Friday 30 March 2018

மருள்நீக்கியார்   நெகிழ்ச்சியோடு   என்ன   கைம்மாறு   செய்ய   போகிறேன்   என்று   புலம்பியபோது   கருவறையிலிருந்து   அசரீரி   ஒலித்தது .  தித்திக்கும்   சொல்வளத்தால்   எம்மை   பாடிய   நீர்   இனி   நாவுக்கரசன்   என்னும்   பெயருடன்   உலக   புகழ்   அடைவாய்   என   ஒலித்தது .  கேட்ட   நாவுக்கரசர்   புல்லரித்து   போனார் .  தனக்கு   மறுவாழ்வளித்த   சிவபெருமானுக்கே   தன்   வாழ்வை   அர்ப்பணிக்க   முடிவு   செய்தார் .  அவருக்கு   தொண்டு   செய்வதையே    தமது   பணியாக   கொண்டார் .   திலகவாதியாருக்கு   சந்தோஷம்   தாங்கவில்லை .  தம்பிக்கு   உழவார   படையை   கொடுத்து   சிவாலயங்களில்   பணியில்   ஈடுபடுமாறு   பணித்தார் . நாவுக்கரசரும்   பெற்றுக்கொண்டு    விரட்டானத்திலேயே   பணியை   துவங்கினார் .

Tuesday 27 March 2018

சகோதரி   கொடுத்த   திருநீறை   பக்தியுடன்   பெற்றுக்கொண்ட   மருள்நீக்கியார்   அதை   நெற்றியிலும்   உடலிலும்   பூசிக்கொண்டார் .    விடியற்காலை   திலகவதியார்    தம்பி  யுடன்   கோவிலுக்கு   புறப்பட்டார் .  கோவிலை நெருங்கும்போதே   மருள்நீக்கியாருக்கு   உடல்   சிலிர்த்தது .  பிராகாரத்தை   வலம்   வந்து   சந்நிதி   முன்  வீழ்ந்து   வணங்கினார் .  அவருக்கு  உண   ர்ச்சிகள்   குமுறி   எழுந்தன .  அவர்   அறியாமல்   அவர் வாய்   கூற்றாயினவாறு   எனும்   பதிகத்தை தன்   சூலை   நோய்   தீரவேண்டுமென பாடிற்று.  இப்பதிகத்தை   பாடி   முடித்ததும்   அவர்   நோய்   இறைவன்   திருவருளால்   மறைந்து   போயிற்ற.   மருள்நீக்கியாருக்கு    ஐயனின்   இத்திருவருளை   நினைத்து  நினைத்து   உணர்ச்சி   பெருக்கால்   கண்ணீர்   தரை  தாரையாக   பெருகிற்று  .  'படுகுழியில்   வீழ்ந்த                        இ ப்பாவியை   மீட்கத்தான்   இந்நோயை   அளித்தாயோ ?  உனக்கு   என்ன   கைம்மாறு   செய்ய   போகிறேன்   என  பலவாறு   புலம்பினார் .

Sunday 25 March 2018

மருள்நீக்கியார்   தன்   உடன்பிறந்தவளின்   காலை   இறுக   பற்றிக்கொண்டு   தன்னை   மன்னித்து   ஏற்றுக்கொள்ளும்படி   கதறினார் . தனக்கு   அவரை   தவிர   வேறு  கதியில்லை   தன்னை   காப்பாற்றும்படி   மன்றாடினார் .  திலகவதியார்   ஐயன்   தான்   வாக்களித்தபடி   தம்பியை   ஏற்றுக்கொள்ளவே   இந்நோயை   கொடுத்தார் . இனி   தம்பியை   பற்றி   கவலை   தேவை  இல்லை   அந்த   அம்பலக்கூத்தன்   ஏற்றுக்கொள்வான் .  என்று   பூரணமாக   நம்பி கண்ணீர்   மல்க   தம்பியை   தூக்கி   எடுத்தாள் .  மாட த் திலிருந்து   கை   நிறைய   திருநீரை   எடுத்து கொடுத்து   பிற   சமயங்களை   உதறிவிட்டு   வீரட்டானத்துறை   ஈசனை   சரணடை ந்தால்   எல்லாம்   அவர்   பார்த்துக்கொள்வார்   கவலை   வேண்டாம் இத்திருநீறை   அணிந்து   கொள் .என்று   சொல்லி   அவரை   அணைத்துக்கொண்டாள் 

