Thursday 30 August 2018

அத்தனை   மன   வேதனையிலும்   அத்தம்பதியர்க்கு   நாவுக்கரசருக்கு   அமுது   படைப்பது   நிறுத்துவது   மனம்   ஒப்பவில்லை .   அவர்கள்   பெருத்த   மன   வேதனையுடன்   அருமை   மகனின்   உடலை   ஒரு   அறையில்   படுக்கவைத்து   அறையை   மூடிவிட்டு   நாவுக்கரசரை   ஆலயத்திலிருந்து   அமுது   படைக்க   அழைத்து   வந்தார் .  நாவுக்கரசர்   வாசலில்   வந்ததும்   அங்கு  எதோ   அசம்பாவிதம்   நேர்ந்திருப்பதை   உள்ளம்   உணர்த்தியது .  அவர்   திருநீறு   எடுத்து   எல்லோருக்கும்   கொடுக்க   முதலில்   நாவுக்கரசனை   அழைத்தார் .  அப்பூதியடிகள்   துக்கத்த்தை   மறைத்து   கொண்டு   அவன்   இப்போது   எதற்கும்   உதவ   மாட்டான் .  என்று   பூடகமாக   உணர்த்தினார் .  அப்பரடிகள்   வற்புறுத்தி   கேட்டதும்   நடந்த   உண்மையை   கூறினார் .   அதிர்ந்த   அப்பரடிகள்    உடனே   நாவுக்கரசனை   தூக்கிக்கொண்டு   ஆலயத்தில்   கிடத்த  செய்தார்.   திங்களூர்   ஈசனை   மனமுருக   பதிகங்களால்  தொழுது   மகனை   உயிர்ப்பிக்க   வேண்டினார் . அப்பரடிகள்   வேண்டி   கேட்டுக்கொண்டால்   ஐயன்   மறுப்பாரா ?  மறுகணமே   நாவுக்கரசன்   துக்கத்திலிருந்து   விழித்தார்  போல்     எழுந்து   அம்மா   என்று  ஓடிவந்தான் .  பெற்றோர்களின்   ஆனந்தத்திற்கு  அளவேது .

Wednesday 29 August 2018

அளவிட   முடியாத   ஆனந்தம்   அடைந்த   அப்பூதி  அடிகளும்    அவர்   மனைவியும்   நாவுக்கரசரை   இருந்து   உணவு   அருந்திவிட்டு   செல்லவேண்டுமென்று   வருந்தி   கேட்டுக்கொண்டனர் .  அவரும்   கோயிலுக்கு   சென்று   இறைவனை   சேவித்துவிட்டு   வந்து   உணவு   அருந்துவதாக   கூறிவிட்டு   சென்றார் .   தம்பதியரும்   மிக்க   மகிழ்ச்சியுடன்   உணவு   தயாரிக்க   முனைந்தனர் .  அப்போது   விதி   விளையாடியது .  அன்னை   மகன்   நாவுக்கரசனை   தோட்டத்திலிருந்து   வாழை   இலை   வெட்டி   எடுத்துவர   கத்தியுடன்   அனுப்பினாள் .  பையனும்   தோட்டத்தில்   வாழை   இலை   வெட்ட  சென்றான் .  மரத்தில்   பதுங்கி  இருந்த   பாம்பு   ஒன்று   கத்திவழியாக   இறங்கி   பையனின்  கையில்   கொத்திவிட்டு   மறைந்தது .  நாவுக்கரசனும  கத்திக்கொண்டு   கீழே   விழுந்து   மாண்டு   போனான் .  இதை  கண்ட   அடிகளும்   அவர்   மனைவியும்  மிக்க   வேதனையும்   அதிர்ச்சியும்   தாளாமல்  மலைத்து   நின்றனர்.

