Sunday 28 August 2016

ஈசன்  நெற்றிக்கண்  திறக்க அந்த  வெப்பத்தால்  பாதிப்படைந்த  நக்கீரர்  ஈசனிடம்   மன்னிப்பு  வேண்டுகிறார் . அன்பே  உருவான  ஈசன் அவரை  மன்னித்து  வாழ்த்துகிறார்  அவர்  அகத்தியரிட ம்  செல்கிறார்  ஈசனை  துதித்து  நிறைய  பாடுகிறார் . ஈசன்  மைந்தன்  முருகனை  துதித்து  திருமுருகாற்றுப்படை  எ ன்னும்  அறிய  பாக்களையும்  பாடுகிறார் .  அவர்  முருகன்  குடியிருக்கும்  அநேக  தலங்களையும்  பாடுகிறார் . 

Thursday 25 August 2016

தருமி  அவ்வோலையை  ஆவலுடன்  அரச  சபைக்கு  எடுத்து  வந்து  அரசனிடம்  சமர்ப்பிக்கிறான் . அரசன்  மகிழ்ச்சி  அடைகின்றான் . ஆனால்  நக்கீரர்  தடுத்து  அதில்  பொருள்  குற்றம்  இருப்பதாக  கூறி  பரிசு  பெறுவதை  தடுக்கிறார்  ஈசனே  வந்து  வாதிட்ட  போதிலும்  அன்னையின்  கூந்தலுக்கு  இயற்கை  மணம்  கிடையாதென்று  வாதிக்கிறார் . கோபமடைந்த  ஐயன்  நெற்றிக்கண்ணை  திறக்க ,நெற்றிக்கண்ணை  திறந்தாலும்  குற்றம்  குற்றமே  என்று  உரைக்கிறார் . 

Monday 15 August 2016

அடுத்தது  302 முதல் 513 வரை  பாடியவர்  நக்கீரதேவ  நாயனார் .அவர்  மதுரை  நகரை  சேர்ந்தவர் . பாண்டிய  மன்னனின்  அவை  புலவராவார் . ஆவர்  திரு  முருகாற்றுப்படை  அவர்  பாக்களில்  பிரசித்தி  பெற்றது . இவரை  பற்றிய  ஒரு  சம்பவம்  மிக  பிரசித்தி  பெற்றது .மன்னனுக்கு  ஒரு சந்தேகம்  ஏற்பட்டது . அதாவது  பெண்கள்  கூந்தலுக்கு  இயற்கையாக  மணம்  உண்டா  என்பதே . இதற்கு  சரியான  விடை  அளிப்பவருக்கு  1000 பொற்காசுகள்  பரிசு  அளிப்பதாக  மன்னர்  கூறுகிறார் . ஏழை  புலவன்  தருமி  ஈசனிடம்  மன்றாடுகிறான் . தன்  வறுமை  நீங்க  வழி  காட்டுமாறு  வேண்டுகிறான் . ஈசனும்  அவனுக்கு  இரங்கி  ஓலையில்  இதன்  பதிலை  எழுதி  மன்னனிடம்  காட்டி  பரிசு  பெருமாறு  கூருகிறார் .