Monday 30 September 2019

சிலந்தியின்   தூய   பக்தி   காரணமாக   அந்த   வலை   பின்னியது   என்ற   உண்மை   அறியாத   அந்த   யானை   தான்   அபிஷேகம்   செய்து   மலர்   அர்ச்சனை   செய்த   அவ்விடத்தை   அசுத்தம்   செய்வதாக  எண்ணியது .  இவ்வாறு   தினம்நடப்பதை   கண்ட   யானை வலையை     அறுத்து   எறிய   ஆரம்பித்தது .  இவ்வாறு   சிலந்தி   வலை   பின்னுவதும்   யானை    அறுப்பதும்   தொடர்ந்தது .தன்   ஈசன்   தொண்டிற்கு   அந்த   யானை   இடர்   விளைவிப்பதாக   கருதிய   சிலந்தி   அதன்   துதிக்கையினுள்  புகுந்து   கடித்தது .    யானை   வலி   பொறுக்காமல் தன்   துதிக்கையை   தரையில்   அடித்து   கொண்டு   இறந்தது .  சிலந்தியும்    வலி   பொறுக்காமல்   இறந்தது .   பக்தியில்   முழு   ஈடுபட்டிருந்த   இரு   ஜீவன்களும்   முக்தி   அடைந்தன .  எம்பெருமானை   உள்ளன்போடு    வழிப்பட்ட   யானை   சிவலோகம்    அடைந்தது .   சிலந்தி    சோழ   ராஜ   குமாரனாக   மறு   பிறவி   எடுத்தது .   

Saturday 28 September 2019

தென்னவனாய்   உலகாண்ட   செங்கணார்க்கு   அடியேன் |

சோழ   நாட்டில்   சந்திர   தீர்த்தத்தின்   பக்கத்தில்   ஒரு   வனம்   இருந்தது .  அவ்வனத்தில்  ஒரு   நாவல்   மரத்தடியில்   ஒரு   சிவலிங்கம்   வெளிப்பட்டது .  அந்த   வனத்தில்   திரியும்   ஒரு   வெள்ளை   யானை   பூர்வ   ஜென்ம   விளைவோ    என்னவோ   லிங்கத்தின்   மீது   பக்தி   மேலிட்டு   பூஜை   செய்ய ஆவல்   மேலிட்டு  தன்   துதிக்கையில்   சந்திர   தீர்த்தத்திலிருந்து   ஜலம்   முகர்ந்து       சென்று   லிங்கத்திற்கு   அபிஷேகம்   செய்தது .  மலர்   கொய்து   சென்று   அர்ச்சனை   செய்தது .  இதன்   காரணமாக   இவ்விடம்    திருஆனைக்கா   என்று   அழைக்க   பட்டது .
      அந்த  மரத்தில்    வாழ்ந்த   சிலந்தி   ஒன்றும்   அவ்வாறே   பக்தி   மேலிட்டு   காய்ந்த   தழைகள்   லிங்கத்தின்   மேல்   விழுந்து   ஐயனை   அசுத்தம்   செய்வதை   சகிக்காமல்   தன்   வலையை   லிங்கத்தின்   மேல்   பின்னி   லிங்கத்தை   காத்தது .   

Friday 27 September 2019

  காம்பிலி   நகரத்தில்   சாலியர்   குலத்தில்   நேசர்   எனும்   பெயர்   கொண்ட   அன்பர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்  சிவபெருமானை   மிக்க   பக்தியுடன்   சேவிப்பவர் .  அவருடைய   அபார   சிவபக்தியும்   அவருடை   நற்குணங்களும்   அவரை   அக்குல   தலைவன்     ஆக்கியது .   மகிழ்ச்சியுடன்   அப்பொறுப்பை   ஏற்று   மக்களுக்காக   மிக   பாடுபட்டு   உழைத்தார் .     நெஞ்சத்தில்   எம்பெருமானையே   நினைத்து   கொண்டு   பஞ்சாக்ஷரத்தை    ஜபித்தபடியே   இருப்பார் .   அடியார்களுக்கு   வேண்டியதை   மனம்   குளிர   செய்து   மகிழ்வார் .   இவ்வாறே   வாழ்ந்து   இறைவன்    திரு   அருளுக்கு   பாத்திரமாகி   அவர்     திருவடியையே   அடைந்தார் .      

