Wednesday 29 April 2015

seraman

ஒரு  நாள்  சேரமானார்  பூஜை  முடித்து  வெகு  நேரம்  ஆகியும்  சலங்கை  ஒலி  கேளாததால்  மிக  துக்கமுற்று  தன்னை  மா.ய்த்துக்கொள்ள  முனைகிறார் . அப்போது  ஈசன்  அவரிடம்  தில்லையில்  சுந்தரர்  பாடிக்கொண்டிருந்த  பதிகங்களை  கேட்டு  தான்  மெய்  மறந்து  போனதே  கால  தாமதத்திற்கு  காரணம்  என்று  விளக்குகிறார் . இதை  கேட்ட  சேரமானார்  சுந்தரர்  மீது  மிகுந்த  பக்தி  கொண்டார் . அவருடைய  மற்ற  பெருமைகளையும்  கேட்டு  உணர்ந்து  அவருடைய  பக்தி  வெகுவாக  உயர்ந்தது . உடனே  அவரை  காண  திருவாரூர்  விரைகிறார் . இருவரும்  சேர்ந்து  பல  சிவாலயங்களை  தொழுது  நிறைய  பதிகங்கள்   பாடி  மகிழ்ந்தனர் . தம்பிரான்தோழன்  என பெருமை  பெற்ற  சுந்தரர்  சேரமான்  தோழனாகவும்  ஆகிறார  சே ரமாநாரும்  63 நாயன்மார்களில்  ஒருவர்  ஆவார் .  

Tuesday 28 April 2015

paravaiyar2

சுந்தரரும்  பரவைநாச்சியாரும்  சிறிது  காலம்  திருவாரூரில்  வாழ்கின்றனர் . சுந்தரரும்  பல  திருத்தலங்களை  சேவித்து  பல  பதிகங்கள்  பாடி  ஈசனை  துதித்தவாறு  இருந்தார் . அந்த  காலத்தில்  அவருக்கு  சேரநாட்டில்  ஒரு சிற்றாறரசரான  சேரமான்  பெருமானாரின்  நட்பு  கிடைக்கிறது .
சேர மான்   பெருமானார்  வெகு  சிறந்த  சிவபக்தர் .கேட்பாருக்கு  யாராயினும்  எதுவாயினும்  இல்லை  எனாது  வழங்கும்  பண்பாளர் . தில்லை  அம்பலவாணரிடம்  அளவு  கடந்த  பக்தி  உடையவர் . இதனால்  தினமும்  இவர்  பூஜை  முடிந்ததும்  தில்லை  நடராஜரின்  சலங்கை  ஓசை  அவருக்கு  கேட்குமாம் . அத்தகைய  பேறு  பெற்றவர் .
  

Thursday 23 April 2015

paravaiyaar

சுந்தரர்  வரவை  அறிந்த  பறவை நாச்சியார்  மகிழ்ச்சி  அடைந்தாலும்  அவர்  சங்கிலியாரை இரண்டாவதாக  மணந்த  செய்தி  அறிந்ததால்  வெகுண்டு  வாயிற்கதவை  தாளிட்டு  யாரையும்  அனுமதிக்க  மறுக்கிறார் . மனம்  வருந்திய  சுந்தரர்  ஈசனை  சரண்  அடைகிறார் .ஈசன்  தன்  பக்தனுக்காக  பரவையாரிடம்  தூது  செல்லவும் தயாராகிறார் . மு தியவராக  சென்று  பரவையை  சமாதானம்  செய்ய  முடியாமல்   தன்  சுய  உருவத்தை  அவருக்கு  காட்டி  நடந்த  உண்மையை  உரைத்து  அவர்கள்  பிறவி  ரகசியத்தையும்  உணர்த்தி  அவளை  சமாதான  படுத்துகிறார் . உண்மை  உணர்ந்து  அவளும்  சுந்தரரை  வரவேற்கிறாள் .

