Thursday 28 December 2017

மக்கள்   சந்தோஷ   ஆரவாரத்தோடு   மூர்த்தியாரின்   மேல்   மலர்   தூவி   ஆரவாரித்தனர் .  அமைச்சர்   ஓடிவந்து   மூர்த்தியாரை   பணிந்து   தன்   சந்தோஷத்தை    தெரிவித்தார் .    அவரை  மேளதாளத்துடன்   அரண்மனை முடிசூட்டு   விழா   மண்டபத்திற்கு   அழைத்து   சென்றனர் .  மங்கல   நீராடலுக்கு   பின்பு   அவரை    அலங்காரம்   செய்து   சிங்காதனுக்கு   அழைத்து   செல்ல   அமைச்சர்கள்   வந்தனர் .  மூர்த்தியார்   அவர்களை   வரவேற்று   அமர   செய்து   'உங்கள்  அன்புக்கு   மிக்க   நன்றி .  ஆனால்   ஒரு   வேண்டுகோள்   நான்   சைவத்தில்   மிக்க   ஈடுபாடு   கொண்டவன் .  நாட்டில்   பெரும்பாலோர்   சைவத்தை   கடைபிடிப்பதையே   நான்   விரும்புகிறேன் .  திருநீறு   அபிஷேகமாகவும் ,     ருத்திராக்ஷமே   அணிகலனாகவும் ,  ஜடைமுடியே   கிரீடமாகவும்   இருப்பதையே   நான்   விரும்புகிறேன் .   என்று   தம்   நிபந்தனையை    உரைத்தார் .  எல்லோரும்   மனதார   ஆமோதித்தனர் .  அவரும்  சுந்தரேச   பெருமானை   மனதார   துதித்துவிட்டு   விபூதி   பூசி   ருத்திராக்ஷம்   அணிந்து   சடாமுடியுடன்   அரண்மனை   சென்று   முடிசூடி   கொண்டு   ஆட்சியை   ஏற்றார் . பாண்டிய   நாட்டில்   வெகுகாலம்   நல்லாட்சி   புரிந்தார் .  சிவனடியார்கள்   பயமின்றி   தங்கள்   இறைப்பணிகளை   செவ்வனே   செய்தனர் .  மூர்த்தியாரும்   தாம்   செய்து   வந்த   திருப்பணியை   தொடர்ந்து   செய்து   செய்து   கொண்டு   பலகாலம்   வாழ்ந்து   சிவனடி   சேர்ந்து   மூர்த்திநாயனார்   ஆனார் .

Wednesday 27 December 2017

வாரிசு   இல்லாமல்   மன்னன்   இறந்ததால்   அடுத்தது   பட்டத்திற்கு   வருபவரை   எவ்வாறு   தேர்ந்தெடுப்பது   என்ற   பிரச்சினை   ஏற்பட்டது ...  இவ்வாறு    நேரும்போது   பட்டத்து   யானையின்   துதிக்கையில்   பூமாலையை   கொடுத்து   இறைவனை  மனதார   துதித்து   தெருவில்   அனுப்பி   யானை   யார்   கழுத்தில்   மாலை   இடுகிறதோ   அவரை   அரசராக   முடி   சூடுவது  மரபு.   அதை   பின்பற்றி    பட்டத்து   யானையை   குளிப்பாட்டி   அலங்கரித்து   கோவிலை   வலம்   வந்து   தெருவில்   விட்டனர்    .   மூர்த்தியார்   மன   நிறைவோடு   ஈசனை  கும்பிட்டு   விட்டு   கோவிலுக்கு  வெளியே   வந்தார் .  பட்டத்து   யானை   மாலையோடு   கோவில்   வாசலுக்கு      வந்து   வாசலில்   நின்ற   மூர்த்தியார்   கழுத்தில்   அம்மாலையை   அணிவித்து   விட்டு   பிளிறலோடு   மண்டியிட்டு   தன்   வணக்கத்தை   தெரிவித்தது .  அவரை   துதிக்கையால்   தூக்கி   தன்   முதுகில்   அமைத்திக்கொண்டது .

Saturday 23 December 2017

மறுநாள்   காலை   அவர்   நீராடிவிட்டு   வரும்போது   அந்த   கொடுங்கோல்   மன்னன்   இரவு   இறந்து   விட்டான்   என்ற   செய்தியை   கேட்டார்  .  அவரால்   தன்   காதுகளையே   நம்ப   முடியவில்லை .  இரவில்   கனவில்   ஈசன்   உரைத்தது   நினைவு   வந்து   புல்லரித்து   போனார் .  மேலும்   ஈசன்   ஆட்சி   பொறுப்பை   இவரை   அல்லவா   ஏற்றுக்கொள்ள   ஆணை   இட்டார் .  எல்லாம்   அவன்   பொறுப்பு .  அவன்   பார்த்துக்கொள்வான்   என்று   மௌனமாக   கோவிலுக்கு   கிளம்பினார் .    இறந்து   அரசனுக்கு   பிள்ளை   இல்லாத   காரணத்தால்   அடுத்த   பட்டத்திற்கு   வருவது   யார்   என்ற   கேள்வி   கிளம்பியது .