Wednesday 25 September 2019

வரிவளையாள்   மானிக்கும்   நேசனுக்கும்   அடியேன் |

 சோழ   மன்னர்   குலம்   விளங்க   அவ்வரச   தம்பதியருக்கு   மகளாக   பிறந்தார்   மங்கையர்க்கரசியார் .  சிறு   வயது   முதலே   சிவபெருமானிடம்   அபார   பக்தி   கொண்டு   வாழ்ந்தா ர் .   சைவம்   தழைக்க   வேண்டுமென்ற   பேராவல்   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  வயது  வந்ததும்   பாண்டிய   மன்னன்   நெடுமாறனை   மணந்தார் . துரதிஷ்டவசமாக     துர்சகவாசத்தால்   மன்னன்   சைவம்   துறந்து     சம ண      மதம்   சேர்ந்தான் .   அரசியார்   மிக்க   வேதனை   அடைந்தார் .  ஈசனையே   சரணமென்று   அடைந்தார் .   அவர்   வேதனை   ஈசனை    மனமிறங்க  செய்தது   அப்போது   அம்மையிடம்    ஞான   பாலுண்ட   ஞானசம்பந்தர்    சைவம்   தழைக்க   பெரும்    சேவை      செய்து   வந்ததை   அறிந்த   அரசியார்   அவரை   சரணம்   அடைந்தார் .  அவரும்    அவர்      வேண்டுகோளுக்கு    இணங்கி   பாண்டிய  நாடு   வந்து    அனல்    வாதம் ,  புனல்   வாதம்   செய்து    வென்று       சமணர்களை   நாட்டை   விட்டு   ஓட   செய்தார் .  மேலும்   மன்னவன்    கூனை   நிமிர்த்தி   நின்றசீர்  நெடுமாறன்   என்று   மாற்றினார் .  மன்னன்   சைவத்தின்   பெருமை   உணர்ந்தான் .   மங்கையர்க்கரசியார்   மன்னனோடு   சேர்ந்து  சைவ   தொண்டாற்றி   பெரும்   பேரடைத்தார் .   

Tuesday 24 September 2019

அரசன்   அடியாரின்   ஸ்பரிசத்தால்   மெய்சிலிர்த்து   போனான் .  அவன்   கண்ட   காட்சி   அவரை   புல்லரிக்க   வைத்தது .   வானளாவிய    கோபுரம்   எங்கும்   மங்கள   ஒலி .  வேத   மந்திரங்கள்   ஓத   அர்ச்சகர்கள்   குடங்களில்   மந்திரித்த    நீரை   ஐயன்   திருமேனியில்   அபிஷேகம்   செய்யும்   அரிய   காட்சி .  அரசன்   மெய்சிலிர்த்து   போனான் .  எப்பேர்ப்பட்ட   அரிய   காட்சி .  தன்னை   மறந்தான் .   தன்நினைவு   பெற்ற   அரசன்   பூசலார்   காலடியில் விழுந்து      வணங்கினான் .  அவரிடம்   'ஸ்வாமி   தங்கள்   அருளால்   காண   கிடைக்காத    காட்சி   கண்டேன் .  தங்கள்   மனதில்   எழுந்த   இந்த   அற்புத   ஆலயத்தை   நான்   கண்டிப்பாக   நினைவாக்குவேன் .   விரைவிலேயே   ஆலய   பணிகளை   துவங்குகிறேன் .'  என்று   கூறி   ஆசிபெற்று   காஞ்சி   திரும்பினான் .   ஊர்   மக்கள்   அவருடை   பெருமையை   உணர்ந்து      கொண்டு   அவரை   வெகுவாக   கொண்டாடினர் .  அவரும்   ஈசன்    தொண்டில்   தொடர்ந்து    அர்ப்பணித்து   வாழ்ந்து   சிவமானார் .       

