Thursday 21 August 2014

sambandar

முதல் 3 திருமுறைகள்  திருஞானசம்பந்தர்  அருளியவை . அவர்  16 வயது  வரை  வாழ்ந்தார்  என்றாலும்   10000 பதிகங்கள்  பாடியதாக  சொல்லப்படுகிறது . அனால்  துரதிஷ்டவசமாக   நமக்கு  கிடைத்தவை  மிக  மிக  சொற்பமே .
 சம்பந்தர்   சீர்காழியில்  சிவபாத ஹ்ருதையர்  எனும்  அந்தணருக்கும்  பகவதி  அம்மையாருக்கும்  மகனாக  பிறந்தார் .  3வயது  பாலகனாக  சம்பந்தர்  தந்தையுடன்  கோவிலுக்கு  சென்றார் .

Saturday 16 August 2014

vedam

 திருமுறைகள் , நாலாயிர  திவ்யப்ரபந்தம்  இரண்டுமே  வேதத்தை  அடிப்படையாக  கொண்டவை . சிவபெருமானை  வேதநாயகன்  என்று  கொண்டாடுகின்றனர் .  நிறைய   பதிகங்களில்  வேதம்  குறிப்பிட  படுகின்றன ,தக்ஷிணா மூர்த்தியாக  சிவன் சனகாதி  முனி வர்களுக்கு  வேத   வேதாந்தங்களை  போதிக்கிறார் . அதேபோல்  வேதம்  தமிழ்  செய்த  மாறன்  சடகோபன்  வண்குருகூர்  என்று  நம்மாழ்வாரை  போற்றுகின்றனர் . ஆக  சிவன்,விஷ்ணு  இருவருக்கும்  பொதுவானது  வேதம் . சைவம் ,வைஷ்ணவம்  இன்னும்  பல கிளைகள்  இருந்தாலும் , அவையாவும்  இந்து சனாதன  மதத்தின் கிளைகளே.வேதம்  எல்லோருக்கும்  பொது . 

panniru thirumurai

இப்போ து  பன்னிரு திருமுறைகளை  காண்போம் .
முதல்  மூன்று  திருமுறைகள்   திருஞானசம்பந்தரால்  பாடப்பெற்றன .
4,5,6. திருமுறைகள்   திருநாவுக்கரசரால்  பாடப்பெற்றன .
7ஆம்  திருமுறை  சுந்தரரால்  பாடப்பெற்றது, .
8ஆம்  திருமுறை  மாணிக்கவாசகரின்   திருக்கோவையார் ,திருவாசகம் , திருப்பள்ளியெழுச்சி
9ஆம் திருமுறை  திருமாளிகைதேவரின்  திருவிசைப்பா , சேந்தனாரின்  திருப்பல்லாண்டு , மேலும் சில  அடியார்கள்  பாடியவை .
10 திருமூலரின்  திருமந்திரம்
11 திருமுறை  காரைக்கால்   அம்மையார்  சேரமான்  .  பெருமானார்  ,நக்கீரர் ,நம்பியாண்டார்நம்பி  இன்னும்  சிலர் .
12 திருமுறை  சேக்கிழாரின்  பெரியபுராணம் 

Friday 1 August 2014

இத்தகைய  ஈசனின்  திருவிளையாடல்கள்  பல  நிகழ்ந்த  பக்தி  அலையின்  பொற்காலம்  இது.
9ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்த  சுந்தரர்  தம் திருத்தொண்டர்  தொகை  பதிகத்தில் '' தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் . திருநீலகண்டத்து  குயவனாற்கும்  அடியேன் '' என்று  வரிசையாக  எல்லா  நாயன்மார்களையும்  .எல்லோர்க்கும்  அடியேன்  என்று  பாடுகிறார் . ஆகையால்  நாயன்மார்கள்  வரிசையில்   இவரே  கடைசி யாக  இருக்கவெண்டும்  என்றும்  குறிப்பிட்டுள்ளார்  ஐய்யங்கார் . ஆதலால்  இந்த காலம்  9 நூற்றாண்டு  வரை  இருந்திருக்க  வே ண்டும்.. இவர்கள்  எல்லோராலும்  பாடப்பெற்று  பல  அற்புதங்களை  நிகழ்த்திய  இப்பதிகங்கள்  நான்  முன்பே  கூறியபடி  12 திருமுறை களாக  தொகுக்கப்பட்டு  இன்று  வரை  எல்லா  சிவாலை யங்களிலும்  பக்தியுடன்  பாடப்படுகின்றன . சேக்கிழார்  பெருமான்  63 நாயன்மார்கள்  சரிதமும்   பாடலாக  புனைந்து .பெரிய புராணம்  இயற்றி  அதை 12வது  திருமுரையாக்கி  பெரும்  பேறு  பெற்றார் .