Wednesday 20 December 2017

அவருக்கு   சுய   நினைவே   இல்லை .  தன்   கைங்கரியம்   நின்று   போன   வேதனை   அவரை   பித்தனாக்கியது .   முழங்கை   தேய்ந்து   எலும்பு   வெளிப்பட்டது .  அவர்   நிறுத்துவதாக   இல்லை .  குருதி   பெருகியது .  ஈசன்   இனி   பொறுப்பாரா ?  'அன்பனே   என்   மேல்   கொண்ட   பக்தியால்   நீ   செய்ய   துணிந்த   இச்செய்கையை   நிறுத்து .  கொடுங்கோல்   மன்னன்   இன்று   இரவு   இறந்து   போவான் .  நீயே   உன்   மனம்   போல்   ஆட்சி    செய்வாய்,  உன்   இறை   பணியும்   இனி   இனிதே   தொடரும் '  என்று   கூறி   மறைந்தார் .  திடுக்கிட்டு   விழித்த  மூர்த்தியார்   தன்   முழங்கையை   பார்த்தார் .  எலும்பு   தேய்ந்து   உதிரம்   கொட்டிய   முழங்கை   எலும்பு   சதை    வளர்ந்து   முன்போல்   ஆகி   இருப்பதை   கண்டு   ஈசனின்   அன்பை   நினைந்து   உருகி  கண்ணீர்   பொங்க   ஐயனை   மனமாற   துதித்தார் .  எம்பெருமான்   மீது   அளவு   கடந்த  பக்தி   பெருக்கெடுத்தது.

Monday 18 December 2017

எங்கு   தேடியும்   சந்தனம்   கிடைக்காத   காரணத்தால்   மனமுடைந்த   மூர்த்தியார்   கோயிலில்   அமர்ந்து   புலம்பலானார் .  ''இறைவா   உன்   அருமை   அறியாத   இந்த   மூட   அரசனிடமிருந்து   நாங்கள்   எப்போது   விடுபடுவோம் ?   தங்களுக்கு   நாங்கள்   தடையின்றி   கைங்கர்யம்   செய்ய   இந்த   மூட   அரசனிடமிருந்து   எப்போது   விடுதலை   பெறுவோம் ?   என்று   பலவாறாக''    புலம்பினார்.  நேரம்   செல்ல   செல்ல  மாலை   ஈசனுக்கு   சந்தனகாப்பு   சாற்ற   சந்தனம்   அரைக்கும்   ஞாபகம்   வந்தது .  சந்தன   கட்டை   தானே   இல்லை   தன்   கை   இருக்கிறதே   என்ற   எண்ணம்   வந்து   சந்தனம்   அரைக்கும்   கல்லில்   தன்   முழங்கையை   வைத்து   தேய்க்கலானார் .  சிறிது   நேரம்   தேய்த்ததும்   முழங்கையில்   ரத்தம்   வர   ஆரம்பித்தது .   நேரம்   செல்ல   செல்ல   குருதி   பெருக்கு   அதிகமாயிற்று .     

Saturday 16 December 2017

மன்னன்   சமண   மதத்தை   தழுவியவன்   ஆதலால்   மக்களை   சமண   மதத்தை   தழுவ   கட்டாயப்படுத்தினான் .  மறுப்பவர்களை   கடுமையாக   தண்டிக்கலானான் .   சிவனடியார்கள்   தங்கள்   தொண்டினை   செய்ய   முடியாதவாறு   பலவித   தடைகளை   செய்தான் .  பூஜை   செய்ய  எவ்வித   வசதியும்   இல்லாமல்   செய்தான் .  மூர்த்தியாரையும்   பாதிக்கும்   வகையில்   சந்தனம்   விற்பதை   தடை   செய்தான் .  அவர்   பக்கத்து   ஊர்   சென்று   சந்தனம்   வாங்கி   வந்து   தன்   கடமையை   தொடர்ந்தார் .  ஆனால்   அதற்கும்   முடியாதவாறு   அந்த    ஊர்   வியாபாரிகளை   பயமுறுத்தி   அவருக்கு சந்தனம்   விற்க   விடாமல்   தடுத்து   விட்டான் .