Sunday 22 September 2019

பூசலார்   திடுக்கிட்டார் .  தம்   மனதிற்குள்   ஆலயம்   எழுப்புவது   தன்னையன்றி    ஓர்  ஈ   எறும்பு  கூட   அறியாதே    மன்னவர்   எவ்வாறு   அறிந்தார்   என்று   அதிசயித்து    'மன்னவா   ஆலயமா ?  தடுமாறினார் .  அரசன்   இரவு   தன்   கனவில்  ஈசன்   தோன்றி   கூறியதை   பூசலாரிடம்   வியப்புடன்   தெரிவித்தார் .  கும்பாபிஷேகத்தை   காணவே   தான்   அவசரமாக   விடிகாலையிலேயே   கிளம்பி   ஆலயத்தில்   பிரவேசிக்கும்   ஐயனை   மனம்   குளிர   தரிசிக்க   வந்ததாக   அரசன்   ஆச்சர்யத்துடன்   தெரிவித்தார் .  பூசலார்   கண்கள்   கண்ணீரை   சொரிந்தது .  அவரால்   உணர்ச்சியை   கட்டுப்படுத்த   இயலவில்லை .  மன்னவா   நான்    ஆலயம்   எழுப்ப   பேராவல்   கொண்டது   உண்மை .  ஆனால்   அது   நிறைவேறாது   போனதால்   என்   மனதிலேயே   ஆலயம்    எழுப்பினேன் .  என்   ஏமாற்றம்   தணிய   அவ்வாறு   செய்து   இப்போது   கட்டி   முடிந்து   கும்பாபிஷேகம்    நடக்கும்   தருவாயில்      இருப்பதாக    கூறி  விட்டு   இதோ   தயாராக    இருக்கிறது  .  அர்ச்சகர்கள்   தயாராகி   கொண்டிருக்கிறார்கள் .   எம்பெருமான்   என்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   உன்னையும்   அனுப்பி   இருக்கிறாரே !   கண்களில்   நீர்   ததும்ப   உணர்ச்சி  வசப்பட்டு           மன்னரை   நீயும்   தரிசிக்க   வேண்டாமா ?  என்று   கூறி   அவர்   கையை   தன்   மார்பில்   வைத்து   அவரை   அணைத்து   கொண்டார் .

Saturday 21 September 2019

அரசன்   'பூசலார்   எங்கே   இருப்பர்   'என்று   வினவ   அவர்கள்   'ஏரிக்கரையில்   எங்காவது   தியானத்தில்   இருப்பார் .  ஆட்களை  அனுப்பி   அழைத்து   வர   சொல்கிறோம் '  என்றனர் .  திடுக்கிட்ட   அரசன்  'அந்த   உத்தமரை    யாமே    சென்று   காண்போம் '  என்று   பதிலுரைத்து   அங்கு   சென்று   கண்களை   மூடி   தியானத்திலிருந்த   பூசலாரை   'வணக்கம்சுவாமி  '  என்று   வணங்கினார் .  தியானத்திலிருந்து    கண்   விழித்த   பூசலார்      மன்னவரை   கண்டு   திடுக்கிட்டார் .  'அரசே   இது   என்ன   தாங்கள்   இங்கு '   என்று   ஒன்றும்   புரியாமல்   வினவினார் .    அதற்கு   மன்னவன்   தாங்கள்   அமைத்த   சிவனார்   ஆலையத்தை    காணவே   ஓடோடி   வந்தேன்  அது   எங்குள்ளது ?  என்று   வினவினார்   

