Saturday 30 March 2013

(நாளூம்  இன்னிசையால்  தமிழ்  பரப்பும் ஞானசம்பந்தனுக்கு  உலகவர்முன்  தாளம்  ஈந்து  அவன் பாடலுக்கு  இரங்கும்  தன்மையாளன்)  இவ்வாறு  சுந்தரர்  ஈசனை  வர்ணிக்கிறார் .
ஈசன்  சம்பந்தரை ( பாலை)  கொடுத்து  ஆட்கொள்கிறார்.நாவுக்கரசரை ( சூலை)  கொடுத்து ம் , சுந்தரரை  (ஓலை ) கொடுத்தும்  ஆட்கொள்கிறார் .நாவுக்கரசர்  பல்லவ  மன்னனுடன்  சேர்ந்து   ஈசனை  மறந்து  பகுத்தறிவு   பாதையில்   செல்கிறார் . ஈசன்  அவன்  சகோதரியின்   வேண்டுகோளுக்கு   இறங்கி  நாவுக்கரசருக்கு   சூலை  நோயை  கொடுக்கிறார் . அவரும்   தவறை   உணார்ந்து    வீரட்டானத்துறை  ஈசனை  சரண்  அடைந்து '  கூற்றாயினவாரு ' என்னும்  பதிகம்  பாடி  நலம்  பெருகிறார் . அதன்   பிறகு  அவர் ஈசர்க்கு  தொண்டராக பெரும்   பணி  ஆற்றினார் . சுந்தரர்  திருமணத்தன்று  ஈசன்  ஓர்  ஓலையை   காட்டி  பல  தலைமுறைகளாக  சுந்தரர்  குடும்பம்  தன்  குடும்பத்திற்கு  அடிமை  என்று  அவரை திருவெண்ணெய்  நல்லூர்   அழைத்து  சென்று   " பித்தா "  என்று   அடி எடுத்து   கொடுத்து  பாட    செய்கிறார் . இவ்வாறு  இந்த  தமிழ்  இசைக்காக  அவர்   ஆற்றிய  விளையாடல்கள்  அநேகம்     

Tuesday 26 March 2013

ஆதிசிவன்  பெற்றெடுத்த  தமிழ் . அந்த  சிவன்  தமிழிசையில்  மயங்கியதில்  வியப்பு  என்ன  இருக்கிறது . குழந்தை ஞானசம்பந்தர்  குளக்கரையில்  நின்று  அழ , விடையேறும்  பெருமான்  உமை   அன்னையுடன்  காட்சி  தந்து  சம்பந்தருக்கு  ஞானப்பால்  ஊட்டினார் . 3வயது  சிறுவன்  தாளம்  போட்டு   பா டுகையில் , அவன்   கை  நோகுமென்று  தங்கதாளம்  ஈந்து  உமை  அ  ன்னையால்  அதற்கு  ஓசை  கொடுக்க  செய்கிறார் .  

Monday 25 March 2013

பக்தி  பெருக்கால்  இந்த  மகான்கள்  பாடிய  தமிழிசைக்கு  மயங்கிய  பரம்பொருள்  ஆற்றிய  திருவிளையாடல்கள்  அதிசயமானவை . பெரியாழ்வார்  கண்ணனை  மானசீகமாய்  கண்டு , தாலாட்டு  முதல்  ஒவ்வொரு  பருவ   சேட்டைகளையும்  மெய்யுருக வர்ணித்து   பாடுகிறார் . பூமிதேவியே  வளர்ப்பு  மகளாக  பெற்று  அரங் கனையே   மருமகனாக  பெருகிறார் . ஆண்டாள்  சிறு  பிராயம் முதல்  கண்ணனையே  நினைந்து  உருகி   பாடி ,  பின்பு  பாவை   நோன்பு  இருந்து  அவரையே  கணவனாக  அடையும்  பேறு  பெறுகிறாள் . திர்ப்பாணாழ்வார்   தாழ்ந்த  குலத்தை   சேர்ந்தவர்  என்பதால்  அரங்கன்  கோவில்   அந்தணர்கள்  அவரை  கடுமையாக  நடத்த , அரங்கன்  அந்தணர்கள்  கனவில் தோன்றி   ஆழ்வாரை   தோளில்  சுமந்துகொண்டு  சன்னதிக்கு   அழைத்து  வருமாறு  கட்டளை  பிறப்பிக்கிறார் . பேயாழ்வார் ,பூதத்தாழ்வார்  பொய்கை ஆழ்வார்  மூவரும் , ஒரு  மழைநாளில்  ஒரு  திண்ணையில்  ஒண்டி  நிற்க  அவர்கள்  இடையில்  நாரணன்  புகுந்து கொண்டு  பிறகு  அவர்களுக்கு  காட்சிதருகிறான் . இன்னும்  எத்தனையோ  திருவிளையாடல்கள் .இசைக்கு  இத்தனை  மகத்துவம் .        

