Friday 25 September 2015

paadal

திருமாளிகை தேவர்  பாடிய  முதல்  திருவிசைப்பா ,
ஒளி  வளர்  விளக்கே  உவப்பிலா  ஒன்றே  உணர்வு  சூழ்  கடந்ததோர்  உணர்வே
தெளிவளர்  பளிங்கின்  திரண்மணிக்  குன்றே சித்தத்துள்  தித்திக்கும்  தேனே
அளிவளர்  உள்ளத்து  ஆனந்த  கனியே  அம்பலம்  ஆடரங்காக
வெளிவளர் தெய்வ  கூத்து  உகந்தாயை  தொண்டனேன்  விளம்புமா விளங்கே 

Thursday 24 September 2015

cont2

ஒரு  முறை  திருவீழிமிழலை  உ த் சவத்தின்  போது  தேர்  ஓரிடத்தில்  நகராது  நின்றுவிட்ட  போது  இவர்  அத்தேரை  வடமே  இல்லாமல்  ஓட  வைத்து  வீதி  வலம்  வரசெய்தார் . யோக  பலத்தால்  அவருடைய  தேகம்  அதிக  பொலிவுடன்  திகழ்ந்தது . அவருடைய  தேக  காந்தி  பல  பெண்களை   வசீகரித்தது . அவருடைய  ஆத்ம  சக்தியால்  பல பெண்கள்  அவரை  போல உருவமுடைய  பிள்ளைகளை  ஈன்றனர் . இதை  கண்ட  மன்னன்  மாளிகைதேவரை  சந்தேகித்து  அவரை  தண்டிக்க  வீரர்களை  அனுப்பினான் .  அனால்  அங்கு  கோவில்  மதில்  சுவற்றில்  அமைக்கப்பட்டிருந்த  நந்தி  சிலைகள்  உயிர்பெர்று  அவ்வீரர்களை  தாக்கி  விரட்டின . இவ்வாறு  பல  அற்புதங்களை  புரிந்த  சித்தராவர் . இவர் தில்லை  கூத்தனின்  மேல்  மிக  பக்தியுடன்  பாடிய  பாடல்கள்  திருவிசைப்பா வில்  அடங்கும் .

Wednesday 23 September 2015

cont1

மாளிகைதேவர்  ஒரு நாள்  குளித்துவிட்டு  பூஜா  திரவியங்களை  கையில்  ஏந்திக்கொண்டு  கோவிலை  நோக்கி  சென்றார் . அப்போது  ஒரு  சவ  ஊர்வலம்  எதிரே  வரக்கண்டார் . பூஜை  பொருள்கள்  அசுத்தமாகி  விட  கூடாதென்று  அவற்றை  ஆகாயத்தை  நோக்கி  தூக்கி  எறிந்து   அவைகளை  அங்கேயே  இருக்க  செய்தார் .பிறகு  இறந்தவரை  எழுந்து  இடுகாடு  வரை  நடந்து  போக  ஆணை  இட்டார் .  அவர்  சென்றதும்  பூஜை  திரவியங்களை  மறுபடி  வரசெய்து  கோவில்  அடைந்தார்  என்று  கூறப்படுகிறது . அவர்  தன்  யோக  சக்தியால்  பல  அபூர்வ  சாதனைகள்  புரிந்துள்ளார் .

Monday 21 September 2015

thirumaalikaithevar

9ஆம்  திருமுறை  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு   அடங்கிய  301 பாக்களை  கொண்டது .  முதல்  45 பாக்கள்  திருமாளிகை  தேவரால்  பாடப்பட்டவை . இவர்  சைவ  வேளாளர்  குலத்தை  சேர்ந்தவர் . இவரின்  முன்னோர்கள்  மாளிகை  மடத்தை  செர்ந்தவர்கள்  . ஆதலால்  இவர்  மாளிகைதேவர்  என்று  அறியப்பட்டார் . சிறந்த  சிவபக்தர் . அவர் திரு ஆவடுதுறை யில்  மடம்  அமைத்து  அங்கு  ஒரு  அரச  மரத்தடியில்  த்யானத்தில்  அமர்ந்தார் . போகநாதரிடம்   ஞான  உபதேசம்  பெற்றார் . சைவ சித்தாந்த்தத்தில்  ஆராய்ச்சி  மேற்கொண்டார் . சிறந்த  யோக  சித்திகளை   பெற்றதால்  இவர்  தேகம்  மிக  ஒளிபெற்று  பார்ப்போரை  கவர்வதாக  இருந்தது . தன்  யோக  சித்தியால்  இவர்  பலப்பல  அதிசயங்களை  நிகழ்த்தியுள்ளார் .

 

Thursday 17 September 2015

9 thirumurai

9 திருமுறை  பல  பக்தர்களால்  பாடப்பட்ட  திருவிசைப்பா  மற்றும்  திருப்பல்லாண்டு . 301 பாடல்கள்  கொண்டது . திருவிசைப்பா  ஒன்பது  பக்தர்களாலும்  திர்ப்பல்லாண்டு  சேந்தனார்  எனும்  பக்தராலும்   பாடப்பெற்றவை .திருவிசைப்பா  பாடிய  ஒன்பது  பக்தர்கள் ,
திருமாளிகைத்தேவர்
சேந்தனார்
கருவூர்தேவர்
பூந்துருத்தி நம்பி  காடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டு  பாடியவர்  சேந்தனார்  ஆகும் . இவை  மொத்தம்  301 பாடல்கள் . எல்லா சிவாலயங்களிலும்  ஈசன்  தீபாராதனைக்கு  பிறகு  ஒதுவா முர்த்திகளால் பாடப்படும்  பஞ்ச புராண  தேவார பாடல்களில்  இவையும்  இடம்  பெறும் .  