Friday 20 September 2019

மன்னனுக்கு   ஒன்றும்   புரியவில்லை .  எம்பெருமானுக்கு   இத்தனை   நெருக்கமான   அப்பெருமானை  காண   ஆவல்   ஏற்பட்டது .   எத்தனை   பாக்கியவான்   என்ற   எண்ணம்   உண்டாயிற்று .  உடனே   அமைச்சரை   அழைத்து   கும்பாபிஷேக   ஏற்பாட்டை   நிறுத்தி   விட்டு   வேறு   நல்ல   நாள்   பார்க்க   சொல்லி   விட்டு   முக்கியமான   சிலரை   கூட   அழைத்து   கொண்டு   திருநின்றவூர்   கிளம்பினார் .    அங்கு   சென்றதும்   அங்கு   உள்ளவர்களை   பூசலார்    கட்டிய   கோயில்   எங்கு   என்று   வினவினார் .  எல்லோரும்      ஆச்சர்யம்   அடைந்து   அவர்   மிக  சாதாரண   அந்தணர்   அவர்   கோயில்   ஏதும்   எழுப்பவில்லை .  அனால்   எழுப்ப   மிக்க   ஆவல்   கொண்டு   பணம்   சேர்க்க   மிக   பாடுபட்டார் .   முடியாத   காரணத்தால்    மனமுடைந்து   அங்கு   மண்டபத்தில்    தியானத்தில்    அமர்ந்து   விட்டார்     என்று   கூறினர் .   அரசன்   அதிர்ந்து   போனார் .  ஈசன்   வாக்கு   எவ்வாறு   தவறாகும் .      

Thursday 19 September 2019

பூசலார்   தன்   மனத்தில்   பெருமையுடன்   அமைத்த   அக்கோயிலுக்கு   கும்பாபிஷேகத்திற்கு   அவர்   தேர்ந்தெடுத்த   முகூர்த்தம்   மன்னன்   தேர்ந்தெடுத்த   முகூர்த்தநாளும்   ஒன்றாக   இருந்தது   ஈசன்   விளையாட்டே .தன்   பக்தனின்   பெருமை   உலகறிய   வேண்டாமா ?   காஞ்சி   மாநகரம்   குமபாபிஷேகத்திற்கு   மிக   குதூகலத்துடன்   தயாராகி   கொண்டிருந்தது .  மக்கள்   மகிழ்ச்சி   ஆரவாரத்துடன்   தயார்  செய்து   கொண்டிருந்தனர் . ஈசன்   விளையாட்டை   துவங்கினார் .   இரவில்   உறங்கிக்கொண்டிருந்த   மன்னன்   கனவில்   மான்   மழுவுடன்   ஆடவல்லான்   காட்சி   தந்து   ''மன்னா  திருநின்றவூரில்  நாளை   எனது   பரம   பக்தன்   பூசலார்   அமைத்த   ஆலயத்தில்   நாம்   நுழைவதாக   முடிவு   செய்திருப்பதால்   நீ   அமைத்த   ஆலயத்தின்   கும்பாபிஷேகத்தை   ஒரு   நாள்   தள்ளி    வைத்துக்கொள் ''   என்று   ஆணை   இட்டு    மறைந்தார் .  மன்னன்   திடுக்கிட்டு   எழுந்தான் .    

