Tuesday 25 June 2019

அந்த   சமயத்தில்   ஒரு   நாள்   ஆனிலை   எனும்   சிவாலயத்தில்   குடிகொண்டிருக்கும்   ஈசனுக்கு   சாற்ற   பூக்குடலையில்   பூமாலை   தொடுத்து   எடுத்துக்கொண்டு    சிவகாமியாண்டார்   எனும்   சிவனடியார்  வந்து   கொண்டிருந்தார் .   அப்போது   பட்டத்து   யானை   அவரை   தள்ளி   பூக்குடலையை    தள்ளி   மாலையை   மிதித்து   நாசப்படுத்தியது .   கீழே   விழுந்த   சிவனடியார்   ஓலமிட்டார் .  அப்போது   அந்த   பக்கமாக   வந்த   எறிபத்தர்   எனும்   சிவத்தொண்டர்   மிக்க   சினமடைந்து   வெறியுடன்   தன்   மழுவால்    யானையையும்   அதன்   பாகனையும்    வெட்டி   சாய்த்தார் .   

Monday 24 June 2019

பொய்யடிமை   இல்லாத   புலவர்க்கும்   அடியேன்
பொழில்   கருவூர்   துஞ்சிய   புகழ்   சோழருக்கு   அடியேன் |

சோழநாட்டில்   உறையூரை   தலைநகராக   கொண்டு   ஆட்சி   செய்து   வந்தார்   புகழ்ச்சோழர்    என்ற   மன்னர் .   அவர்   சிவபெருமானிடம்   அளவிலா   பக்தி   கொண்டிருந்தார் .  சிவனடியார்களிடத்தும்   மிகுந்த   பக்தியுடன்   அவர்களுக்கு   சேவை   செய்து   வந்தார் .  ஒரு   சமயம்   அவருக்கு   திரை   செலுத்த   கொங்கு   தேசத்திலிருந்தும்   குடகு   தேசத்திலிருந்தும்   அரச   பிரதிநிதிகள்   வந்திருந்தனர் .  மன்னன்   அவர்களை   வரவேற்று   உபசரிக்க  மேற்கு    ராஜதானியான   கருவூரிற்கு   வந்தார் .  அங்கு   அவர்களை  உபசரித்து   கெளரவித்தார் .

Wednesday 19 June 2019

அவர்   நல்லாட்சியில்   மக்கள்   மகிழ்ந்து   அவரை   போற்றி   கொண்டாடினர் . அவர்   முடிசூடா    மன்னராக   திகழ்ந்தார் .  அவருக்கு   தில்லை   கூத்தனை   சேவிக்க  பேரவா   எழுந்தது .  உடனே   அவர்   கிளம்பி   தில்லை   சென்றார் . அவருக்கு   அங்கு   சென்று   ஆடவல்லானை   சேவித்து   கொண்ட   பிறகு   பொன்னம்பலத்திலுள்ள   முடியை   தன்   தலையில்   சூடிக்கொள்ள   வேண்டுமென்ற   ஆவல்     எழுந்தது  .   தில்லை   மூவாயிரத்தவர்களிடம்      அவர்களிடம்   தம்   ஆவலை     தெரிவித்தார் .   அவர்கள்   திட்டமாக   மறுத்து   சோழ   மன்னர்   ஒருவருக்கே   அந்த   உரிமை   என்று   கூறினர் .  கூ ற்றனார்    மனமுடைந்து   போனார் .   ஈசனை  வருத்தத்துடன்   வணங்கி   தம்   குறையை   முறையிட்டார் .  தில்லைவாழ்   அந்தணர்கள்   தாம்    மறுத்ததால்   என்ன   நேருமோ   என்று   பயந்து   தலை  மறைவாகி   விட்டனர் .   கூற்றனார்     எம்பெருமானிடம்   சரணடைந்தார் .  ஈசன்   மனமிரங்கி   அன்றிரவு   அவர்   கனவில்   தோன்றி   அவர்   தலையில்   தன்    திருவடிகளை   பதித்து   சென்றார் .  அடியாருக்கு   தேகம்   புல்லரித்து .  சந்தோஷம்   தாளவில்லை .  அவர்   பக்தி   மேலும்   பெருகிற்று .   அவ்வாறே   சிலகாலம்   வாழ்ந்து   சிவபதம்   அடைந்தார் .       

