Friday 26 February 2016

ariurai

பிறப்பு  எனும்  விடியலும்  இறப்பு  இரவும்  மாறிமாறி  வருவது  இயற்கையின்  நியதி . பிறவிப்பிணிக்கு  ஒரே  மருந்து  பஞ்சாட்சிரமே . உடலை யும்  உள்ளத்தையும் பேணி  காத்து திருமூலரின்  உரைப்படி  நற்பண்புகளை  கடைப்பிடித்து  ஈசன்  பாதங்களே  சதமென்று   நம்புவோர்க்கு  இப்பிணியிலிருந்து  விடுதலை  நிச்சயம் . நாம்  சேர்க்கும்  செல்வம்  நமக்கு  துணை  வராது  நாடாளும்  மன்னன்  ஆனாலும்  பிச்சை  எடுப்பவன்  ஆனாலும்  ஒரே  நிலை தான் .செல்வமும்  அவ்வாறே  
நிலையற்றது . தேனீ  பூக்களை   அலைந்து  தேடி  சேகரித்து  வைக்கும் .ஆனால்  அந்த  தேன்  கூட்டை  சிதைத்து  அதை  உண்ணுபவர்  வேறு  எவரோ .நாம்  இவ்வுலகை  விட்டு  போகும்போது  நம்முடன்  அச்செல்வம்  வராது . நாம்  கடைபிடித்த  விரதங்களின்  பயன் , நாம்  செய்த  தான  தர்மங்கள்  மற்ற  ஜீவ  ராசிகளுக்கு  செய்த  புண்ணிய  காரியங்கள்  இவையே  நம்மை  தொடர்ந்து  வரும் . இளமையும்  அவ்வாறே  நிலை  அற்றது . ஆதலால்  இளமையும்  உடலில்  வலுவும்  உள்ளபோதே  புண்ணிய  காரியங்களை  செய்து  நற்கதிக்கு  வழி  தேடுங்கள் .

Saturday 20 February 2016

கொலை , களவுகள் ,காமம் ,பொய்கூறல்   மலையான  பாதகமாம்  அவை  நீக்கி  சிவனடி  சேருங்கள் ' என்று  அறிவுரை  கூறுகிறார் .புலால்  மது  இவை  உண்ணுதலை  வன்மையாக  கண்டிக்கிறார் . ஜீவ  ஹிந்சையே  கூடாது  என்கிறார் . பிறன் மனைவி  நாடாமை , ஏழ்மையை  எதிர்க்கும்  திறம்  இவையையும்  வலியுறுத்துகிறார்
ஆக்கை  நிலையாமையை  குறிப்பிடும்போது  உடல்  சாஸ்வதம்  என்று  எண்ணி  செயல் படும்   மாந்தர்களை அதன்    விளைவான  நரக  வேதனைகளை கூறுகிறார் .மீண்டும்  மீண்டும்  பிறப்பெடுக்க  வேண்டியதை  அறிவுறுத்துகிறார் . ஐம்புலன்களும்  நம்மை  ஆட்டுவிக்கும் . அண்டத்திலும்  அணுவிலும்  நிறைந்த  அப்பெருமானை  மன ஒருமைப்பாட்டுடன்  சதா நினைத்தல்  வேண்டும் .ஐம்புலன்களையும்  ஆமை  போல்  உளுக்குள்  இழுத்துக்கொண்டு  செயல்படல் , பெருமை  சிறுமை  ஒரே  போல்  ஏற்பது  இவைகளை  பழக்கத்திற்கு  கொண்டுவர  முயற்சித்தல்  அவசியம்  

Thursday 18 February 2016

உள்ளம்  பெரும்  கோயில்  ஊனுடம்பாலயம் ,வள்ளல்  பிரானார்க்கு  வாய்  கோபுர  வாசல் ,
தெள்ள  தெளிந்தார்க்கு  சீவன்  சிவலிங்கம் , கள்ள  புலனைந்தும்  காண  மணிவிளக்கே |