Thursday 23 August 2018

அப்பூதி   அடிகள்   நாவுக்கரசரை   இவ்வாறெல்லாம்   புகழ்ந்து   பேசிவிட்டு   அவர்   செய்யும்   அறத்தொண்டுகளுக்கு   முன்பு   நாமெல்லாம்   எம்மாத்திரம் ?  என்று   கேள்வி   எழுப்பிவிட்டு   அது   போகட்டும்   தாங்கள்   யார்   என்று   சொல்லவில்லையே   என்று   வினவினார்   அப்போது   அப்பரடிகள்   சைவம்   துறந்து   சமணத்தில்   சேர்ந்து   எம்பெருமானை   பல   விதமாக   இழிவாக   பேசி   ஐயனால்   சூலை   நோய்   தந்து   ஆட்கொள்ளப்பட்ட   அந்த   நாவுக்கரசர்   அடி.யேனே   என்று   உரைத்தார் . அதை   கேட்ட   அப்பூதி   அடிகள்   தாம்   இத்தனை   நாட்களாக   இதயத்தில்   வைத்து   பூ சித்து   வரும்   நாவுக்கரசர்   தம்   எதிரே   நிற்பது   என்பதை   அறிந்ததும்   எல்லை   இல்லா   மகிழ்ச்சியுடன்   அவர்   காலில்   விழுந்து   கண்ணீரால்   அவர்   பாதங்களை   கழுவினார் .  தாங்கள்   யார்   என்பதை   அறியாமல்   பேசியதற்கு   மன்னிப்பு   கோரினார் . அதற்கு   அப்பர்   வருந்த   வேண்டாம்   அடிகளாரே   எனமிது   இத்தனை  அன்பு  செலுத்தும்    தங்களை  காணும்     ஆவலில் தான்  இங்கு   வந்தேன்  என்று  பதிலுரைத்தார்.  அப்பூதி   அடிகள்   மனைவி   குழந்தைகளை   அழைத்து  அப்பரை   வணங்க   செய்து   அவருக்கு   பாதபூசை  செய்து  ஆசி   பெற்றார் 

Monday 20 August 2018

அப்பூதியடிகள்   மேலும்   கூறினார் ,  எம்பெருமானுக்கு   சேவை   செய்வதில்   அவருக்கு   இணை   யார்   உளர் ?  எம்பெருமான்   அவர்   மீது   காட்டிய   அன்புக்கு   நிகர்   ஏது ?  நீற்றறையிலிருந்து   ஈசன் அவரை   மீட்டார் . கல்   தூணை   பூட்டி   கடலில்   வீசப்பட்டவர்   நமசிவாய   நாமத்தால்   மீண்டார் .  விஷம்   அவரை   ஏதும்   செய்யவில்லை .  ஈசனுக்கு  அவர்   மீது   எத்துணை   அன்பிருந்தால்   இவ்வாறெல்லாம்   காத்தருள்வார் .  அவரை   போய்   யாரோ   ஒருவர்   என்று   கூறி   விட்டிர் .

Wednesday 15 August 2018

நாவுக்கரசர்   அப்பூதியடிகளை   தேடிக்கொண்டு   அக்கிரகாரம்   வந்து   அவர்   வீடு   நாடி   வந்தார் .  அப்பூதியடிகள்   அவரை   அன்புடன்   வரவேற்று   அவர்   வந்த   காரணத்தை   வினவினார் ,  அப்பர்  அப்பூதியடிகளை   தேடி   வந்ததாகவும்   தனக்கு   ஒரு   சந்தேகம்   என்றும்   கூறினார் .  அதற்கு   அவர்   தான்தான்   அப்பூதியடிகள்   என்றும்   அவருடைய   சந்தேகம்   யாது ?  என்றும்   வினவினார்.  அதற்கு    அப்பர்பெருமான்   இத்தனை   தர்ம   காரியங்களை   செய்தவர்   அவைகளுக்கு   தன்னுடைய   பெயரை   வைத்து   கொள்ளாமல்   யாரோ   ஒருவருடைய      பெயரை   வைக்க   காரணம்   என்ன  என்று   வினவினார் .  அதற்கு   அடிகள்   உணர்ச்சியுடன்   யாரையோ   என்று    என்று   அப்பர்பெருமானையா    குறிப்பிடுகிறீர்கள் ?   அவரைவிட   வேறு   தகுதியான  பெரியவர்   வேறு   யார்   உளர் ?  எத்தனை   மாபெரும்    சோதனைகளிலிருந்து   சிவபெருமான்  அவரை   காத்து   அருளினார் .

