித்து   நடந்ததை   கூறி   அவர்களை   திருப்பி   அனுப்பினார் .  அவர்களும்   அதிசயித்தவர்களாக   சீர்காழி   திரும்பி   சென்றனர் .  மிழலையில்   சிலகாலம்   தங்க   முடிவு   செய்தார்   சம்பந்தர் .

Saturday 26 January 2019

திருவீழிமிழலையில்  மடத்தில்  வாகீசரும்    சம்பந்தரும்   வெவ்வேறு   இடங்களில்   தங்கி   இருவரும்   நாள்தோறும்   ஆலயம்   சென்று   எம்பெருமானை   வழிப்பட்டு   வந்தனர் .   இவ்வாறு   இருக்கையில்     சீர்காழியிலிருந்து   சில   பெரியோர்கள்   வந்து   சம்பந்தப்பெருமானை   ஊருக்கு   வரும்படி  அழைத்தனர் .   காழிப்பிள்ளை  அவர்களை   இரவு   மடத்தில்   தங்க  சொல்லி   காலை   ஐயனிடம்   விடை   பெற்று   கொண்டு வருவதாக      சொன்னார் .  அவர்களும்   அவ்வாறே   செய்வதாக    கூறி   சென்றனர் .    மிழலை   ஈசன்   அவரை   அனுப்ப   மனமில்லாமல்   அவருடைய   தேனினும்   இனிக்கும்   பாக்களை   மேலும்   சுவைக்க   எண்ணியோ   என்னவோ   அவர்   கனவில்   தோன்றி   குழந்தாய்   தோணியப்பரை   காண   நீ   அத்தனை   தூரம்   செல்ல   தேவை   இல்லை .  நாளை   யாமே   விமானத்தில்   அக்கோலத்தை   காட்டுவோம் '  என்று   சொல்லி    மறைந்தார் 

Friday 25 January 2019

 புகலூரை   விட்டு   அப்பரும்   சம்பந்தரும்   சேர்ந்து   புறப்பட்டு   தங்கள்   யாத்திரையை   தொடர்ந்தனர் .  அப்பர்பெருமான்   நடந்து   வருகையில்   தான்   மட்டும்   சிவிகையில்   செல்ல   மனம்   வராமல்   சம்பந்தர்   தானும்   நடக்க   ஆரம்பித்தார் .  அதை   கண்டு   அப்பர்   ஈசன்   அளித்த   சிவிகை  இருக்கையில்   சிறுவராக   ஞான  பெருமான்   நடப்பது   தகாது   என்று   எடுத்து   உரைக்க   சம்பந்தர்   அப்படியானால்   தங்கள்   முதலில்   செல்லுங்கள் .  நான்   தங்களை   வந்து   சேர்ந்து   கொள்கிறேன் .  என்று   கூறி   சிறிது   நேரம்   தங்கிவிட்டு   நிலநக்கர் ,  முருகனார்   மற்றும்   சிறுத்தொண்டர்   யாரிடமும்   விடை   பெற்று   கொண்டு   கிளம்பி   சென்று   அப்பரை   சேர்ந்து   கொண்டு   இருவரும்   திருக்கடவூர்   சென்றனர் .  அங்கு   குங்கிலிய   கலைய   நாயனாரை   சந்தித்து   அவருடன்   உரையாடி   விட்டு   அவருடனேயே   அமுது   செய்து   விட்டு   அங்கிருந்து   திருவீழிமிழலை   சென்றனர் .

Tuesday 22 January 2019

காழிப்பிள்ளை   புகலூரிலிருந்து   புறப்பட்டு   சில   க்ஷே த்திரங்களை   சேவித்துக்கொண்டு   ஆரூரை   நெருங்கினார்.  தூரத்திலிருந்து   கோபுரத்தை   கண்டதுமே   அவர்   தேகம்   புல்லரித்தது .  தரையில்   விழுந்து   சாஷ்டாங்கமாக   வணங்கினார் .  ஞானபாலுண்ட   பெருமானை   தரிசிக்க   மக்கள்   கூடி   பெரும்   வரவேற்பு    அளித்தனர் .  அவரும்   அங்கு   தங்கி   பதிகங்கள்   பாடி   ஈசனை   வணங்கி   மகிழ்ந்தார் .  அங்கிருந்தபடியே   அக்கம்   பக்கங்களிலுள்ள   க்ஷேத்திரங்களை   சேவித்து   திரும்பினார் .  பிறகு   ஆரூரை   விட்டு   புகலூர்   திருப்பினார் .  அப்போது   அங்கிருந்த   அப்பர் ஸ்வாமிகளும்   முருகனாரும்   அவரை   எதிர்கொண்டு   அழைத்து   மடத்திற்கு   திரும்பினர் .  அவர்   முருகனார்   மடத்தில்   இருந்தபோதே   நிலநக்கரும்   சிறுத்தொண்டரும்   அங்கு   விஜயம்   செய்து   அவர்களுடன்   சேர்ந்து   களித்தனர் .

