Friday 31 May 2019

ஈசன்  சேராமானுக்கு   தான்   கனக   சபையில்   சுந்தரர்      தம்மை   மகிழ்விக்க   பாடிய   பாக்களில்   மயங்கி   லயித்து   விட்டதால்   சலங்கை   ஒலி   கேட்க   தாமதம்   என்று   விளக்கினார் .  அதைக்கேட்ட   சேரமான்   ஐயன்   தம்   அடியார்களிடம்   வைத்துள்ள   அன்பை      எண்ணி       மிக்க    அதிசயம்   அடைந்தார் .  அத்துடன்   சுந்தரரையும்   காண   பேராவல்   கொண்டார் .   உடனே புறப்பட்டு       பொன்னம்பலத்தை   அடைந்தார் .  ஆனால்   சுந்தரர்  கிளம்பி       சென்று   விட்டதால்   அங்கு   ஆனந்த   தாண்டவம்   புரியும்   அம்பலவாணன்   மீது   பொன்வண்ணத்தந்தாதி   பாடி   மகிழ்ந்தார் .  மகிழ்ந்த   எம்பெருமான்   சிலம்பொலி   கேட்க   செய்து   சேரமானை   பரவசத்தில்   ஆழ்த்தினார் .    சுந்தரர்   திருவாரூர்    சென்று   விட்டதை    அறிந்த   சேரமான்      ஆரூர்   சென்றார்    

Thursday 30 May 2019

   தினமும்   ஆடவல்லானை   பூசித்து   பூஜையின்   முடிவில்   பெருமானின்   சிலம்பொலி   கேட்டு  மெய்சிலிர்த்து   கொண்டிருந்த   சேரமான்   திடீரென   ஒரு   நாள்   சிலம்பொலி   கேட்காத   காரணத்தால்   மிக்க   மனவேதனை   அடைந்தார் .  தாம்   எதோ   பெரும்    தவறு  செய்து  விட்டதாக    எண்ணினார் .   ஈசன்   அன்புக்கு   பாத்திரமான   அவர்   ஏனோ   அவருடைய   வெறுப்புக்கு   ஆளாகி   விட்டதாக   மனம்   கலங்கினார் .  அவரால்   அந்த   ஏமாற்றத்தை    தாங்க   இயலவில்லை.  ஐயன்   அன்பை   இழந்த   பிறகு   வாழ்வதில்   அர்த்தமில்லை   என்று   முடிவு   செய்தார் .  உடனே   தன்   வாளை   எடுத்து   தன்னை   மாய்த்துக்கொள்ள   முனைந்தார் .  அப்போது   அவருக்கு   சிலம்பொலி   கேட்டது .  உடனே   சேரமான்   வாளை   எறிந்து   விட்டு   ஐயனே   உயிரை   மாய்த்து   கொள்ள  முனையும்   வரை   ஏன்   இந்த   தாமதம்   என்று   வினவினார் .       

Wednesday 29 May 2019

உடனே   அமைச்சரை   அழைத்து    பொன்னும்  மணியும்   ஆடைகள்   கொண்டு   வர   செய்து   பாணபத்தரிடம்   எம்பெருமான்   திரு   உள்ளபடி   இவற்றை   சமர்ப்பிக்கிறேன் .  இன்னும்   இவ்வரசு   உரிமையையும்   தர   சித்தமாக  உள்ளேன்   என்று   கூறினார் .  பத்தர்   அரசருக்கு   ஈசன்   அடியார்களிடம்    உள்ள     தன்னலமற்ற   அன்பை   கண்டு   மெயசிலிர்த்து   போனார் .   பேச   வாயெழவில்லை .   ஐயனே   எனக்கு   தேவையான   அளவு   திரவியம்   எடுத்துக்கொள்ளவே   ஈசன்   ஆணை .  ஆகவே   வேண்டியதை   எடுத்துக்கொள்கிறேன்   என்று   சொல்லி   அவ்வாறே   செய்தார்   பத்தர் .  அவரை   நகர   எல்லைவரை   வந்து   வழி   அனுப்பினார்   சேரமான் .
 பாணபத்திரர்   மறுநாளே   மதுரையை   விட்டு   கிளம்பி    கொடுங்கோளூர்   சென்றார் .  அரண்மனை   சென்று   சேரமானை   சந்தித்து   ஐயன்   திருஉள்ளத்தை   தெரிவித்து   அவர்   கொடுத்த   ஓலையையும்   கொடுத்தார்.   அதை   வாங்கி   தலைமேல்   வைத்து   கண்களில்   ஒற்றிக்கொண்டு   அதை   படித்தார் .  அவருக்கு   ஆனந்தம்  தாளவில்லை .  'என்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   திருமுகம்   கொடுத்து   அனுப்பினாயே  .உன்   கருணையை   என்சொல்லி   போற்றுவேன் .  என்று   மெய்யுருக   தொழுதார் .  ஓலையை   மீண்டும்   மீண்டும்   படித்து   மேனி   சிலிர்த்தார் . சந்தோஷம்   தாங்காமல்   கூத்தாடினார் .