Monday 13 August 2018

நாவுக்கரசர்   நல்லூரிலிருந்து   புறப்பட்டு   திருப்பழனம்   செல்ல      வழியில்   திங்களூரை   அடைந் தார் .   அப்போது   அவர்   களைப்படைந்து   இரு ந்தார் .  அங்கு   இருந்த  தண்ணீர்   பந்தலை   கண்டதும்   அங்கு   சென்று   தாக சாந்தி   செய்து கொண்டு   புறப்பட்டார் .  வெளியே   வந்ததும்   முகப்பில்   நாவுக்கரசர்   தண்ணீர்பந்தல்   என்ற   பலகையை   க  ண்டதும்   பக்கத்தில்   இருப்பவர்களை   இந்த   பந்தலை   அமைத்தவர்   யார்   என   வினவினார் .  அவர்கள்   இதை   அமைத்தவர்   அப்பூதியடிகள்   என்றும்   அவர்   அன்னதான  சத்திரங்கள்   போன்ற    தர்ம   காரியங்கள்   பல  செய்து   இருப்பதாகவும்    எல்லாவற்றிற்கும்   அவர்   நாவுக்கரசர்   பெயரையே   சூட்டி   இருப்பதாகவும்  கூறினர் .  அப்பருக்கு   ஆச்சர்யம்   தாங்கவில்லை .  அவரை   காணவேண்டும்   என்ற  ஆவல்  எழ   அவர்     எங்கு  இருக்கிறார்   என   விசாரித்தார் .  அவர்கள்   அவர்   அக்கிரஹாரத்தில்   வசிப்பதாக   கூறினர் 

Friday 10 August 2018

ஒருநம்பி   அப்பூதி  அடியார்க்கு   அடியேன்  |
  திங்களூர்   எனுமிடத்தில்   அப்பூதி   அடிகள்  என்னும்   அந்தணர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களை   மிகவும்   போற்றி   வந்தார் .  அதிலும்   சமணர்களின்   போதனையால்  அறிவிழந்து   மன்னன்   திருநாவுக்கரசருக்கு   இழைத்த   அளவிலா   கொடுமைகளையும்   அவற்றிலிருந்து   கருணைக்கடலான   சிவபெருமானால்   காக்க   பட்ட   சம்பவங்களை   கேட்டறிந்தது   முதல்  அவர் மீது   அளவிலா   பக்தி   உண்டாயிற்று .   அவர்    சொல்லே   இவர்க்கு   வேதம் .  அவருடைய   சேவைகளும்   அடியார்களுக்கு  தொண்டு   செய்வதன்   மூலம்    சிவபெருமானை    பெரிதும்   மகிழ்விக்கலாம்   எனும்    அவரது   கூற்றை தெய்வ   வாக்காக   மதித்தார் .  ஆகையால்   இவரும்   இறைவனுடைய    அடியார்களுக்கு   சேவை   செய்வதையே   லட்சியமாக     கொண்டார் .  பல   தண்ணீர்   பந்தல்கள்   அன்ன   சத்திரங்கள் ,  அமைப்பதையே   தன் முதற் பணியாக   கொண்டு   அதற்கே     தன்   செல்வத்தை  செலவழித்து   வந்தார் .  அவை   யாவற்றிற்கும்   திருநாவுக்கரசர்   பெயரையே   வைத்தார் .

Tuesday 7 August 2018

தலையாலேயே   கைலை  மலை   ஏறிவரும்   அம்மையை   கண்டு   வியப்படைந்த   உமை   அன்னை   ஈசனை   நோக்கி   இவ்வாறு   விகார   ரூபத்துடன்   தன்னை   இவ்வளவு   வருத்திக்கொண்டு   இங்கு   நம்மை   நோக்கி   வரும்   இந்த   அம்மை   யார் ?  என்று   வினவ   ஐயன்   இந்த   அம்மையார்   நாம்   இருக்குமிடம்   புனிதமென்று   கால்   படாதவாறே   வருகிறார் .  இவள்   கணவன்   இவளை   தெய்வமாக   மதித்த   காரணத்தால்   அவரை   பிரிய   நேர்ந்த   இவர்   அவருக்கே   உரிமையான   தன்   அழகிய  ரூபத்தை   தியாகம்   செய்து   இந்த   விகார   ரூபத்தை   வேண்டி   பெற்ற   பதிவிரதா   சிரோன்மணி   என்று   அவளை   வருணித்த   இறைவன்   'அம்மையே '   என்று  மிக   அன்புடன்   அவளை   வரவேற்றார் .   அவளும்   அப்பா   என்று   மனம்   குழைய   அவர்   காலில்   விழுந்தாள் .' உமக்கு   வேண்டியது   என்ன '  என்று   ஐயன்   வினவ ,  அவள்   '  பிறவாமை   வேண்டும் .  அப்படி   பிறப்புண்டேல்      உன்னை  என்றும்   மறவாமை   வே ண்டும் .  இன்னும்   வேண்டும் .  நான்  பாட   நீ   ஆடும்போது   உன்    அடியின்   கீழ்   நிற்க  வேண்டுமென   வரத்தையும்    கேட்டாள் .  அம்பலவாணன்   ஆலங்காட்டில்  அவ்வாறே    காண்பாய்   என்று   வரமளிக்கிறார் .  புனிதவதி   அம்மையாரும்   அவ்வாறே   அவருடைய   ஊர்த்துவ   தாண்டவத்தை   கண்டு   பேரானந்தம்   அடைகிறார் .  பிறகு   அவர்   மீது  பதிகங்கள்   பல   பாடி   பிறகு   சிவனடி   சேர்கிறார் .