Tuesday 17 September 2019

பூசலார்   கும்பாபிஷேகத்திற்கு   சுபவேளை     தேர்வு   செய்து   அந்நாளை   ஆவலுடன்   எதிர்பார்த்து   காத்திருந்தார் 
    ஈசன்   திருவிளையாடல்   எப்படி   வர்ணிப்பது ?  தன்   பக்தனின்   உயர்வை   உலகறிய   செய்ய   ஈசனுக்கு   எப்போதும்   பேரார்வம் .  அன்பே   சிவம்   அல்லவா ?   இவருடைய   மனகோயில்   முடிவுறும்   அதே    நேரத்தில்           காஞ்சியில்    பல்லவ   மன்னன்   கைலாசநாதருக்கு   பெ  ரியதொரு   ஆலயம்   எழுப்ப   எண்ணி   அந்த   ஆலயமும்   பொலிவுற   எழும்பி   முடியும்   தருவாயில்   இருந்தது .   மன்னனுக்கு   மட்டற்ற   மகிழ்ச்சி .  பெரிய   ஜோதிடர்களை   கலந்தாலோசித்து   கும்பாபிஷேகத்திற்கான   சுப    முகூர்த்த   வேளை   குறித்தான் .   ஐயனின்   திருவிளையாடலை   என்ன   என்பது ?  அவர்கள்   குறித்த   வேளை      பூசலார்   குறித்த   அதே  முகூர்த்தமாக    அமைந்தது   அவன்   செயலே .

Sunday 15 September 2019

பூசலார்   மனம்   ஆனந்தம்   அடைந்தது அவர்   நினைக்க   அமைத்த   ஆலயம்   அவர்   விரும்பிய   வண்ணம்   எழும்ப   ஆரம்பித்தது .  அவர்   பக்கத்திலேயே   இருந்து   ஒரு   சிறு    தவறும்   ஏற்படாமல்   கவனித்து   பார்த்து   பார்த்து   கட்ட   வைத்து   பெருமிதம்   அடைந்தார் .  மெல்ல   ஆலயம்   எழும்பியது .  அவர்  மனம்  விரும்பிய   விதமாக     ஆலயம்   உருவானது .   ஸ்தபதிகள்   வெகுவாக   பாடுபட்டு   எம்பெருமான்   திருமேனியையும்   அம்பாள்   திருமேனியையும்   பொலிவுற  அமைத்து    அவைகளை   பீடங்களில்   ஆகம   விதிப்படி   பிரதிஷ்டை   செய்தனர் .  இனி   சாஸ்திரப்படி   கும்பாபிஷேகம்   செய்ய   வேண்டியது   தான் .  பூசலார்   மனம்   மகிழ்ச்சி   ஒருபுறம்   கும்பாபிஷேகம்   முறைப்படி   எம்பெருமான்   மனம்   குளிர   நடக்க   வேண்டுமே   என்ற     பதட்டம்   ஒரு   புறம்   என   மனம்   அலைபாய   தூக்கமின்றி   இரவு   கழிந்தது .  

Saturday 14 September 2019

மனதில்   கோயில்   அமைக்க   முடிவு   செய்து   உடனே  பூசலார்   மன   அமைதி   பெற்று    அப்பணி     துவக்க   நல்ல   நாள்   குறித்தார் .  அந்த   நல்ல   முகூர்த்த   நாளில்   நல்ல   வேளையில்   ஏரிக்கரையில்   அமைதியான   நல்ல   இடத்தை   தேர்ந்தெடுத்தார் .   சுத்தமாக   தீர்த்தமாடி   எம்பெருமானை   மனதார  தோத்திரம்   செய்து   கண்களை   மூடிக்கொண்டு   அங்கு   அமர்ந்தார் .  அவர்   மனக்கண்முன்   கட்டுமான   பணிக்கான   கல் ,  மண் .  சுன்ணான்பு   மற்ற   சாமான்கள்  மற்றும்   வேலை   செய்ய   ஆட்கள்   எல்லாம்   தயாராக   வந்து   சேர்ந்தன .  பூமி   பூஜை   போட   பூஜை   செய்பவர்கள்   வந்து   சாஸ்திரப்படி   பூஜை   செய்து  வேலை   துவங்கி   வைக்கப்   பட்டது .   பூசலார்   மனதார   இவைகளை   கண்டு   பரவசமாகி   களிப்பில்   மூழ்கி    இருந்தார் 