Thursday 23 May 2019

அரண்மனை   அடைந்த   சேரமான்   தன்   அடியார்   தொண்டிற்கு   எக்குறை  வராமல்   அரச   காரியங்களையும்   இனிதே   நிறைவேற்றி   மக்களை   செம்மையே   வழிநடத்தினார் .  தில்லையில்   ஆனந்த   கூத்தாடும்   அம்பலவாணனிடம்    எல்லையற்ற   பக்தி   கொண்டு   தினமும்   அவரை   பூஜித்து   வந்தார் .   இறைவனும்      பக்தன்   பால்   அளவற்ற   பாசம்கொண்டு   பூஜையின்   முடிவில்  தன்   பாத   சிலம்பொலி   கேட்கும்படி   அருள்   செய்து   வந்தார் .   இவ்வாறு   இருக்கையில்   மதுரையில்   சோமசுந்தர   பெருமானிடம்   மிக   பக்தியுடன்   தன்   இன்னிசையால்   ஈசனை   ஆராதித்து   கொண்டு   பாணபத்தர்   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு   இரங்கிய   ஐயன்   அவருக்கு   உதவ   எண்ணி   அவர்   கனவில்   தோன்றி   '  உனக்கு   பொன்   பொருள்   கொடுத்து   உதவ   சொல்லி   சேராமனுக்கு   திருமுகம்    கொடுக்கிறோம் .     தாமதிக்காது      அவரிடம்   அதை   காட்டி   பொருள்  பெற்றுக்கொள்ளும்   என்று   கூறி   திருமுகத்தை   கொடுத்து   மறைந்தார் .

Wednesday 22 May 2019

கழற்றறிவார்   என்று   பட்டப்பெயர்    பெற்ற   பெருமாக்கோதையார்   அமைச்சர்கள்   விருப்பத்தை   ஏற்று   சேரநாட்டு  மன்னனாக       முடி   சூடினார் .  செங்கோலை   தாங்கிய   சேரமான்   பட்டத்து   யானை    மீதேறி   ஆலயம்   சென்று   இறைவனை   மனதார   வழிப்பட்டு   ஊர்வலமாக   அரண்மனை   திரும்பினார் .   வழியில்   வண்ணான்   ஒருவன்   துணி   வெளுக்க   உபயோகிக்கும்   உவர்மண்   பொதியை     தோளில்   சுமந்து  கொண்டு   எதிரே   வந்தான் .  உவர்   மண்   மழையினால்   கரைந்து   அவன்   உடலெல்லாம்   வெள்ளையாக   வழிந்து   திருநீறு   பூசினாற்போல   காணப்பட்டது .   அதை   கண்ணுற்ற   சேரமான்   மனதில்  சதா   குடி   இருக்கும்  சிவபெருமான்     அடியாராக   வண்ணான்   காட்சி   அளித்தான் .   உடனே   யானையிலிருந்து    இறங்கி   அவன்   காலில்   விழுந்தார்.      வண்ணான்   நடுங்கி   ஐயா   நான்   வண்ணான்  என்று   நடுங்கியபடி   கூறினான்.   ஆனால்   சிறிதும்   கலக்கமடையாத   சேரமான்   'அடியேன்   சேரன் .  எனக்கு   சிவனடியார்   கோலத்தை   காட்டினீர்.  மகிழ்ச்சி .  வருந்தாமல்   செல்லுங்கள் '   என்று   கூறி    அனுப்பினார்   என்னே   அவர்  சிவபக்தி .