Monday 6 August 2018

பரமதத்தனின்   அவ்வார்த்தைகள்   எல்லோரையும்   அதிர்ச்சி  அடைய   செய்தது .   பரமதத்தன்   புனிதவதியின்   தெய்வாம்சத்தை   நேரில்   கண்ட   பிறகு   அவளை   வணங்கி   துதிக்க    தோன்றுமே   அன்றி   மனைவியாக   பார்ப்பது   எவ்வாறு   சாத்தியம் ?  என்று   தான்   அவள்  மீது    வைத்துள்ள   அளவிலா   பக்தியை  வெளிப்படுத்தினான் .  புனிதவதிக்கும்   பேரதிர்ச்சி .   அவள்   நடந்ததை    விவரித் தாள் .   தன்   கணவனுக்கே   சொந்தமான   தன்   பேரழகை   இனியும்   ஏற்க   விரும்பாமல்   அவள்  கண்ணீர்   மல்க   இறைவனை   துதித்து   பரமதத்தனுக்கே   உரியதான   இவ்வழகை   எடுத்துக்கொண்டு   யாவரும்   கண்டு   நெருங்க   அஞ்சும்   பேய்   உருவம்   அளிக்குமாறு    மனமுருக   வேண்டினாள்.  ஈசனும்   அவ்வாறே   வழங்க   அவள்   அவ்வுருவத்துடன்   சிவனை   துதித்து   அற்புத   திருவந்தாதி   இரட்டை   மணிமாலை   போன்ற   பதிகங்களை   .    பாடி    மகிழ்ந்தார் அவருக்கு   .கைலாயம்   சென்று   பரமனை  சேவிக்கும்   பெரும்    ஆவல்   ஏற்பட்டது .  பரம்பொருள்   அன்னையுடன்   வசிக்கும்   தலத்திற்கு   காலால்   நடந்து   செல்வது   தகாது   என்று   தலையாலேயே   நடந்து   மலை   ஏறினார் .

Friday 3 August 2018

 பாண்டிய  நாட்டில்   பரமதத்தனின்   வியாபாரம்   செழித்து   ஓங்கியது .    பெரும்   செல்வந்தனானான் .  அங்கு   ஒரு   பெண்ணை   மணந்து   கொண்டு   ஒரு   பெண்  குழந்தைக்கு   தந்தையானான் .  அப்பெண்ணிற்கு   தான்   தெய்வமாக   மதித்த   தன்   முதல்   மனைவி   புனிதவதியின்   பெயரையே   சூட்டினான் .   வருடங்க  ள்   ஓடின .  காரைக்காலில்   புனிதவதி   கணவன்   வருவான்   என்ற   நம்ப க்கையோடு   காத்திருந்தாள்   வருடங்கள்   ஓட   அவள்   நம்பிக்கை   குறைந்தது .  அப்போது   பாண்டிய   நாட்டில்   அவனை   சந்தித்த   சிலர்  மூலம்    அவன்   பாண்டிய   நாட்டில்   இருப்பது   புனிதாவின்   குடும்பத்திற்கு   தெரியவந்தது .  உடனே   புனிதவதியின்   பெற்றோர்   மிகுந்த   சீர்வரிசைகளுடன்   புனிதவதியை   பல்லக்கில்   ஏற்றிக்கொண்டு   அவனிருக்குமிடம்   புறப்பட்டனர் .  தெய்வத்துக்கு   சமமான   அவள்   தன்னை   தேடி   வருவது   தகாது   என்று   பரமதத்தன்   தன்   மனைவி   குழந்தையுடன்   அவள்  இருக்குமிடம்      வந்து   மனைவி   குழந்தையுடன்   அவள் காலில்   விழுந்து   நமஸ்கரித்தா ன்  .  புனிதவதியும்    மற்றவர்களும்   அதிர்ச்சி   அடைந்தார்கள் .  பரமதத்தன்   அவள்  வணங்க   தக்கவள்   என்பதை   உணர்த்தி   தன்   பெண்ணுக்கு   அவள்   திருநாமத்தையே   சூடி   இருப்பதையும்   விளக்கினான் .