Saturday 18 April 2015

cont2

கண்  பார்வை  இழந்தாலும்  திருவாரூர்  ஈசனை  காணும்  ஆவல்  குறை யாதவராய் அடியார்களுடன்   பல  சிவதலங்களை  சே வித்தவாறே  யாத்திரை  தொடங்குகிறார் .கடைசியாக  காஞ்சி  வந்தடைகிறார் . காமாக்ஷி  அன்னையை  மனமுருக  வேண்டிக்கொண்டு   ஏகாம்பரேஸ்வரர்  முன்  மண்டியிட்டு  ஈசனை காணும்  பாக்கியம்  பெற  கண்ணொளி  வேண்டுகிறா ர் ..ஈசன்  பெரும்  கருணையால்  ஒரு  கண்ணில்  ஒளி  பெறுகிறார் . நன்றி  பெருக்குடன்  அவரை  வாயார  பாடி  துதிக்கிறார் . பிறகு  பயணத்தை . தொடர்கிறார் .   கடைசியாக  திருவாரூர்  வந்தடைகிறார் . பலகாலம்  பிரிந்த  நண்பனை  காணும்   மனம்  எத்தனை  ஆனந்தம்  அடையுமோ  அத்தனை  ஆனந்தத்துடன்  அவரை  தரிசிக்க  வருகிறார் . அவரை  உரிமையுடன்  (மற்றை  கண்தான்  தாராது  ஒழிந்தால்  வாழ்ந்து  போதீரே !) என்று  பாடுகிறார் .ஈசன்  பிரிய  நண்பனை  கைவிடுவாரா ? உடனே  மற்றைய  கண்   ஒளியையும்  பெறுகிறார் .

Thursday 16 April 2015

sundarar cont.

வீட்டை  விட்டு வெளியேறிய  சுந்தரர்  திருவாரூரை  நோக்கி   புறப்பட்டார் . திருவாரூர்  எல்லையை  தாண்ட  கால்  எடுத்து  வைத்ததும்  அவருடைய  இரு  கண்களும்  பறிபோயின . நண்பனாக  இத்தனை  பரிவுடன்  உதவிய  ஈசன்  தவறிய  போது  தண்டிக்க  தவறுவானா ? ஈசன்  முன்  செய்த  சத்தியத்தை  மீறி  திருஒற்றியூரின்  எல்லையை  தாண்ட  முயன்றதால்  உண்டான  விளைவு . சுந்தரர்  துடிக்கிறார் . ஈசனை  இனி காண  முடியாது  எனும்  எண்ணமே  அவரை  வாட்டுகிறது .     

Monday 13 April 2015

sngiliyar

சநகிலியா ருடன்  சிறிது காலம்   வாழ்ந்த  சுந்தரர்  திருவாரூர்  ஈசனை  காணாமல்  இனியும்  இருப்பது  சாத்தியம்  இல்லை  எனும்  நிலையை  அடைகிறார் .ஒரு  நாள்  இரவு  சங்கிலியாரிடம்  சொல்லிக்கொள்ளாமல்  வீட்டை  விட்டு  வெளியேறுகிறார் . காலையில்  எழுந்த  சங்கிலி நாச்சியார்  சுந்தரரை  காணாமல்  தடுமாறுகிறார்  .பிறகு  எல்லாம்  ஈசன்  செயல்  என்று  தன்னை  தானே  தேற்றிக்கொண்டு  தன்  மலர்  கைங்கர்ய  சேவையை  தொடர்கிறார் .

Friday 10 April 2015

sangiliyar2

இந்த நிபந்தனையை  கேட்ட  சுந்தரர்  அதிர்ச்சி  அடைகிறார் .திருவாரூர்  வீதி  விடங்கரை  மறந்து  வாழ்வது  சாத்தியமா ? என  யோசித்து  திருஒற்றியூர்  ஐயனை  அணுகி  உரிமையுடன்  அவரை  லிங்க  திருமேனியிலிருந்து  தல  வ்ருக்ஷத்தில்  எழுந்து  இருக்க  வே ண்டுகிறார் . அவரும் சம்மதிக்கிறார் . அனால்  சங்கிலியாரின்  கனவில்  தோன்றி  ஈசன்  அந்த வ்ருக்ஷ த்தின்  முன்  சத்தியம்  வாங்க  கோருகிறார் . மறுநாள்  சங்கிலியாரின்  இந்த  கோரிக்கையை  கேட்டு  அதிர்ந்த  சுந்தரர்  மறுக்க  முடியாமல்  அவ்வாறே  மரத்தின்முன்  சத்தியம்  செய்கிறார் .சிறிது  காலம்  இன்பமாக  வாழ்ந்த  சுந்தரர்   திருவாரூர்  ஈசன்  நினைவு  அவரை  அலைக்கழிக்கிறது 