Thursday 12 September 2019

பூசலார்   ஆலயம்   கட்டும்   தம்   எண்ணத்தில்   உறுதியாக   இருந்தார் .  எங்கெல்லாமோ   அலைந்து   நிதி    திரட்ட   முனைந்தார் .  ஆனால்   அவர்   முயற்சி   பயனளிப்பதாக   தோன்றவில்லை   .  நாள்   செல்ல   செல்ல   அவரை   எல்லோரும்   பைத்தியமாக   எண்ணி   ஒதுக்க   ஆரம்பித்தனர் .  வருடங்கள்   கடந்தன .  அவர்   எண்ணத்தில்   கொழுந்து   விட்டு   எறியும்   ஆவல்   தணிவதாக   இல்லை .  அவர்   கனவு   நிறைவேறுவதாக   இல்லை .  அது   சாத்தியம்   என்ற   நம்பிக்கையும்    குறைந்தது .    ஆனாலும்   அவருடைய   அந்த   கனவு   அப்படியே   நீ ரு   ஊற்றி   நெருப்பு    அணைவது   போல்   போவதை   அவர்   விரும்பவில்லை .     பொருள்   சேர்த்து   பெரும்   ஆலயம்   அமைத்து   புற    கண்ணால்   காண்பது   சாத்தியமாகாது   என்ற   எண்ணம்   மனதை   உலுக்கியது .   ஆனாலும்   அவர்   தளரவில்லை .   தன்   உள்ளத்தில்   பெரும்  ஆலயம்     அமைத்து    தம்  மனதார    ஐயனை   அக   கண்ணால்    மனம்    குளிர   சேவித்து      மகிழ   முடிவு    செய்தார் .   

Tuesday 10 September 2019

பூசலார்   ஊர்    மக்களின்   இத்துன்பத்தை   தீர்க்க   திருநின்றவூரில்   ஒரு   சிவன்  கோயில்    எழுப்ப   பேராவல்   கொண்டார் .  உடனே   அதை   நிறைவேற்ற   எண்ணம்   கொண்டு   ஊர்   ஜனங்களை    அணுகி   தன்   யோசனையை    கூறி   எல்லோரும்   உதவ   வேண்டி   கேட்டுக்கொண்டார் .     ஊர்   மக்கள்   அவர்   மீது   அவருடைய   மேலான   அறிவை   மதித்து   அவரை  மிக்க   மரியாதையுடன்    நடத்தினார்கள்   எனிலும்    கோயில்   கட்டுவது    என்பது   சாதாரண    காரியமில்லை   அதற்கு   எத்தனை   செலவு   செய்ய    வேண்டி   இருக்கும்    என்று   எண்ணி   பின்வாங்கினர் .  அது   ஆகக்கூடிய   காரியமில்லை   என்று   சொல்லி   மறுத்தனர்  .  அவரையும்   இது   சாத்தியமில்லை   என்று   எடுத்து   கூறி   அந்த   எண்ணத்தை   விட்டு   விட   அறிவுரை   கூறினர் .    ஆனால்   அவரோ   அதில்   மிக    அதிக  தீவிரமாக    இருந்தார் .      

Monday 9 September 2019

மன்னியசீர்   மறை   நாவல்   நின்றவூர்   பூசல் | 

தொண்டை   நாட்டில்   உள்ளது   திருநின்றவூர் .  அவ்வூரில்   பூசலார்   என்று   ஒரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  சிறந்த   சிவபக்தர் .  வேதசாஸ்திரங்களில்   மிக்க   தேர்ச்சி   பெற்றவர் .   அதையே   ஜீவனோபாயத்திற்கும்   செய்து   வருபவர் .  சிவனடியார்களிடம்   பேரன்பு   கொண்டவர் .  அவர்களுக்கு   தன்னால்   இயன்ற   தொண்டுகளை   செய்வதை    லட்சியமாக   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  வேத   சாஸ்திரங்களை   போதித்தும்   வந்தார் .
      அந்த   ஊரில்   எம்பெருமான்   கோயில்   இல்லாததால்   பக்தர்கள்   பக்கத்து   ஊர்   சென்று   ஐயனை   சேவிக்க   வேண்டி     இருந்தது .   இது   பூசலாருக்கு    பெரும்   மன   வருத்தம்   அளித்தது .   திருநின்றவூரில்   ஒரு   கோயில்      கட்ட   வேண்டுமென்ற   பேரவா   அவர்   மனதில்  எழுந்தது .