Thursday 22 March 2018

பாகுகன்   பாடலிபுத்திரம்   சென்று   நடந்த   விவரத்தை   தெரிவித்தார் .   மருள்நீக்கியாருக்கு   தாம்   விரும்பி   ஏற்ற   சமயத்தில்   தன்  வேதனையை   தீர்க்கும்   மருத்துவம்   கிடைக்க   வாய்ப்பில்லை   என்பதை   உணர்ந்தார் .  தன்   தமக்கையாரின்   பாதத்தில்   சரண்   அடைவதே   சரியான   மார்க்கமாக   உணர்ந்தார் .  சமண   மதத்தை   தழுவிய   தம்மை   தமக்கையார்   ஏறெடுத்தும்   பார்க்கமாட்டார்   என்பதை   உணர்ந்து   தம்   உடைகளையும்   மற்ற   உடைமைகளையும்   பள்ளியிலேயே   விட்டுவிட்டு   சாதாரண   உடையுடன்   தமக்கு   நம்பகமான   சிலருடன்   இரவோடு   இரவாக   தமக்கையை   நாடி   புறப்பட்டார் .  திருவதிகையை   அடைந்து அக்காவின்    காலடியில்   நெடுஞசாங்கடையாக   விழுந்து   அவல்   காலை   பற்றிக்கொண்டார் .  

Wednesday 21 March 2018

தருமசேனர்   வலியால்   துடிக்கலானார் .  பாடசாலையை   சேர்ந்த   சமணர்கள்   வைத்தியம்   செய்து   பார்த்தனர் .  ஆனால்   வலி   அதிகரித்தது . குறைவதற்கு   அறிகுறியே   காணவில்லை .  என்ன   செய்வது   என்று   புரியாமல்    தடுமாறினார் .  தாங்கள்  கற்ற  அத்தனை   வைத்திய   சாஸ்த்திரங்களை   பிரயோகித்தும்  ஒருவித   பயனும்   இல்லை .  ஈசன்   விளையாட்டு   அல்லவா ? அப்போதுதான்   தருமசேனருக்கு  தனக்காக   பெரிய   தியாகத்தை   செய்து    தனக்காகவே   வாழ்ந்த   தமக்கையின்   நினைவு   வந்து   அவளுக்கு   தாம்   இழைத்த   துக்கத்தை   நினைந்து   உள்ளம்   வேதனையால்   துவண்டது .  உடனே   தனக்கு   நம்பிக்கையான   நண்பன்   பாகுகனை திருவதிகை   வீரட்டானம்  அனுப்பினார் .  அவர்   திலகவதியிடம்   மருள்நீக்கியாரிடமிருந்து   வந்ததாக   சொல்லி   விவரத்தையும்   சொல்லி   அவளை   வரும்படி   அழைத்தான் .  அம்மையார்   புறச்சமயத்தை   சேர்ந்த   அப்பள்ளியை   தான்  ஏறெடுத்தும்   பாரேன்   என்று   சொல்லி   வெடுக்கென்று   சென்றுவிட்டாள் 

Friday 16 March 2018

திலகவதியார்   தம்பியின்   நிலைகண்டு   மனம்   நொந்து      ஈசனிடம்   படுகுழியில்   விழுந்து   விட்ட   தன்   தம்பியை     உன்   அடிமையாக   ஆக்கிக்கொள் '  என்று   சதா   வேண்டிய   வண்ணம்   இருந்தாள் .  ஈசனும்   மனமிரங்கி   'கவலை   கொள்ளாதே   பூர்வ   ஜென்ம   வினை   இவ்வாறு   நேர்ந்தது .  சீக்கிரமே   அவனுக்கு   சூலை   நோயை   கொடுத்து  நாம்   அவனை  ஆட் கொள்வோம் '  என்று   அவள்   கனவில்   தோன்றி   வாக்களித்தார் .  அவ்வாறே   புகழுடன்   வாழ்ந்து   வந்த   தருமசேனர்   சூலை   நோயால்   தாக்கப்பட்டு   அவதிக்குள்ளானார் .