Wednesday 8 April 2015

sangiliyar

சங்கிலி  நாச்சியார்  ஈசனுக்கு  மலர்  கைங்கர்யம்  செய்து  கொண்டு  மனதை  அவரிடமே  செலுத்திக்  கொண்டு  திருமணத்தில்  நாட்டமில்லாமல்  வாழ்ந்து  வந்தார் . சுந்தரரை  கண்டு  சிறிது  சலனப்பட்டாலும்  தன்னை  மணப்பதற்கு  சுந்தரர்  திருஒற்றியூ ர்  எல்லையை  தாண்ட  மாட்டேன்  என்று  ஈசன்  மீது   ஆணை  இட  வேண்டும்  என்னும்  நிபந்தனை  வைக்கிறாள்  

Monday 6 April 2015

sangiliyar

இப்போது  சுந்தரர்  கைலையில்  அவர்  கண்டு  மையல்  கொண்ட  இரண்டாவது  மங்கையை  மணந்த  சம்பவத்தை  நோக்குவோம் .
சுந்தரர்  பல  கிராமங்களில்  உள்ள  கோயில்களை  அடைந்து  ஈசனை  மனமுருகி  பாடிக்கொண்டு  செல்கிறார் . அவ்வாறு  யாத்திரை  செய்துகொண்டு  திருஒற்றியூரை  அடைகிறார் .  அவர் கைலையில்  மனம்  பறிகொடுத்த  மங்கை  அங்கு  ஈசனுக்கு  மலர்  கைங்கர்யம்  செய்துகொண்டு  ஈசனிடம்  மிக்க  பற்று கொண்டவளாக  வாழ்ந்து  கொண்டிருந்தாள் . சுந்தரர்  அவளை  கண்ட  உடனேயே  அவளிடம்  மனம்  பறிகொடுக்கிறார் . ஈசனிடம்  விண்ணப்பிக்கிறார் . 

Wednesday 1 April 2015

cont.

சுந்தரர்  திரு  ஓணகாந்தன்தளி  என்னும்  தலத்தை  அடைந்து  அந்த  ஈசனை  உரிமையுடன்  பாடி  நிதி  பெற்று  வருகிறார் . இவை  எதுவுமே  சொந்த  தேவைக்காக  பெறவில்லை . பொதுநல  தேவைக்கே . இவை  சுந்தரர்  நிதி  பெற்ற  சம்பவங்கள்  . ஆனால்  ஈசன்  குறிப்பறிந்து   அவருடைய  பசி  ஆற்றிய  சம்பவங்கள்  மெய்  சிலிர்க்க  வைக்கும் . அவர் இதை     உருகி  பாடி  இருக்கிறார் . பல  கோயில்களை  வழிபட்டு  பிறகு  அவர்  தன் அடியார்களுடன்  சம்பந்தமூர்த்தி  பிறந்த  இடமான  சீர்காழி  வந்தடைகிறார் . ஈசனை பாடி  துதித்து மிகவும்  களைப்படைந்து  வெளியே  வந்தனர் . அங்கு  ஒரு  முதியவர்  ஒரு பந்தலில்  எல்லோரையும்  அமர  செய் து அமுது  படைத்தார் . எல்லோரும்  உண்டு  உறங்கி  எழுந்த  போது  பந்தல்  எல்லாம்  மாயமாக  மறைந்து  விட்டிருப்பதை  கண்டு  அமுது  படைத்தது  ஈசன்  என்பதை  உணர்ந்து  அவருடைய  நெகிழ்ச்சி  சொல்ல  வார்த்தை  இல்லை .இதற்க்கெல்லாம்  மேலாக  ஈசன்  திருக்கச்சூரில்  ஆடிய  திருவிளையாடல்  சுந்தரர்  மேல்  அவர்   கொண்ட  பாசம்  நன்றாக  விளங்கும் . சுந்தரர்  அடியார்களுடன்  மிகுந்த  பசியுடன்  திருக்கச்சூர்  அடைந்த  போது  ஈசன்  அந்தணர்  வடிவில்  தோன்றி  அந்த  பிராம்மணர்கள்  இல்லங்களிலிருந்து  உஞ்ச விருத்தி  செய்து  அமுது  படைக்கிறார் . ஈசனின்  அன்புதான்  என்னே ?