Friday 6 September 2019

சுந்தரர்   இவ்வாறு   உரைக்கிறார் .
ஈசனை   பக்தியோடு     வணங்குபவர்களை    குலம்   கோத்திரம்   எதுவும்   பாராமல்   எல்லோரையும்   சமமாக   பாவித்து   அன்புடன்   வவேரறு   உபசரிப்பவர்களுக்கு   நான்   அடிமையாவேன் .  எம்பெருமானை   பக்தியோடு   பாடுவார்களையும்   நான்    வணங்குகிறேன் . சித்தம்   முழுவதும்    சிவபெருமானிடம்   லயிக்க   செய்தவர்கள் .  திருவாருரில்   பிறந்தவர்கள்   எல்லோரும்   முற்பிறவிகளில்   புண்ணியம்   செய்தவர்கள்   என்பதால்   அவர்களையும்    நான்   அடிபணிகிறேன் .  முக்காலமும்   பெருமான்   திருமேனியை   தீண்டும்   பாக்கியம்   பெற்றவைகளையும்   நான்   வணங்குகிறேன் .  சாஸ்திர   விதிப்படி   முழுநீறு   பூசியவர்களுக்கும்   நம்நாட்டின்   எல்லைக்கப்பால்   வாழும்   எம்பெருமான்   பக்தர்களையும்   நான்    மனதார   வணங்குகிறேன் .  இவ்வாறு   வணக்கம்  தெரிவித்தது   விட்டு   மேலும்   தொடர்கிறார்  சுந்தரர்      
சுந்தரர்   மேலும்   பாடுகிறார்,

 பத்தராய்   பணிவார்கள்   எல்லோர்க்கும்   அடியேன்
பரமனையே   பாடுவார்   அடியார்க்கும்   அடியேன்
சித்தத்தை   சிவன்சிவன்பாலே   வைத்தார்க்கும்   அடியேன்
திருவாரூர் ப்   பிறந்தார்களெல்லோருக்கும்   அடியேன்
முப்போதும்   திருமேனி   தீண்டுவார்க்கும்   அடியேன்
முழுநீறு  பூசிய   முனிவருக்கும்   அடியேன்
அப்பாலும்   அடிசார்ந்த   அடியார்க்கும்   அடியேன்
ஆரூரில்   ஆரூரன்   அம்மானுக்காளே

Thursday 5 September 2019

கோட்புலியாரை   புகழ்ந்து   பாடிய   சுந்தரர்   மேலும்   அடியார்களை   வணங்கி   துதித்து  பாடுகிறார் .   ஆரூர்   ஈசன்   கட்டளை   படி   அவர்   அடி   எடுத்து   கொடுத்த   வாக்கை   " தில்லை   வாழ்   அந்தணர்தம்   அடியார்க்கும்   அடியேன்"   என்று   தொடங்கி   ஈசன்   உள்ளம்   கவர்ந்த   அடியார்களை  பாடிக்கொண்டு   வந்தவர்      மேலும்   அடியார்களை   வணங்கி   துதிக்கிறார் .  

