Monday 26 September 2016

இவ்வாறு  பெரும்  சித்தராக  வாழ்ந்து  மறைந்த  பட்டினத்தார்  நமக்கு  அருளிய  பாடல்  தொகுப்புகள்  இவையாகும்

கோயில்  நான்மணிமாலை , கழுமல  மும்மணி  கோவை ,  திருவிடைமருதூர்  மும்மணிக்கோவை ,  திருஏகம்பமுடையார்  திருவந்தாதி ,  திருவொற்றியூர்  தொகை , .திருப்பாடற்றிரட்டு . இவையாகும் ..
அடுத்து  நம்பியாண்டர்  நம்பி யை  பற்றி  காண்போம் . இவர்  சுந்தரரை  பின்பற்றி  நாயன்மார்கள்  வரலாற்றை  எழுதி  பெருமை  பெற்றவர் .

Thursday 22 September 2016

இவ்வாறு  எல்லாவற்றையும்  துறந்த  பட்டினத்தார்  சிவ தலங்களையெல்லாம்  சேவிக்க  புறப்பட்டு  விட்டார் .ஈசன்  மீது  நிறைய  பாடல்கள் பாடினார்   ..சிவ  பெருமானை  தரிசித்து  ஆனந்தம்  அடைந்தார் . அவர்  பாடல்கள்  எளிய  தமிழிலும்  உருக்கமான  பொருள்  கொண்டதாகவும்  இருந்தது . வாழ்வின்  நிலையாமை.யை  எளிமையாகவும் பொருள்செறிந்ததாகவும்     சித்தரிக்கிறார் . பெரும்  சித்தராக  திகழ்ந்தார் . இவ்வாறு  திரிந்து  கொண்டிருக்கையில்  அவர்  தாயின்  அந்திம  காலம்  நெருங்குவதை   உணர்கிறார் . அவர்  தாய்க்கு  அவள்  ஈமச்சடங்குகளை  செய்வதாக  வாக்களித்திருந்த்தால்  அங்கு  விரைகிறார் . விறகுகளை  நிக்கி விட்டு  வாழை  மரத்தையும்  இலைகளையும்  வைத்து  எரியூட்டுகிறார் . அப்போது  அவர் பாடிய  ' ஐயிரண்டு  திங்களாய்  அங்கமெலாம்  நொந்து '  எனும்  பாட்டு  உருக்கமானது  .  அதன்  பின்  அவர்  சீர்காழி , சிதம்பரம்  போன்ற  தலங்களை  தரிசித்து  கொண்டு  திருவொற்றியூர்  வந்து  சேர்ந்தார் . அங்கு  ஒரு  நாள்  சிறுவர்களுடன்  ஆடி  தன்னை  மணலால் மூட  செய்கிறார் . அங்கு  அதிசயம்  நிகழ்ந்தது . அவர்  இருந்த  இடத்தில்  அவரில்லை  ஆனால்  ஒரு   சிவலிங்கம்  இருந்ததாக  கூறப்படுகிறது ..

Tuesday 20 September 2016

ஓலையில்  கண்ட  அந்த  ஒரு  வாக்கியம்  அவரை  உ லுக்கி  நிலை  குலைய  வைத்தது . அந்த  கணமே  அவர்  மனம்  சகல  ஆசைகளையும்  துறந்தது . வெறும்  கோவணத்துடன்  ஆண்டி  கோலத்தை  ஏற்றார் . தன்  செல்வம்  அனைத்தையும்   தன்  நண்பரான  சேந்தனார்  எனும்  சிவத்தொண்டரிடம்  எல்லா  செல்வத்தையும்  வறியவர்களுக்கு  தானமாக  வழங்கிட  பணித்தார் . சேந்தனாரை  சொல்லுகையில்  இதை  குறிப்பிட்டிருக்கிறேன் . அவரும்  அவ்வாறே  செய்தார் .திருவெண்காடர்  பட்டினத்து  அடிகள்  ஆகிறார் , அவருடைய  தமக்கை  இவ்வாறு  செல்வம்  பறிபோவதை  காண  பொறாமல்  அப்பத்தில்  விஷம் வைத்து  அதை  அடிகளாருக்கு  கொடுக்கிறாள் . அதை  அவர்  தமக்கையின்  வீட்டு  கூரையில்  எறிகிறார் . அவள்  வீடு  பற்றி  எரிகிறது ." தன்  வினை  தன்னை  சுடும் , ஓட்டப்பம்  வீட்டை  சுடும் " இது  அவரது  வாக்கியம் .