Thursday 17 January 2019

ஆளுடையபிள்ளை   அங்கிருந்து   அடியார்களுடன்   திருப்புகலூர்   செல்ல   எண்ணினார் .  சிறுத்தொண்டர்   அவரை   ஊர்   எல்லைவரை   சென்று   வழி   அனுப்பினார் .  அங்கு   முருகனார்   அவர்களை   அன்புடன்    வரவேற்று   தம்    மடத்திலேயே   தங்க   வைத்து   உபசரித்தார் .    அப்போது   திருவாரூரிலிருந்து   அப்பர்பெருமான்   அங்கு   தம்   அடியார்களுடன்   வருவது   அறிந்தார் .   சம்பந்தர்   தாமே   சென்று     அவர்   காலில்   விழுந்து   சேவித்து   அழைத்துவர   விருப்பம்   கொண்டார் .  எல்லைவரை   சென்று   அவரை   அழைத்து   வந்தார்.  இருவரும்   பேசிக்கொள்ளும்போது   அப்பர்பெருமான்   ஆரூர்   திருவாதிரை   உத்சவத்தின்   பெருமை   'முத்துவிதானம் '   எனும்   பதிகத்தால்   விளக்கினார் .    அதை   கேட்டு   சம்பந்தருக்கும்   அந்த   வைபவத்தை   காண   ஆவல்   உண்டாயிற்று .  உடனே   அவர்   தீருவாரூர்   புறப்பட்டு   சென்றார் .
சம்பந்தர்   தன்னை   வைத்து   ஈசன்   ஆடிய   திருவிளையாட்டால்   மெய்சிலிர்த்து   போனார் .  மருகல்   ஈசனின்   கருணை   அவரை   மெய்யுருக   வைத்தது .  அவரை   சில   காலம்   அங்கேயே   தங்க   வைத்தது.   சிறுத்தொண்டர்   செங்காட்டங்குடி   அவர்   திரும்பாததால்   அவரே   சென்று   அவரை   அழைத்துவர   கிளம்பி   மருகல்   சென்று    அழைத்து   வந்தார் .   சம்பந்தர்   அங்கிருந்து   கணபதீச்சரம்   சென்று   எம்பெருமானை   சேவித்தார் .   அங்கு  அவருக்கு   மருகல்   ஆலயத்தில்   காட்சி     அளித்த   அதே   கோலத்தில்   காட்சி   தந்து   அவரை   சொல்லொணா   அதிசயத்தில்   ஆழ்த்தினார் .  பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் . 

Sunday 13 January 2019

அந்த   வாலிபனை   அப்பெண்   ஆனந்தம்   தாங்காமல்   கட்டி   தழுவிக்கொண்டு   நடந்த   விவரங்களை   சொன்னாள் .  அதை   கேட்டு   மிக்க   ஆச்சர்யம்   அடைந்த  அவன்   அவரை   மீண்டும்   வணங்கினான் .    சொந்தங்களை   துறந்து   வந்த   தங்களுக்கு   தெய்வமாக   வந்து   இப்பேருதவி   செய்த   அவரை   மிக்க   நன்றியோடு   வணங்கி   துதித்தனர் .  சம்பந்தர்   அவர்களை   ஆலயத்திற்கு   அழைத்து   சென்று   ஐயன்   முன்   அவர்களை   தம்பதிகளாக்கி   வாழ்த்தி   அனுப்பினார் .   பின்  இறைவனை   தொழுதார் .