Thursday 15 March 2018

பாடலிபுத்திரத்தில்   அந்த   சமயத்தல்   சமண மதம்   ஓங்கி   இருந்தது .  பல்லவ   மன்னன்   பேராதரவு   இருந்ததால்   அங்கு   சமண   பள்ளி   துவங்கப்பட்டு   நிறுவப்பட்டு   அம்மதம்   பரப்பப்பட்டு   தழைத்து   வந்தது .  மருள்நீக்கியார்   அங்கு   சென்றதும்   அப்பள்ளியை   அடைந்தான் ..  இவனுடைய   கூர்மையான   அறிவு   அவர்களை   மயக்கியது .  அவனை   ஏற்றுக்கொண்டு   அப்பள்ளி   பொறுப்பையும்   அளிக்க   செய்தது .  தன்னை   ஆளாக்கிய   சைவ   சமயத்தை   மறந்தான் .  தருமசேனர்   என்ற   பெயருடன்   புகழடைந்தான் . 
    சகோதரன்   சென்ற   பிறகு   திலகவாதியாருக்கு  திருவாய்மூர்   கசந்தது .  எம்பெருமானை  தேடி   திருவதிகைக்கு   சென்று  அங்கு   ஆலயத்தில்   தங்கி    பூப்பறித்து   எம்பெருமானுக்கு   மாலை   தொடுப்பது   ஆலயத்தை   சுத்தம்   செய்வது   போன்ற   பணிகளை   செய்துகொண்டு   ஈசனே   கதி   என்று   வாழ   தொடங்கினாள் . அவள்   மனம்   தம்பியின்   செய்கையால்   மிகவும்   நொந்து   போயிற்று .  அதை   மட்டும்   அவளால்   தாங்கி   கொள்ள   இயலவில்லை .  அவனுக்கு   நல்ல   அறிவு   புகட்ட   ஈசனை   பிரார்த்தித்த   வண்ணம்   காலம்   கடத்தினாள் .

Wednesday 14 March 2018

திலகவதியார்   தம்பியின்   நிலைகண்டு   இரக்கம்   கொண்டு   தீக்குளிக்கும்   எண்ணத்தை   கைவிட்டு    தம்பிக்கு   துணை   ஆனாள் .  திருமண  எண்ணத்தை   அறவே   கைவிட்டு   உலக   ஆசைகள்   எதிலும்   பற்று   அற்றவளாய்   ஈசனே   கதியென்று   வாழ   தொடங்கினாள் .  மருள்நீக்கியாரும்   தண்ணீர்   பந்தல்   அமைப்பது   அடியார்களுக்கு   அன்னம்   இடுவது   போன்ற   நற்பணிகளில்  பணம்   செலவு  செய்து   வந்தான் . இவ்வாறு   வாழ்ந்து   வந்தபோது   மருள்நீக்கியாரின்   மனம் சைவத்தை   விட்டு   மற்ற   மதங்களை   பற்றி   ஆராய   தொடங்கியது .  அக்காவின்   துரதிஷ்ட   நிலை   கண்டோ   என்னவோ  சைவ   சமயத்தில்   உயர்வை   ஏற்றுக்கொள்ள   தயங்கியது .   மற்ற   மதங்களை   ஆராய   எண்ணிய   அவன்  திடீ ரென்று   ஒரு   நாள்   ஒருவரிடமும்   சொல்லாமல்   திருவாய்மூரை   விட்டு   புறப்பட்டு    பக்கத்திலுள்ள   பாடலிபுத்திரத்திற்கு   சென்றான் .