Friday 15 December 2017

மும்மையால்   உலகாண்ட   மூர்த்திக்கும்   அடியேன் |

மதுரை   மாநகரில்   மூர்த்தி   என   பெயர்   கொண்ட   ஒரு   சிறந்த   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  வணிகர்   குலத்தில்   பிறந்த   அவர்   சுந்தரேச  பெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .   பகவானுக்கு   சந்தனகாப்பு   சாற்றுவது   பெரும்   புண்ணிய   காரியமாக   சாஸ்த்திரங்கள்   சொல்வதை   உணர்ந்து   அத்தொண்டை   மிக   விரும்பி   மேற்கொண்டார் .  தினந்தோறும்   பகவானுக்கு   சாற்ற   சந்தனம்   அரைத்து   கொடுக்கும்   பணியை   தவறாமல்   செய்து   வந்தார் .இவ்வாறு   நடந்து   கொண்டிருந்த   காலத்தில்   கர்நாடக   மன்னன்   பாண்டிய   நாட்டை   கவர   எண்ணி   பெரும்   படையுடன்   போருக்கு   வந்தான் .   பாண்டிய   மன்னன்    கர்நாடக   படையுடன்   போரிட   முடியாமல்   தோற்று   போனான் .  பாண்டிய   நாடு   கர்நாடக   மன்னன்   வசம்   ஆயிற்று .  கர்நாடக   மன்னன்  சமண   மதத்தை   ஏற்றுக்கொண்டவன் .  அவன்   சைவர்களை   கொடுமை   செய்ய   ஆரம்பித்தான் .

Monday 11 December 2017

நேரம்   செல்ல   செல்ல   எல்லா   உயிரினங்களும்   இசையில்   மயங்கி   ஆனாயரை   சூழ்ந்து   கொண்டு      அனுபவிக்க   தொடங்கின .  எல்லா  சிறிய   பெரிய   ஜீவராசிகளும்   பகையை   மறந்து   ஒரே   மனதோடு   இசையை   தங்களை   மறந்து   ரசித்துக்கொண்டிருந்தன .  அவர்   இசை   இப்போது  விண்ணவர்களையும்    கவர்ந்தது.  தேவர்கள் ,  கந்தர்வர்கள் ,  கின்னரர்கள்   எல்லோரும்   கூடினர் .  மண்ணும்   விண்ணும்  எங்கும்   ஆனந்த   வெள்ளம் .  உமை   அன்னையும்   இசையில்   மயங்கி   ஈசனோடு   அங்கு  வந்தார் .  ரிஷபாரூடராக   அவர்கள்   காட்சி   தந்தனர் .  ஆனாயரின்   ஆனந்தத்திற்கு   அளவே   இல்லை .  அப்போது   ஈசன்   'அன்பனே   உன்   இந்த   குழலோசையை   என்   அடியார்கள்   கேட்க   வேண்டாமா?   இப்படியே   வா   என்று   அழைத்து   தன்னுடன்   சேர்த்துக்கொண்டார் 
மேய்ந்து   கொண்டிருந்த   மாடுகள்   மேய   மறந்து   நின்றன .  கன்றுகள்   தங்கள்   ஓட்டத்தை   மறந்து   அவரை   பார்த்தன .  மரங்கள்   அசையவில்லை .  பக்கத்து   சோலையிலிருந்த   பறவை   இனங்கள்   இசையில்   மயங்கி   பறந்து   வந்தன .   புதர்களில்   மறைந்து   இருந்த   ஓநாய்கள்   மான்கள்   சிறுத்தை   போன்ற   மிருகங்கள்   எல்லாம்   இசையில்   மயங்கி   அங்கு   கூடின .   இசையில்   மயங்கிய   நாகங்கள்   புற்றிலிருந்து   வெளிவந்து   படம்   எடுத்து   ஆடின .  நேரம்   செல்ல   செல்ல   அவர்   இசை   கல்லையும்   உருக்குவதாக   இருந்தது .

Friday 8 December 2017

அலைமலிந்த   புனல்  மங்கை   ஆனாயருக்கு   அடியேன் | 

மழ   நாட்டில்   திருமங்கலம்   எனும்  ஊரில்  ஆயர்   குலத்தில்   பிறந்தவர்   ஆனாயர்   என்பவர்.  அவர்   ஆயர்குலத்தின்   தலைவர் .  சிறந்த   சிவபக்தர் .    பஞ்சாக்ஷ்ரத்தை   சதா   உச்சரிப்பவர் .  தினந்தோறும்   மாடுகளையும்   கன்றுகளையும்   மேய்வதற்கு   ஒட்டி   சென்று  வருவார் .அவர்   இசையிலும்   தேர்ந்தவர் .  புல்லாங்குழலில்   பஞ்சாக்ஷரத்தை   தன்னை   மறந்து   வாசித்து   கொண்டே   இருப்பார் .  அவர்   இசையில்   மயங்காதவர்   கிடையாது .  வழக்கம்   போல்   ஒரு   நாள்   அவர்   ஆவினங்களை   மேய்த்து   கொண்டு   வனம்   சென்றார் .  அங்கு   பூத்து   குலுங்கும்   ஒரு   புன்னை   மரத்தை   கண்டார் .  அவருக்கு   உடனே    சடையுடைய   சிவபெருமான்   நினைவே   எழுந்தது .  உடனே   குழலை   எடுத்து   பஞ்சாக்ஷரத்தை   பண்ணோடு   இசைக்க   தொடங்கினார் .
  