Thursday 10 January 2019

 அவளுடைய   கதையை   கேட்ட   சம்பந்தர்   மனம்     பாகாய்   உருகியது .   ஈசன்   மீது   இத்தனை   நம்பிக்கை   வைத்து   வந்த   இவர்களுக்கு   இத்தகைய   சோதனையா ?   என்று   அவருக்கு   மிக்க   வருத்தம்   உண்டாயிற்று .  மருகல்   ஐயனை   மனமுருக   தியானித்து   '' சடையா   எனும்   மால்   சரண்   நீ   எனும்   மால் ''  எனும்   பதிகத்தை   பாடினார் .  அவர்   பாடப்பாட  அப்பையன்   தலையிலிருந்து   விஷம்  இறங்க   ஆரம்பித்தது .   அப்பதிகம்   முடிவதற்குள்   விஷம்   முழுவதும்   இறங்கி   அவ ன்  தூக்கத்திலிருந்து   வீழி  த்ததுபோல்   விழித்து    கொண்டான் ..   அப்பெண்ணின்   ஆனந்தத்திற்கு   அளவேது ?  அவன்   தன்னை   சுற்றி   இத்தனை   பேர்   நிற்பதையும்   மஹா   தேஜசுடன்  பாலகன்     நிற்பதை  கண்டு    எழுந்து   சம்பந்தர் காலில்   விழுந்தான் .     

Wednesday 9 January 2019

அப்பெண்   மேலும்  கூறினால்.  '' நாங்கள்   பெற்றோருக்கு   தெரிவிக்காமல்   புறப்பட்டு   மருகல்   ஈசனை   மனமார   துதித்தபடி   இங்கு   வந்தோம் நாங்கள்   இங்கு   வரும்முன்   இருட்டி   விட்டதால்    இங்கு   இந்த   மடத்தில்   இரவு   தங்கி   இருந்து   காலையில்   மருகல்   ஈசன்   முன்   மணமுடித்துக்கொள்ள   முடிவு   செய்தோம் .  இரவில்   தூங்கும்போது   திண்ணையில்   படுத்திருந்த   இவரை   பாம்பு   தீண்டி   இருக்கிறது .   காலையில்   எழுந்து   நான்   பார்த்தபோது   இவர்   உடல்   முழுவதும்   விஷம்   தீண்டி   மரணம்   அடைந்து   கிடைக்க  கண்டேன்.    எத்தனை  நம்பிக்கையுடன்   புறப்பட்டு   வந்த   எனக்கு   எத்தனை   அதிர்ச்சி .,  என்னையும்   அந்த   பாம்பு   தீண்டி   இருக்ககூடதா?   வீட்டை  எதிர்த்துக்கொண்டு   வந்துவிட்ட   நான்   மறுபடி   அங்கு   செல்ல   முடியாது .   அநாதை   ஆகிவிட்டேன் .  இனி   என்செய்வேன் ?  "   என்று   கதறி   அழுதாள் .         

Friday 4 January 2019

சம்பந்த பெருமான்   மடத்திற்கு   வந்து   கதறி   அழும்   அப்பெண்ணை   அணுகி   இவ்வாறு   கதறி   அழுவதன்   காரணம்   வினவினார்.  தெய்வீகம்  பொருந்திய   அம்முகத்தை   கண்ட   அப்பெண்   கதறிக்கொண்டே   அவர்   காலடியில்   வீழ்ந்தாள் .   ''  ஸ்வாமி   நான்   வைப்புரில்   வசிப்பவள் .  என்   தந்தை   அவ்வூர்   தலைவர் .   மிகுந்த   வசதி   படைத்தவர்    அவருக்கு   நாங்கள்   ஏழு   பெண்கள்.   இங்கு     சவமாக  கிடப்பவர்   எங்கள்   முறை   மாமன்   இவருக்கு   தன்   பெண்ணை   மணமுடித்து     வைப்பதாக   என்   தந்தை   வாக்களித்து   இருந்தார்   ஆனால்  தன்   அந்தஸ்து   காரணமாக   என்   தந்தை   கொடுத்த    வாக்கை   மீறி   தன்   ஆறு   பெண்களையும்   வேறு   சம   அந்தஸ்து   உள்ள   வரங்களை   தேடி   மணமுடித்து   விட்டார் .  நான்   ஏழாவது   மகள் .  எனக்கு   இவருக்கு   இழைக்கப்பட்ட   அநியாயத்தை   காண  பொறுக்கவில்லை .  ஆகையால்   இவரையே   மணப்பது   என்று   தீர்மானித்து   வீட்டில்   சொல்லாமல்   மருகல்   ஈசன்  முன்   மணமுடித்து       கொள்ள   எண்ணி     புறப்பட்டோம் .