Monday 12 March 2018

மகிழ்ச்சியுடன்   இரு  தரப்பினரும் திருமணத்திற்கான   ஏற்பாடுகளை   செய்ய   ஆரம்பித்தனர் .  துரதிஷ்டவசமாக   அப்போது   வடபகுதியில்   போர்   துவங்கி   கலிப்பகையார்   படை   நடத்தி   போருக்கு   செல்ல   வேண்டிய      நிலை .  அவரும்   போரில்   வெற்றி   வாகை   சூடி   வந்து   திலகவதியை   மணம்   செய்து   கொள்வதாக   வாக்களித்து   விட்டு   போருக்கு   சென்றார் .  திருமணம்   தடைப்பட்டதை   தாங்க   முடியாமல்   புகழனார்   சிறிது   நாட்களில்   மரணமடைந்தார் .  மாதினியார்   கணவன்   இறந்த   துக்கம்   தாளாமல்   கணவருடன்   தானும்   உடன்கட்டை   ஏறி   உயிரை   துறந்தார் .  அப்போது   விதி   விளையாடியது .  போருக்கு   சென்ற   கலிப்பகையார்   போர்க்களத்தில்   வீரசொர்க்கம்   எய்தினார் .  செய்தி   கேட்ட   திலகவதியார்   அனலிலிட்ட   புழுவாய்   துடித்தார் .  மணமாகவில்லை   என்றாலும்   மனத்தால்   அவரை   கணவனாக   வரித்து   விட்டக்காரணத்தால்   அவரை   பிரிந்து   வாழ   மனம்   ஒப்பாமல்   தன்   உயிரை   மாய்த்துக்கொள்ள   துணிந்தார் .  சிறுவனான   மருள்நீக்கியார்   அக்காவை   கட்டிக்கொண்டு   நீ   செய்யும்   இக்காரியம்   சரியா   தவறா   நான்   அறியேன் .  ஆனால்   பெற்றோர்கள்   இல்லாத   இந்நிலையில்   சிறுவன்   நான்   தனித்து   வாழ்வது   சாத்தியமில்லை.  நானும்   உன்னுடன்   தீக்குளிக்கிறேன் .  என்று   அழுதான் .  திலகவதியார்   நெஞ்சு   பொறுக்காமல்   தன்   மனதை   மாற்றிக்கொண்டு   ஈசன்   சேவை                     ஆ லையங்களில்   உழவாரப்பணி   இதையே   தன்   லட்சியமாக   கொண்டு   தவ  வாழ்க்கை   வாழ   தொடங்கினார் .

Saturday 10 March 2018

திருமுனைப்பாடி   நாட்டில்   திருவாமூர்   என்றொரு   தலம் .  அங்கு   வேளாளரில்   குறுக்கையர்   என்றொரு   வம்சம் . அவ்வம்சத்தில்   பிறந்தவர்  புகழனார் .   அவ்வம்சத்தில்   எல்லோராலும்   வெகுவாக  மதிக்கப்பட்டு  அவர் களுக்கு   தலைவராக   வாழ்ந்தவர் .  மாதினியார்   அவரது   மனைவியாவார் .  இருவரும்   மனமொத்த   தம்பதிகளாக  இல்லறம்   நடத்தி   வந்தனர் .  தம்பதியருக்கு   ஒரு   பெண்   குழந்தை   பிறந்தது .  அக்குழந்தைக்கு   திலகவதி   என்று   பெயர்   சூட்டி   அருமை   பெருமையுடன்   வளர்த்து   வந்தனர் .  சில   ஆண்டுகள்   பின்   அவர்களுக்கு   ஒரு   மகன்   பிறந்தான் ,  தம்பதியருக்கு   மிக்க   சந்தோஷம் .    பிள்ளைக்கு   மருள்நீக்கியார்   என்று   பெயரிட்டு   சிறு  வயது   முதலே   சகல   கலைகளையும்   பயிற்றுவித்து  வளர்த்தனர் .  திலகவதிக்கு   பன்னிரண்டு   வயதான போது    குலப்பண்புகள்   நிறைந்த       அவளை   திருமணம்   செய்து   கொள்ள  விரும்பி   செய்தி   அனுப்பினார்   கலிப்பகையார்   என்பவர் .  அவர்   அந்நாட்டு   மன்னனின்   சேனாதிபதியாவார் .  புகழனார்   தம்பதியும்   மன   மகிழ்ச்சியோடு   தங்கள்   சம்மதத்தை   தெரிவித்தனர் .  சுபநாளையும்   குறித்தனர் .

Wednesday 7 March 2018

தொண்டை   செம்மையே   செம்மையாக   கொண்ட            திருநாவுக்கரையன்     தன்   அடியார்க்கு   அடியேன்|