Monday 17 June 2019

ஆர்கொண்ட   வேர்க்கூ ற்றன்    களந்தைக்கோன்   அடியேன்  |

 திருக்களந்தை   எனும்   ஊரில்    கூ ற்றனார்   எனும்   பெயர்கொண்ட   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்  . சதா    பஞ்சாக்ஷ்ராம்  ஓதியபடியே    இருப்பார் .  சிவனடியார்களிடம்   அதிக   அன்பு   செலுத்துபவர் .அவருக்கு   இறைவன்   அருளால்   மிக்க   செல்வம்   சேர்ந்தது .  சதுரங்க   சேனை  குவிந்தது .  அதைக்கொண்டு   அக்கம்பக்க   நாடுகளை   வென்று  நல்லாட்சி   புரிந்து   வந்தார் .  மக்களும்   மனதிருப்தியுடன்   வாழ்ந்து   வந்தனர் .

Friday 7 June 2019

கடற்காழி   கணநாதன்   அடியார்க்கு   அடியேன் |

 சீர்காழியில்   அந்தணர்   குலத்தில்   பிறந்த   ஒரு   சிறந்த   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  பெயர்   கணநாதர் .  சிவத்தொண்டே      வாழ்வு   லட்சியமாக   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  தம்மை   நாடி   வருபவர்களையும்   அன்புடன்   வரவேற்று   அவர்களையும்   அத்தொண்டில்    ஈடுபடுத்துவார் .   எல்லோரும்   சேர்ந்து   நந்தவனம்   அமைத்து    பூச்செடிகள்   வளர்த்து   தினம்   பூமாலைகள்    ஐயனுக்கு   சமர்ப்பித்து   இன்பம்   எய்தினார் .   திருமஞ்சனத்திற்கு   நீர்    கொண்டு   வருவது .  தோட்டம்   சுத்தம்   செய்வது  கோயில்  ,  பிரகாரம்   மெழுகி   கோலம்   ,போடுவது    விளக்கு    ஏற்றுவது    ஈசனுக்கு   மனம்   குளிர   பக்தி   பாடல்கள்    பாடுவது   போன்று       பல   நற்பணிகளை    செய்து   வந்தனர் .   அவரவர்களுக்கு   பிடித்தமான   பணிகளில்       எல்லோருக்கும்      பயிற்சி      அளிப்பார் .     அவருக்கு   சம்பந்த  பெருமானிடம்   அளவற்ற    பக்தி .  அவரை   தினமும்   சந்தித்து   வணங்கி வந்தார் .அவருடைய   அருந்தொண்டுகளால்    மகிழ்ந்த   எம்பிரான்   அவருக்கு   முக்தி    கொடுத்து    அவரை  கணங்களுக்கு   அதிபர்   ஆக்கினார் .   

Tuesday 4 June 2019

சேரமான்   வருவதை   அறிந்த   சுந்தரர்   அவரை   பெரும்   மகிழ்ச்சியுடன்   எதிர்கொண்டு   சென்று   வரவேற்றார் .   தம்பிரான்   தோழனை   கண்ட   சேரமான்   அளவிலா   ஆனந்தம்   அடைந்தார் .  அவன்   அவர்   வீட்டிலே   சில   காலம்   தங்கி   அவருடன்   பல   ஆலயங்களுக்கு   சென்று   எம்பெருமானை   மனதார   தொழுது   மகிழ்ந்தார் .   பாண்டிய   நாட்டு   தலங்களை   சேவித்துக்கொண்டு   சுந்தரரை   தம்   இல்லத்திற்கு   அழைத்து   சென்றார் .  சுந்தரர்   கொடுங்கோளுரில்   சேரமான்   அரசமாளிகையில்   சில   நாட்கள்   தங்கி   இருந்தார் .  பிறகு   ஆரூர்   திரும்பினார் .  சுந்தரருக்கு   கை லாயம்   நினைவு   வந்து   மனம்   அலைபாய்ந்தது .  ஈசனுடன்   சேரும்   ஆவல்   மனதை   வாட்டியது .  அவர்   மனமுருகி   ஐயனை   வேண்ட   அவரும்   மனமிரங்கி  தேவர்களை   அவரை   அழைத்து   வர  அனுப்பினார் .  அவர் ஐராவதத்தில்   ஏறி   கைலாயம்  செல்வதை    கண்ட   சேரமான்   தன்   குதிரை   காதில்   பஞ்சாக்ஷரத்தை   ஓத   அவர்   மின்னல்   வேகத்தில்   சென்று   சுந்தரரை   அணுகி   அவருடன்   சேர்ந்து   கைலாயம்    அடைந்தார்       .