 உடல்  நிலையாமையை  குறிப்பிட்ட  திருமூலர்  உடலை  இழிவாக  குறிப்பிடவில்லை . அதை  ஆலயமாக  குறிப்பிடுகிறார் . ஈசனின்  கொடையாக  கிடைத்த  இவ்வுடல்  போற்றுதலுக்கு  உரியது . இது  அவர்  கருத்து .ஒவ்வொரு  ஆன்மாவிலும்  ஈசன்  உறைந்திருக்கிறான்  என்பதை  உணர்ந்தால்
இம்மானிட  பிறப்பின்  மேன்மையை  அறிய  முடியும் .  திருமூலர்  காட்டிய  வழியில்  நடந்து  ஈசனில்  தம்மை  அர்ப்பணித்து  வாழ்பவர்களுக்கு  இவ்வுலகு  ஆனந்தமயம் . பக்தி  என்ற  நிலை  ஆனந்தம்  என்று  ஒரு கவிஞர்  குறிப்பிடுகிறார் . திருமுலர்  இவ்வுடலை  பேணி  காக்க  நிறைய  அறிவுரைகள்  வழங்கு கின்றார் . அன்பு ,ஈதல் , இன்சொல்  பக்தி  இவைகளால்  மனதை  அமைதியாக  வைத்துக்கொள்ளல்  அவசியம் . உடலுக்காக  யோகம் ,ஆசனம் ,பிராணாயாமம்  போன்ற  அநேக  பயிற்சிகளையும்  அவர்  எடுத்து  உரைக்கிறார் .

Wednesday 17 February 2016

ஐந்து  பூதங்களால்  ஆன  இச்சரீரம்  ஒரு நாள்  மண்ணோடு   சேருவது  இயற்கையின்  நியதி . பெறற்கரிய  மானிட  பிறப்பை  எய்தி  இருப்பதே  புண்ணியம் . ஆனால்   வாழும்  வகை  அறிந்து  வாழ்ந்து  மீண்டும்  பிறவாத  தன்மை  எய்த  பாடுபடுவதே  நாம்  பிறவி  எடுத்ததின்  பயன் . இவ்வுடல் ,இளமை ,அழகு  எதுவுமே  சாஸ்வதம்  இல்லை . நம்மை  படைத்த ஈசன்  பாதமே  நிலையான  இன்பம் . இதை  மனதில்  கொண்டே  நாம்  எடுத்து  வைக்கும்  ஒவ்வொரு  அடியும்  இருத்தல்  அவசியம்  என்பதை  ஆழமாக   அறிவுறுத்துகிறார் . இதற்கான  நற்பண்புகளை  இளமையில்   இருந்தே  வளர்த்துக்கொள்ளல்  அவசியம் 

Monday 15 February 2016

நந்தி  அருளாலே  மூலனை  நாடிப்பின்  நந்தி  அருளாலே  சதாசிவனாயினேன்
நந்தி  அருளாலே  மெய்   ஞானத்துள்  நண்ணினேன்  நந்தி  அருளாலே  நானிருந்தேனே |

மூலன்  உரை செய்த  மூவாயிரம்  தமிழ்  ஞாலம்  அறியவே  நந்தி   அருளது ,
காலை  எழுந்து  கருத்தறிந்து  ஓதிடின்  ஞா லத்தலைவனை  நண்ணுவரன்றே |

இது திருமூலர்  வாக்கு . அவருடைய  முதல்  அறிவுரை  ஜீவஹிம்சை  கூடாது  என்பதே . புலால்  உண்பதையும்  அவர்  வன்மையாக  கண்டிக்கிறார் . எல்லா  உயிர்களிலும்  ஈசன்  குடியிருக்கிறார்   என்பது  அவர் கருத்து .   

Thursday 11 February 2016

aram

திருமுலர்  வேத  நெறிப்படி  வாழும்  வழியை  அறிவுறுத்துகிறார் . முதலில்  நாம்  அறிந்து  கொள்ள  வேண்டியது  ஆக்கையின்  நிலையாமை , இளமை . பொருள்  அழகு  எல்லாமே  நிலை  அற்றவை .ஒவ்வொருவரும்  பிறக்கும்போதே  நாம்  ஒரு  நாள்  இவ்வுலகை  து றந்து   மரணம்  எய்துவதும்  உறுதி .ஆகையால்  வாழும்போது  நாம்  கடைப்பிடிக்க  வேண்டிய  அறங்களை  அவர்  தெளிவுறுத்துகிறார் .நமக்கென்று  சில   அறநெறிகள்  நாம்  கடைப்பிடிக்க    .வேண்டியது  அவசியம் .அதுவே  திருமூலரின்  உபதேசமாகும் .