Sunday 13 September 2015

cont2

 நானேயோ  தவம்செய்தேன்  சிவாய  நமவெனப்பெற்றென்
தேனாய் இன்னமுதுமாய் தித்திக்கும்  சிவபெருமான்
தானெவந்தெனதுள்ளம் புகுந்தடியே ர்கருள்  செய்தான்
ஊனாருமுயிர்  வாழ்க்கை  ஒறுத்தன்றே  வெறுத்திடவே |
மாணிக்கவாசகர்  பாக்கள்  அனைத்துமே  மெய்யுருக  செய்பவை . சில பாடல்கள்   குறிப்பிட்டிருக்கிறேன் . அவர்  பாடிய  திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி  இவை  இரண்டும்  மார்கழி  மாதம்  முழுவதும்  எல்லா  சிவாலயங்களிலும் , வைணவ  ஆலயங்களில்  திருப்பாவை  ஓதுவது  போன்று  ஓதப்படுகின்றன . அவருடைய  மேன்மை  சொல்லில்  அடங்காதது
  1.  அடுத்து  9 திருமுறை  திருவிசைப்பா . திருப்பல்லாண்டு . இவை  அநேக  பக்தர்களால்  பாடப்பட்டவை . அவர்களை  பற்றி  பார்ப்போம் .   

Thursday 10 September 2015

cont

மெய்தா அரும்பி , வித்ர்விதிர்த்து  உன்  விரை  ஆர்  சூழற்கு  என்
கைதான்  தலை  வைத்து  கண்ணீர்  ததும்பி  வெதும்பி  உள்ளம்
பொய்தான்  தவிர்ந்து  உன்னை  போற்றி செய  செய  போற்றி  என்னும்
கைதான்  நெகிழ  விடேன்  உடையாய்  என்னை கண்டு  கொள்ளே |




 

Friday 4 September 2015

cont2

அம்மையே  அப்பா  ஒப்பிலாமணியே  அன்பினில்  விளைந்த  ஆரமுதே
பொய்மையே  பெருக்கிப்  பொழுதினை  சுருக்கும்  புழுத்தலை  புலையனேன்  தனக்கு
செம்மையே  ஆய  சிவபதம்  அளித்த  செல்வமே  சிவபெருமானே
இம்மையே  உனை  சிக்கெனப்  பிடித்தேன்  எங்கு  எழுந்தருளுவது  இனியே |


பால்  நினைந்து  ஊட்டும்  தாயினும்  சால  பரிந்து , நீ   பாவியேன்  உடைய
ஊனினை  உருக்கி  உள்ளொளி  பெருக்கி  உலப்பிலா  ஆனந்தமாய
தேனினை  சொரிந்து  புறம்  புறம்  திரிந்த  செல்வமே  சிவபெருமானே
யான்  உனை  தொடர்ந்து  சிக்கெனப்பிடித்தேன்  எங்கு  எழுந்து  அருளுவது  இனியே 

Thursday 3 September 2015

thiruvasakam cont.

மாணிக்கவாசகர்  பக்தி  அதிசயிக்கத்தக்கது . ஈசனிடம்  திருவடி   தீக்ஷை  பெற்றபின்  அவர்  தன்னை  முழுமையாக   அவரிடம்  அர்ப்பணித்து  விட்டார் . ஈசனை  தவிர  வேறு  சிந்தனையே  அவருக்கு  எழவில்லை . சிக்கென  பிடித்தேன்  என்று  பாடுகிறார் . எத்தனை  கடுமையான  சோதனைகளுக்கு  ஆட்படு த்தப்பட்ட  போதிலும்  அவர் தன்  நிலை  மாறவில்லை.  அத்தனை  சோதனைகளையும்  அவர்  ஏற்றுக்கொண்ட  பாங்கு  ஈசனையே  வியக்க  வைத்திருக்கும் . அதுவே  அவரை கூலி    ஆளாக  வரவைத்து பிரம்படியும்பட  வைத்தது . இத்தனைக்கு  பிறகும்  அவர்   தன்னை  எத்தனை  தாழ்த்தி  கொண்டு  பாடுகிறார்  . அவருடைய  தன்னடக்கம்  எல்லை  இல்லாதது .  

Tuesday 1 September 2015

thiruvasakam

 சிவாலயங்களில்  தீபாராதனைக்கு  பிறகு  பஞ்ச  புராணம்  என்று  திருமுறை  தொகுப்பு  தினமும்  பாடப்படுவது  ராஜராஜன்  காலம்  முதல்  வழக்கமாகும் . அதில்  முறையாக  மூவர்  தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு  மற்றும்  பெரிய  புராணம் இவை ஓ துவா மூர்த்திகளால்  பாடப்படுவது  வழக்கம் . அதில்  திருவாசகம்  மோகன  ராகத்தில்  பாடப்படுவது  வாடிக்கை
   வள்ளலார்  ராமலிங்க  அடிகளார்    மாணிக்கவாசகர்  வழி  வந்தவர்  என்று  தன்னை  பெருமையுடன்  அறிமுகப் படுத்திக் கொள்வார் . இனி  நெஞ்சைத்தொடும்  சில  திருவாசகங்களை  காண்போம்