Tuesday 19 March 2013

இவ்வாறு  இசையால்   பக்தி   வளர்த்த   மகான்களை   நோக்கினால்  ஒரு பெரிய  உண்மை   தெரிய வரும் .இவர்களில்   63 நாயன்மார்களும்  12  ஆழ்வார்களும்  பெரும்  பெருமை  பெற்றவர்கள் . பரம் பொருளை  நேரில்  தரிசித்து  பெரும்  அ ருளை   பெற்றவர்கள் . பெருமாளின்  அவதாரமாக  கருத  பெற்றார்  நம்மாழ்வார் . பெருமானின்  அருட்கட்டளையால்  ஒரு  அ ந்தணரால்   கருவறைக்கு   சுமந்து  எடுத்து  செல்லப்பட்டார்  திருப்பணாழ்வார் . ஈசனுக்கு   கண்  ஈந்த  கண்ணப்ப நாயனார் , திருனாளைபொவார் ,  இவருக்காக  நந்தி  விலகி  ஈசன்   காட்சி  அளித்தார் . இன்னும்  பல  பக்தர்கள்  பிராம்மண  வகுப்பை  சேர்ந்தவர்கள்  அல்ல .எல்லா  வகுப்பை  சேர்ந்தவர்களும்  உள்ளனர் .பெருமாளோ   ஈசனோ  இதற்கு  அப்பாற்பட்டவன் .அவர்கள்  உள்ளத்தில்  ஆழமாக  குடிகொண்டிருக்கிறான் . எந்த  வேற்றுமை யும்  இல்லை . எல்லோரும் சமம் .நாம்  ஏன் அவ்வாறு  இருக்க  தவறுகிறோம்  
சில  நூற்றாண்டுகளுக்கு  பிறகு  ஸ்ரீ ராமானுஜர்  அவதரித்தார் . அந்த  மகான்  கோவில்  வழிபாட்டு  முறைகளை   வரையறுத்து  கொடுத்தார் . கோயில்களில்  பிரபந்த பாக்களை  அபிநயத்துடன்  குறிப்பிட்ட  சிலர்   வைணவ  ஆலயங்களில்  ஆடும்  மரபு  ஏற்படுத்தினார் .அது  அரையர் சேவை என  இன்றும்  ஸ்ரீரங்கம்  போன்ற  ஆலயங்களில்   நடைமுறையில்   உள்ளது .இவ்வாறு  நாம்  பிரபந்தம்  எனும்  அறிய  போக்கிஷத்தை  அடைந்தோம் . 

Monday 18 March 2013

தேவாரம்  12  திருமுறைகளாக  தொகுக்கப்பட்ட து  போல 4000  பிரபந்தங்களும்  பண்ணிசையோடு   தொகுக்கப்பட்டன . அவை  பெரியாழ்வார்  திருபல்லாண்டு , பெரிய திருமொழி .
ஆண்டாள் - திருப்பாவை ,  நாச்சியார் திருமொழி
திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம்
தொண்டரடிபொடி  ஆழ்வார் - திருமாலை , திருப்பள்ளி யெழுச்சி
திருப்பாணாழ்வார் -அமலனாதிபிரான்
மதுரகவி ஆழ்வார் -கண்ணினுள் சிறுதாம்பு
திருமங்கை ஆழ்வார் -பெரியதிருமொழி ,குருந்தாண்டகம் ,நெடுந்தாண்டகம்
பொய்கை ஆழ்வார் - முதல்திருவந்தாதி
பூதத்தாழ்வார் - இரண்டாம்திருவந்தாதி
பேயாழ்வார் -முன்றாம் திருவந்தாதி
நம்மாழ்வார் -திருவிருத்தம் ,திருவாசிரியம் ,பெரியதிருவந்தாதி , திருவாய்மொழி