Monday 8 February 2016

purushaartham

அறம் ,பொருள்  இன்பம் , வீடு  எனும்  நான்கு  புருஷார்த்தங்களை  கண்டோம் . வேத  ஆகமங்கள்  கூறும்  இக்கருத்தினை  திருமூலர்  வலியுறுத்துகிறார் . அறமே  முதல்  இடம்  பெறுகிறது .நம்  ஒவ்வொரு  செயலும்  ஒவ்வொரு  பருவத்திலும்  அறம்  சார்ந்ததாக  இருப்பது  அவசியம் . பின்  வரும்  பாடல்களில்  அறங்களை  திருமூலர்  விரிவாக  கூறுகிறார் . பொருள்  நமக்கு  அத்தியாவசியம் .நேர்மையான  பாதையில்  நமக்கு தேவையான  அளவு  பொருள்  ஈட்டுவது  தர்மம்  ஆகும் . இன்பமும்  அவ்வாறே  தர்மத்திற்கு  உட்பட்டும்  அதீதமான  ஈடுபாடு  வைக்காமலும்  அனுபவிப்பது  நன்று . வயது  ஆக ஆக  இந்த  சிற்றின்பகளை   அகற்றி  வீடு  அதாவது  இறைவன்  தாள்  அடைவதையே  முக்கிய  கருத்தாக  கொண்டு  மனதை  அவ்வழியில்  செலுத்த  வேண்டும் . அதை  ஔவையார்  இப்பாட்டில்  விளக்குகிறார் .
ஈதல்  அறம்  தீவினை  விட்டு ஈட்டல்  பொருள்  எஞ்ஞான்றும்
காதல்  இருவர்  கருத்து  ஒருமித்து ஆதரவு
பட்டதே  இன்பம் ,பரனை  நினைந்து
இம்மூன்றும்  விட்டதே  பேரின்ப  வீடு
     

Friday 5 February 2016

upadesam

திருமுலர்  முதலில்  வேதத்தின்  சிறப்பினை  உணர்த்துகிறார் .
வேதத்தை  விட்ட அறமில்லை   வேதத்தின்  ஓதத்தகும்  அறம்   எல்லாம்  உளதர்க்க
வாதத்தை  விட்டு  மதிஞனர்  வளமுற்ற  வேதத்தை  ஓதியே  வீடு  பெற்றார்களே |
இது  திருமுலர் வாக்கு .வேதத்தை  ஒட்டியே  இவரது  உபதேசங்கள்  உள்ளன . ஆன்மா  உலகில்  பிறப்பெடுத்ததும் நமக்கென்று  சில  நெறிமுறைகளை   வேத ஆகமங்கள்  வலியுறுத்துகின்றன . அவை அறம் , பொருள் .இன்பம் ,வீடு . ஆகும் .இதை  திருவள்ள வரும்  நிறைய  குறிப்பிட்டிருக்கிறார் . ஆனால்  எல்லா  நிலைகளிலும்  நம்  ஒவ்வொரு  செயலும்  அறம்  சார்ந்ததாக  இருப்பது  அவசியம் . பொருள்  இவ்வுலகில்  வாழ  அவசியம் . ''பொருள்  இல்லார்க்கு  இவ்வுலகில்லை . அருள்  இல்லார்க்கு  அவ்வுலகில்லை '' இது  வள்ளுலர்  வாக்கு . 

Wednesday 3 February 2016

திருமூலர்  ஆக்கையை  குறிப்பிடும்போது  அதன்  நிலையாமையையும்  குறிப்பிடுகிறார் . நம் உடல் , இளமை  அழகு , உடல் பலம் ,ஆரோக்கியம்  இவை  யாவுமே  நிலையானது  அல்ல  என்பதை  குறிப்பிடுகிறார் .  இது  நம்மை  அச்சப்படுத்துவதற்கு  அல்ல . நாம்  நற் பே றடைய  இந்த  உண்மையை  மனதிற்கொண்டு  செயல்பட  வேண்டிய  அவசியத்தை  தெளிவு  படுத்துகிறார் . மாயை  நிறைந்த  இவ்வுலகில்  நல்லவைகளை  தேர்ந்து  எடுத்து  அந்த  மார்கத்தில்  நாம்  செல்ல  நம்மை  அவர்  வழி  நடத்துகிறார் . வேத  ஆகமங்கள்  கூறுவதையே  இவர்  நமக்கு  எடுத்து  கூறுகிறார் .

Monday 1 February 2016

upadesam

பொதுவாக  எல்லா  துறவிகளும்  உடலை  தாழ்வாகவே  பேசுவார்கள் . மாணிக்கவாசகர்  கூட  உடலை  அவ்வாறே  குறிப்பிடுகிறார் .  ஆனால்  திருமுலரோ " ஊனுடம்பு  ஆலயம்"  என்கிறார் . உடலை  ஈசன்  குடியிருக்கும்  ஆலயமாக  குறிப்பிடுகிறார் . முதலில்  அவர்  தரும்  அறி வுரை   உடலை பேணுவதற்கு  மார்க்கமே