Tuesday 21 May 2019

கார்கொண்ட   கொ டைக்கழறிற்றறிவார்க்கும்  அடியேன் |
சேரநாட்டில்   திருவஞ்சைக்களம்   சிவபெருமான்   கோயிலை   தன்னகத்தே   கொண்ட    கொடுங்கோளூரில்   அரச   பரம்பரையில்   பிறந்தவர்    பெருமாக்கோதையார் .   சிவபெருமானிடம்   அளவுகடந்த   பக்தி   கொண்டவர் .  எதிலும்   பற்றிலாதவர் .    ஆலயம்   செல்வதற்கு   ஒரு   நாளும்  தவறமாட்டார் .   அரச   பதவியிலும்   சிறிதும்   நாட்டம்   இல்லாதவர் . 
அப்போது   அரசாண்ட செங்கோற்பொறையான்   எனும்   அரசன்   பதவியில்   சிறிதும்   நாட்டம்   இல்லாமல்   தவ   வாழ்வை   மேற்கொள்ள   ஆவல்   கொண்டான்.  ஆகையால்   வேறு   ஒரு   தகுந்த   அரசனை   தேர்ந்தெடுக்கும்படி    கேட்டுக்கொண்டான் .   அமைச்சர்கள்   கூடி   ஆலோசித்து   அரசாள    மிக   தகுதி   வாய்ந்தவராக   பெருமாக்கோதையாரை     தேர்ந்தெடுத்து   அவரிடம்   தங்கள்   அவாவை  தெரிவித்தனர் .    அவர்   அஞ்சைக்கள   பெருமானை   கேட்டு  முடிவு   சொல்வதாக   கூறி   அங்கு   சென்று   ஈசனிடம்      விண்ணப்பித்தார் .   ஈசன்  அவர்   விண்ணப்பத்தை      ஏற்று   அவருக்கு   எதிராளியின்   மனதை   அறியும்   பெரும்   திறமையை   கொடுத்து   நல்லபடியாக   ஆட்சி   செய்யுமாறு   கட்டளை        இட்டார் .  இதனால்   அவர்   கழற்றறிவார்   எனும்  பட்டம்   பெற்றார் .

Thursday 16 May 2019

மகனுடன்   வந்த   அடிகளை   கண்ட   அம்மையார்   விருந்தாளியுடன்   வராத   காரணம்   வினவினாள் .  பரஞ்சோதியார்   நடந்ததை   விவரித்தார் .  வேறு   பிள்ளை   கிடைத்தாலும்   மனம்   கலங்காமல்   பையனை   வெட்டும்போது   பிடித்துக்கொள்ள   தாயார்   கிடைக்க   மாட்டாள்   என்ற   காரணத்தால்   தன்   மகனையே   அழைத்து   வந்ததை   உரைத்தார் .  அப்பத்தினியும்   கணவரின்   கொள்கை   நிறைவேறுவதை   நினைத்து      மனசாந்தியுடன்    தன்   கடமையை  செய்தாள்    .  ஈசன்   கேட்டபடியே    உணவு   தயாரித்து   தம்பதிகள்   விருந்தா.ளியை   வரவேற்றனர் .  ஈசனும்   உணவு   அருந்த   அமர்ந்து   அடிகளையும்   அமரச்சொல்லி   பிறகு   சீராளனையும்   உணவுக்கு   அழைக்க   கூறினார் .  அடிகள்   துக்கத்தை   அடக்கிக்கொண்டு   அவன்   இந்த   வேளைக்கு   உதவ    மாட்டான்     என்று   உரைத்தார் .  ஈசன்   விடாப்பிடியாக   வாசலில்   சென்று   அவனை   கூப்பிடும்   என்று   வற்புறுத்தனார் .   அவரும்  சென்று   மகனே   சீராளா   என்று   அழைத்தார் .  என்ன   அதிசயம்   பள்ளியிலிருந்து   வருவது   போல்   மகன்   வந்தான்  .  அன்னை   சந்தோஷம்   தாங்காமல்   ஓடி  சென்று   மகனை   தழுவிக்கொண்டாள் .   மூவரும்   உள்ளே   சென்ற   போது   சிவனடியாரை  காணாமல்    திகைத்தனர் .  அப்போது  ஈசன்    உமையுடன்   காட்சி   அளித்து   உங்கள்   பெருமை   உலகு   அறியவே   இந்த   நாடகம்   என்று  கூறி   அவர்களுக்கு   சிவபதம்   அளித்தார் .

Wednesday 15 May 2019

பரஞ்சோதியார்   உடனே   மகிழ்ச்சியுடன்  ஸ்வாமி   தயங்க   வேண்டாம் .  என்னிடம்   ஏராளமான   பசுக்கள்   உள்ளன . உடனே   உணவு   தயார்   செய்கிறேன்   என்றார் .  உடனே   பைரவர்   அவசரப்படாதீர்    நான்   சொல்வது   நரப்பசுவாகும் .  அதுவும்   ஐந்து   வயது   சிறுவன்   மாமிசம் .  அதுவும்   அவன்   பெற்றோருக்கு   ஒரே   மகனாக   இருக்க   வேண்டும் .  தந்தை   அவனை   வெட்டும்போது   தாயார்   சிறிதும்   கண்கலங்காமல்   மகிழ்ச்சியோடு   பையனை   பிடித்துக்கொள்ள   வேண்டும் .     அவ்வாறு   படைத்தால்தான்    நமக்கு   பிரீத்தி   என்று   கூசாமல்   உரைத்தார் .  பரஞ்சோதி   என்கிற   சிறுத்தொண்டரும்   மகிழ்ச்சியுடன்   சம்மதம்    தெரிவித்தார் .  பள்ளிக்கு   சென்று   பிள்ளையை   அழைத்து   வந்தார்.

