Saturday 15 March 2014

சிவபக்தி  மிகுந் த  அவர்  தன்னை  நீலகண்டதா சன்  என்று   அறிமுகம்  செய்து  கொண்டார் . சிவனை  துதித்து  2000 பாடல்கள்  புனைந்துள்ளார் . மக்கள்  அவருடைய  சிவ  பக்தியை  வியந்து  அவரை  நீலகண்ட சிவன்  என்று குறிப்பிடலானார்கள் .அவர் தென்னிந்தியாவின்  எல்லா  சிவாலயங்களையும்  தொழுது  அந்த  இறைவன்  மேல்  பாடலானார் .  அவரை  மக்கள்  64வது  நாயன்மாராக  கருதலானார் . 1900 ஆண்டு  திவனந்தபுரத்தில்  காலமானார் . அவருடைய  சிஷ்யரான  பாபநாசம் சிவன்  அவர்  பாடல்களை  பிரபலமாக்கினார் '
ஆனந்த  நடனமாடினார்  பூர்விகல்யாணி ,சம்பூமஹாதேவா  பௌளி  இவை   சில  பிரபலமான  பாடல்கள் .     

Thursday 13 March 2014

அடுத்து  நாம்  காணப்போகும்   கவி  நீலகண்ட சிவன்  ஆவார் . அவர்  வாழ்ந்த  காலம்  1839 முதல்  1900 வரை  ஆகும் . இவர்  கன்யாகுமரி யில்  பத்மநாபபுரத்தை  சேர்ந்தவர் .சிறு  வயது  முதலே  பாடல்  புனையும்  ஆர்வமும்  ஆற்றலும்  பெற்றிருந்தார் .இவருக்கு  சங்கீத  சிக்ஷை  கிடையாது . கொடக  நல்லூர்  சுந்தர  ஸ்வாமிகள்  என்பவரை   சந்தித்த பின்  சங்கீதத்தில்  ஆர்வம்  ஏற்ப்பட்டது . பாட்டு  திறமையும்  வெளிப்பட்டது . கிராம நீதி  துறையில்  15 ஆண்டுகள்  வேலை  பார்த்த பின்  வேலையை  துறந்து  விட்டு .பாட்டு பஜனை யில்   முழுவதுமாக  ஈடுபட்டார் .