Tuesday 5 December 2017

இத்தனை   நாள்   தவறாமல்   நடந்த   இந்த   திருப்பணி   இன்று   இவ்வாறாக   என்ன   தவறு   செய்து   விட்டேன் ?  நாங்கள்   பட்டினி   கிடந்தும் இப்பணி   தொடர்ந்து    செய்து   வந்தும்   இன்று   இவ்வாறு   உன்னை   பட்டினி   போடும்படி   ஆகிவிட்டதே .  இனி   நான்   வாழ்வதில்   அர்த்தமில்லை   என்று   கூறி   அரிவாளை   எடுத்து   தன்னை   மாய்த்துக்கொள்ள  கழுத்தில்   வைத்தார் .  அன்பு   கடலான   ஈசன்   சகிப்பாரா ?   நிலத்திலிருந்து   ஒரு   கை   நீண்டு  ''  வேண்டாம்   அன்பனே !''  என்று   கூறி   அவர்   கையை  பிடித்தது .  தாயனாரின்   மேனி   சிலிர்த்தது .  நீர்   கொண்டு   வந்த   அமுதினை   நாம்   ஏற்றுக்கொண்டோம் . உன்   பக்தியை   மெச்சினோம்  என்று   குரல்   கேட்டது .  ஈசன்   மாவடு   கடிக்கும்   அந்த   ஓசையும்   கேட்டது .  தரையில்   சிந்திய   அன்னம்   கீரை   எல்லாம்   மறைந்தன .  கணவன்   மனைவி   இருவரும்   அது   கண்டு   மகிழ்ந்தனர் .  இருவரும்   சிவனடி   சேர்ந்தனர் .  அரிவாளால்   தன்னை   மாய்த்துக்கொள்ள   எண்ணியதால்   அவருக்கு   அரிவாட்டாயர்   என்ற   பெயர்   வழங்கலாயிற்று .

Monday 4 December 2017

வெகு நாட்களாய்   உணவு   அருந்தாத   நிலையில்   தாயனார்  உடல்   மிக   தளர்ந்து   போயிருந்தார் .  அவருடைய    மனைவி  பூஜைக்கு   தண்ணீர்   மற்ற   சிறிய   பொருள்களை   ஏந்தி   கொண்டு   பின்தொடர்ந்து   சென்று   கொண்டிருந்தார் .  அவர்கள்   சாலையை   தாண்டி   புல்வெளியில்  இறங்கி   நடக்க   தொடங்கினர் . புல் வெளியில்   தரை   சமனாக   இல்லாததாலும்   தாயனாரும்   சோர்ந்து   போயிருந்தாலும்   அவர்   கால்   தடுக்கி   விழ   பின்னே   வந்த   அவர்  மனைவி   அவர்   கீழே   விழாமல்   தாங்கி   கொண்டார் .  ஆனால்   துரதிஷ்டவசமாக   கூடை   மண்ணில்   வீழ்ந்து   அன்னம்   கீரை   மாவடு   யாவும்   மண்ணில்   வீழ்ந்தன .  மனமுடைந்த   தாயானார்   தான்   தினமும்   செய்து   வந்த  திருப்பணி   இன்று   செய்ய   முடியாமல்   போனது   கண்டு   நிலைகுலைந்து   போனார் . கதறினார்   தான்   பட்டினி   கிடந்தும்   தவறாமல்   செய்து   வந்த   இத்திருப்பணி   தவற   என்ன   காரணம்   என்ன   தவறு   செய்தேன் ?  என்று   ஈசனிடம்   புலம்பினார் .

Saturday 2 December 2017


  • கீரையை   சாப்பிட்டுக்கொண்டு   ஈசனுக்கு   தம்   திருத்தொண்டை   மட்டும்   குறைவர   செய்து   வந்தார் .  தோட்டத்தில்   விளையும்   கீரை   எத்தனை  நாள்   காணும் .  கீரையும்   அற்று   விட்டது ..  கணவன்   மனைவி   இருவரும்   வெறும்   ஜலம்   குடித்துகாலத்தை   ஓட்டினர்.  ஒரு   நாள் தாயானார்   வழக்கம்போல்   தலையில்   ஐயனுக்கு   அமுது   படைக்க   அன்னமும்   கீரை யும்   மாவடுவும்   கூடையில்   வைத்துக்கொண்டு   மனைவி   பின்   தொடர   கோவிலுக்கு   கிளம்பினார் .