Monday 13 May 2019

ஈசனே   தன்   திருவிளையாடலை   தொடங்கியபின்   பரஞ்சோதி  அடிகளுக்கு   வேறு   அடியார்   கிடைப்பாரா ?   மனசோர்வோடு   வந்த   கணவனை   கண்ட   திருவெண்காட்டு   நங்கையார்   அடியார்   ஒருவர்   வந்ததையும்   தனியாக   பெண்கள்   இருக்கும்   இல்லத்தில்   தாம்   நுழைவதற்கு   இல்லை   என் றும்   கோவிலில்   காத்திருப்பதாகவும்   சொன்ன   விவரத்தை   சொன்னார் .  மகிழ்ந்த   அடிகளார்   கோவிலுக்கு   விரைந்தார் .   அவரை   மரியாதையுடன்   அழைத்து   வந்தார் .   பைரவர்   உருவில்   வந்த   எம்பெருமான்   உம்மைப்பற்றி   கேள்விப்பட்டிருக்கிறேன் .  அதனால்   உம்மை   காண   வந்தேன் .  ஆனால்   எனக்கு   உணவளிக்க   உம்மால்   ஆகாது .  என்று   கூறினார் .  திடுக்கிட்ட   அடிகளார்   அப்படி   சொல்லாதீர்கள் .  எப்படிப்பட்ட   உணவானாலும்   அளிக்கிறேன்   தயை   செய்து   சொல்லும்   என்று  வற்புறுத்தினார் .   உடனே   ஈசன்   நான்   வட   தேசத்தவன் .   நான்   ஆறு   மாதத்திற்கு   ஒரு   முறைதான்   உணவு  அருந்துவேன் .  அதுவும்  பசுமாமிசம்தான்  .என்றார் .   

Thursday 9 May 2019

இவ்வாறு   சிருட்தொண்டர்   மனைவி   மகனுடன்   தம்   இறைத்தொண்டை   செவ்வனே   செய்து   கொண்டு   வாழ்ந்து   வரும்   நாளில்   ஐயன்   அவர்களை   சோதித்து   ஆட்கொள்ள   எண்ணியவராய்   பைரவர்   வேடம்   தாங்கி   தொண்டரை   தேடி    திருச்செங்காட்டங்குடி   வந்தார் .    அவர்   இல்லத்தை   அடைந்து   தாதி   சந்தண நங்கையிடம்    தினம்   சிவனடியார்களுக்கு   அமுது   வழங்கும்   சிறுத்தொண்டர்   வீடு   இதுவா?  என்று   வினவினார் .  அவள்   பதில்   சொல்வதை   கேட்டு   தொண்டரின்   மனைவி   திருவெண்காட்டு   நங்கை   வெளியில்   வந்து   பைரவர்   வேடம்   தரித்து   வந்த   ஐயனை   இனம்   காண   முடியாதவளாய்    அவர்   அமுது   படைக்க   அடியாரை   தேடி   சென்றிருப்பதாகவும்   உள்ளே   வந்து   அமரும்படியும்   கூறினாள் .    ஈசன்   பெண்கள்     தனியே    இருக்குமிடத்துக்கு   தாம்   வர   இயலாது   என்றும்   ஆலயம்   சென்று   அங்கு   ஆத்தி   மரத்தடியில்   காத்திருப்பதாகவும்   அவள்   கணவரை    அங்கு  அனுப்ப   கூறினர் .    