Saturday 17 September 2016

திருவெண்காடர்  தம்பதியினர்  திருவிடைமருதூர்  ஆண்டவன்  அருளால்  கிடைத்த  அக்குழந்தைக்கு  மருதபிரான்  என்று  பெயரிட்டு  அருமையுடன்  வளர்க்கின்றனர் . அவன் வளர்ந்து   தக்க  வயது  வந்ததும்  அவனையும்  வணிகத்தில்  ஈடுபடுத்த  எண்ணுகிறார் . வெளிநாடுகளுடன்  வாணிபம்  செய்ய  கப்பலில்  சரக்கை  ஏற்றி  அவனை  அனுப்புகிறார் . மகன்  கப்பலுடன்  திரும்புகிறான் . ஆனால்     தந்தைக்கு  மிக்க  ஏமாற்றம்  அளிக்கும்     வகையில் கப்பலில்  விரட்டியும்  வைக்கோலும்  இருப்பதைக்  கண்டு  அதிர்ச்சி  அடைந்த  திருவெண்காடர்  மகனை  அடித்து  அறையில்  வைத்து  புட்டுகிறார் . ஆனால்  மகன்  தாயிடம்  ஒரு  பெட்டியை  கொடுத்துவிட்டு  மறைந்து   விடுகிறான் . பூட்டி  இருந்த  அறையில்  இருந்து  மகன்  காணாமல்  போனது  கண்டு  திடுக்கிடுகிறார் .  மனைவியிடம்  அவன்  கொடுத்த  பெட்டியை  திறந்து  பார்க்கிறார் . அதில்  ஒரு காதற்ற  ஊசியும்  ஒரு ஓலையும்  இருக்க கண்டார் . அந்த  ஓலையில்  'காதற்ற  ஊசியும்  வாராது  காண்  கடை  வழிக்கே ' என்று  எழுத  பட்டிருந்தது . மேலும்  அவன்  கொண்டுவந்த  விரட்டி  களுக்குள்  வைரமும்  விலை  உயர்ந்த  ரத்தினங்களும்  இருக்கக்  கண்டார் . மகனாக  வந்தது  ஈசனே  என்பதை  அறிந்து  கொண்டார் 

Wednesday 14 September 2016

திருவெண்காடர்  16 வயதில்  சிவகலை  என்னும்  பெண்மணியை  மணம்  செய்து  கொண்டார் . வாணிபத்தில்  சிறந்த  முறையில்  செயலாற்றி  பெரும்  செல்வந்தனானார் . ஆனால்  மணமாகி  15 வருடங்கள்  கடந்தும்  பிள்ளை  பேறு  அடையவில்லை . சிவபெருமான்  தன்  விளையாட்டை  தொடங்குகிறார் . அதே  பகுதியில்  சிவனடியார்களுக்கு அன்னமிட்டே     மிக  வறிய  நிலை  அடைந்து  விட்ட  ஒரு  தம்பதியினருக்கு  உதவ  எண்ணம்  கொண்டார் . அவர்கள்  கனவில்  தோன்றி  அருகில்  ஓர் இடத்தில்  ஒரு  மரத்தை  குறிப்பிட்டு  அதனடியில்  ஒரு  ஆண்  குழந்தை  இருக்கும்  என்றும்  அக்குழந்தையை  திருவெண்காடரிடம்  சேர்ப்பித்து  அதன்  எடை  பொன்  பெறுமாறு  அறிவுறுத்துகிறார் . திருவெண்காடர்  கனவில்  தோன்றி  ஏழை தம்பதிகள்  ஒரு  குழந்தையை  கொடுப்பார்கள்  என்றும்  அவர்களுக்கு  அந்த  குழந்தை  எடை  பொன்  கொடுக்குமாறும்  அறிவுறுத்துகிறார் . அவர்  ஆணையிட்டது  போலவே  குழந்தையை  பெற்றுக்கொண்டு  பொன்  கொடுத்து  அனுப்புகிறார்  திருவெண்காடர் .