Wednesday 4 September 2019

அவருடைய   உறவினர்களும்   ஒப்புக்கொண்டு   பொறுப்பேற்றனர் . அனால்    விதி   விளையாடியது .   அவ்வூரில்   கடும்   பஞ்சம்   ஏற்பட்டது .  யாவரும்   உணவு   கிடைக்காமல்   அவதியுற்றனர்.  பொறுக்க   முடியாத   நிலை   அடைந்தனர் .  ஐயனுக்கான   தானியத்தை    உபயோகித்துவிட்டு    நிலைமை   சரியானதும்   திரும்ப   சேர்த்து   விடலாம்   என்று    முடிவு  செய்து   அத்தானியத்தை   உபயோகித்து   பசியாறினர் .   அனால்   துரதிஷ்டவசமாக போர்   முடிந்து   வெற்றிவாகை   சூடி   கோட்புலியார்   திரும்பினார் .   அவர்   சிவாபராதம்   நேர்ந்திருப்பதை   கண்டதும்   கோபவெறி   அவரை   நிலை   தடுமாற   செய்தது.   தம்   சேவகனை   அனுப்பி   வெற்றி   வாகை   சூடியதை   கொண்டாட    பரிசளிப்பதாக   கூறி   உறவினர்களை   வரச்செய்து   தன்   உடைவாளால்     அனைவரின்   தலைகளையும்      கொய்தான் .   சிறு     பாலகன்   அவனை   வெட்ட   துணிந்த    போது   காவலன்   தடுத்தான் .  ஆனால்   கோட்புலியார்   கேட்கவில்லை .  தவறு  செய்த   தாயிடம்   பாலுண்டவன்   என்று   கூறி       பாலகனை   கொன்றான் .    அப்போது   ஈசன் தோன்றி   அவன்   பக்தியை   மெச்சி   அவனால்   கொல்லப்பட்ட   எல்லோருக்கும்    சிவபதம்   அருளி   அவரையும்   தன்னிடம்   சேர்த்துக்கொண்டார் .     
கோட்புலியார்   மலைபோல்   தானியம்   குவித்து வைத்து   எம்பெருமானுக்கு   திருவமுது   செய்வதற்கே   வைத்திருப்பார் .  மற்றும்     சிவ   பெருமானுக்கு   பலவிதமாக      தொண்டு   புரிவதை   தனது     பாக்கியமாக   கருதி   செய்து   வந்தார் .    துரதிஷ்ட வசமாக   போர்   மூண்டது .  சேனை   தலைவனாக   பொறுப்புள்ள   அவர்   போருக்கு   செல்ல   நேர்ந்தது     அவர்  தன்   உறவினர்களை   அழைத்து   தான்   திரும்ப   வரும்வரை   அந்த   தானிய   கிடங்கை   காப்பாற்றும்   பொறுப்பை    ஒப்படைக்க   முடிவு   செய்தார் .     நம்பிக்கையான   ஒருவரை   காவலுக்கு   அமர்த்தி   விட்டு   தம்   உறவினர்களை   தானியங்களை   பார்த்துக்   கொள்ளும்படி   கேட்டுக்கொண்டார் .   அப்போது   அவர்   அவை   ஐயனுக்கு   திருவமுது   செய்வதற்கே   வைக்கப்பட்டது .  ஆகையால்   ஐயன்   மீது   ஆணையாக   ஒரு   பிடி  கூட   வேறு   உபயோகத்துற்கு   எடுக்க     கூடாது   என்று   ஆணை   பிறப்பித்தார் .

Tuesday 3 September 2019

அடல்   சூழ்ந்த   வேல்   நம்பி   கோட்புலிக்கும்   அடியேன் |

சோழ   நாட்டில்   நாட்டியத்தான்குடி   என்று   ஒரு   ஊர் .   அங்கு   வேளாளர்   மரபை   சேர்ந்த   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  கோட்புலியார்   என்பது   அவர்   பெயர் .  அவர்   சோழ   மன்னனின்   சேனை   அதிபதி   ஆவார் .  அவர்   எம்பெருமான்   மீது   அளவு   கடந்த   பக்தி   வைத்திருந்தார் .   சிவத்தொண்டே   அவர்   உயிர்   மூச்சு