Monday 6 May 2019

மனம்   நெகிழ்ந்த   மாமல்லன்   கண்கள்   கலங்க     சேனாதிபதியை   வணங்கி   'ஐயனே   இனியும்   உம்மை  சேவகனாக   கருத   என்   மனம்   இடமளிக்கவில்லை .  மன   தூய்மையோடு   நான்   வழங்கும்   இவைகளை   ஏற்று   கொண்டு   உம்   இறைத்தொண்டை    தொடர   வேண்டுகிறேன்' என்று    சொல்லி   பொன்னும்   பொருளும்   அவர்   பாதங்களில்   சமர்ப்பித்தான் .   பரஞ்சோதியார்   அவைகளை   பெற்றுக்கொண்டு   தம்  சொந்த   ஊரான   திருச்செங்காட்டங்குடி   வந்தடைந்தார் .   அங்கு   தங்கி   மனைவியருடன்   தம்   இறைத்தொண்டை     மனமகிழ்வோடு  தொடங்கினார் .   இப்படி   இருக்கையில்   அத்தம்பதியருக்கு   ஒரு    ஆண்   குழந்தை   பிறந்தது .  அதற்கு   சீராளன்   என்று   பெயர்     சூட்டி   அருமை  பெருமையுடன்   வளர்த்து   வந்தனர் .  ஆளுடை   பிள்ளையரான   சம்பந்தர்   அந்த       பக்கம்   விஜயம்   செய்த   போது   அவரை   தம்   இல்லத்தில்   தங்க  வைத்து   அமுது   செய்வித்து   பரமானந்தம்    அடைந்தார்   சிறுத்தொண்டராகிய    பரஞ்சோதியார் .  சம்பந்தப்பெருமான்    அவர்  பெருமையை   'பைன்கோட்டூ   மலர்ப்புன்னை '  எனும்   பதிகத்தில்  சிறப்பித்து    பாடியுள்ளார் .

Saturday 4 May 2019

பல்லவ   மன்னன்   மாமல்லன்   பரஞ்சோதியின்   மாபெரும்   சாதனையை   கண்டு   மிக்க   அதிசயித்து    அவரை        கவுரவித்து   பெரும்   பரிசளிக்க   விரும்பினான் .   அமைச்சர்களும்   பிரதானிகளும்   கூட்டி  அச்சபையில்  பரஞ்சோதியின்    ஈடு   இணையற்ற    செயல்களை   வெகுவாக   பாராட்டி   அவரை   போற்றி    கொண்டாடினான் .   அதை   அடுத்து   பேசிய   ஒரு  அமைச்சர்    அவருடைய   பெரும்   சிவத்தொண்டை   வெகுவாக   போற்றி    இப்படிப்பட்டவர்களுக்கு     இவ்வுலகில்   எதிரிகள்   இருக்க   முடியாதன்றோ   என்று  முடித்தார் .    மன்னன்   மிக்க   அதிர்ச்சி   அடைந்தான் .   இவ்வாறு   பெரும்   அடியாரை   போருக்கு   அனுப்பி   பெரும்   பாவத்தை   செய்து   விட்டேனே   என்று   பெரிதும்   வருந்தினான் .  ஆசனத்தை   விட்டு   இரங்கி   பரஞ்சோதி   கால்களில்      விழுந்து   அறியாமல்   தான்   செய்த   பிழையை    மன்னிக்க   வேண்டினான் .  அனால்   பரஞ்சோதி   பெருந்தன்மையுடன்     மன்னா   இதில்  தவறு   என்ன   உள்ளது   .படை   தலைவனாக  என்    கடமையை   தான்   செய்தேன் .  இதில்   உமது  தவறு   ஏதும்   இல்லை .  என்று   சமாதானம்   செய்தார் .

Thursday 2 May 2019

பல்லவ   மன்னன்   பரஞ்சோதியை   மரியாதையுடன்   அழைத்து   பல்லவ   சேனைக்கு    தலைவனாக   பதவி   ஏற்றுக்கொள்ள   வேண்டிக்கொண்டார் .  பரஞ்சோதியும்   சம்மதித்து   அப்பதவியை   ஏற்றுக்கொண்டார் .   ஆனால்   அவர்   சிவத்தொண்டை   கைவிடவில்லை .  பழையபடியே    செவ்வனே   செய்து   வந்தார் .  இப்படி   இருக்கையில்    சாளுக்கர்களுடன்   பல்லவர்களுக்கு   போர்   மூண்டது .   பரஞ்சோதி   பல்லவ   படையை   நடத்தி   சென்று    வாதாபி    சேனையை     சின்னாபின்னமாக்கி    பெரும்  வெற்றி யை    பல்லவர்களுக்கு   தேடி   தந்தார் .  வாதாபியை   அழித்து   பெரும்    செல்வத்தை   பல்லவ     மன்னரிடம்   சமர்ப்பித்தான் .    மன்னன்   நரசிம்ம   பல்லவன்   அடைந்த   ஆனந்தத்திற்கு    அளவே   இல்லை .      இத்தனை   சாதுர்யமாக     வெற்றி         தேடி   தந்த   சேனாதிபதியை   கௌரவிக்க    மன்னன்   மிக்க    ஆவல்   கொண்டான்.