Thursday 2 August 2018

புனிதவதி   அவன்   உண்ட   மாங்கனியை   சிவபெருமான்   அருளால்   பெற்றாள்   என்பதை   பரமதத்தனால்   நம்ப   முடியவில்லை .  அவளை   நம்ப   முடியாமல்   மறுபடி   வரவழைக்க   முடியுமா   என்று   கேட்கிறான் .  அவளும்   வேறு   வழியின்றி   ஈசனிடம்   மன்றாடுகிறாள் .   ஈசன்   கருணை   கடலன்றோ .  மறுபடியும்   ஒரு   கனியை   வழங்குகிறார் .  ஆனால்   பரமதத்தன்    அதை   பெறமுடியாமல்   அது   மறைந்து  விடுகிறது .  அதை   கண்ட   அவன்   அதிசயமும்   ஆச்சர்யமும்   அடைந்து   தன்   மனைவியை   சாதாரண   பெண்ணாக   காண   முடியாமல்   அவளுடைய   தெய்விக   சக்தியை   உணர்ந்த   அவன்   உள்ளத்தில்   அவள்   உயர்ந்து   நின்றாள் .  அவளை   மனைவியாக   சராசரி   பெண்ணாக   ஏற்க   அவன்   மனம்   இணங்கவில்லை .  அவளை   தெய்வத்திற்கு   சமமாக   மதித்தான் .  அதனால்   அவளை   மனைவியாக   நடத்த   மனம்   இடம்   கொடாததால்   அவன்   செய்வதறியாமல்  திணறினான்   அவளுடைய   மனதை   புண்படுத்தவும்   விரும்பவில்லை .  செய்வதறியாமல்  அவன்   வியாபாரம்   செய்ய   கடல்   கடந்து   போவதாக   சொல்லி   கப்பலில்   சரக்கை   ஏற்றிக்கொண்டு   பாண்டிய   நாடு  சென்று   ஒரு  துறைமுகத்தில்   இறங்கினான் .   அங்கு  வியாபாரம்   தொடங்கினான் .

Wednesday 1 August 2018

திரும்பி   வீடு   வந்த   பரமதத்தன்   மனைவியை   தான்   கொடுத்து   சென்ற   மாங்கனியை   கொண்டுவரும்படி   கூறினான் .  புனிதவதியும்   அவ்வாறே   இருந்த   ஒரு   மாங்கனியை   கொண்டுவந்து   கொடுத்தாள் .  அதை    உண்ட   அவன்    அதன்   ருசியில்   மயங்கி   தான்   கொடுத்த   மறறொரு   கனியையும்   கேட்டான் .  திடுக்கிட்ட   புனிதா   என்ன   சொல்வது   என்று   அறியாமல்   சிவபெருமானிடம்   சரணடைந்தாள் .  பழத்தை   பிக்ஷையாக   கொடுத்ததை   எப்படி   சொல்வது   என்று   தயங்கி   ஐயனிடம்   முறையிட்டாள் .  உடனே   அவள்   கையில்   ஒரு   பழம்   இருந்ததை   கண்டு   ஈசனின்   கருணையை   கண்டு   மனமுருகி   அதை   கொண்டுபோய்   கணவனிடம்   கொடுத்தாள் .   அதை    உண்ட   அவன்     பேராச்சர்யம்   அடைந்தான்     அதன்   சுவை   முன்னதைவிட   மிக   உயர்ந்ததாக   இருக்க   அதன்   காரணத்தை   வினவினான்   அவளும்  வேறு   வழியின்றி   நடந்ததை   கூறினாள் .  அவனால்   அதை   நம்ப   முடியவில்லை .