Sunday 11 September 2016

அடுத்து  826 முதல்  1035 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்  பட்டினத்தார்  என்று  அழைக்கப்பட்ட  திருவெண்காடர் . பட்டினத்தார்  என்று  சொன்னாலே  நமக்கு '' காதற்ற  ஊசியும்  வாராது  காண்  கடை  வழிக்கே " என்ற  வாக்கியம்  நம் மனதில்  தோன்றும் . அந்த  ஒரு வாக்கியத்தால்  மனம்  மாறி   பெரும்  சித்தரான  மகான்  இவர் . பொருள்களின்  நிலையாமை யை  ஒரே  வரியில்  உணர்த்தும்  இந்த  வாக்கியத்தினால்  மனம்  மாறியவர்  .     காவிரி  பூம்பட்டினத்தில்  பெரும்  வணிகரான  சிவநேசன்  என்பவருக்கும் அவர்  மனைவி  ஞானக்கலை  என்பவருக்கும் திருவெண்காட்டு  ஈசன்  அருளால்  பிறந்தவர்  திருவெண்காடர் . அக்குடும்பமே  சிவத்தொண்டர்களை  பணிந்து  அவர்களுக்கு  அன்னமிட்டு  அதில் மகிழ்ந்து  வாழ்ந்தனர் . திருவெண்காடர்  5 வயதாக  இருந்தபோதே  துரதிஷ்டவசமாக  தந்தையை  இழந்தனர் .

Monday 5 September 2016

11திருமுறையில்  அடுத்த      515  முதல் 671  வரை  பாடல்களை  பாடியவர்  கபிலதேவர் . அவை மூத்த  நாயனார்  திரு  இரட்டை மணி  மாலை ,சிவபெருமான் இரட்டை  மணிமாலை  மேலும்  சிவ பெருமான்  திருவந்தாதி   ஆகும் .
 அடுத்து  672-772  பாடல்களை  பாடியவர்  பரணதேவ  நாயனார்  ஆவார் . அவை  சிவபெருமான்  திருவந்தாதி
அடுத்து  773- 802  பாடல்களை  பாடியவர் இளம்பெருமான்  நாயனார் . அவை  சிவபெருமான்  திருமும்மணிக்கோவை
அடுத்து  803-825  பாக்களை  பாடியவர்  அதிரா அடிகள் . அவை
மூத்த  பிள்ளையார்  திரு  மும்மணிக்கோவை .
 இவர்களை  பற்றி  அதிகம்  தெரியவில்லை . இதே  பெயர்  கொண்ட  புலவர்கள்  சங்க  காலத்திலும்  இருந்ததாக  தெரிகிறது . 11   திருமுறையில்  உள்ள  பாடல்  தொகுப்புகள்  இவை .


Saturday 3 September 2016

நக்கீரதேவ நாயனார்    11திருமுறையில்  302 முதல்  513 வரை  உள்ள  பாடல்களை  பாடியுள்ளார் . அவை :
கைலை  பாதி  காளத்தி  பாதி  அந்தாதி ,திரு  ஈங்கோய்மலை  எழுபது ,திருவலஞ்சுழி  மும்மணிக்கோவை ,திருஎழு  கூற்றிருக்கை , பெருந்தேவபாணி ,கோபப்பிரசாதம் , கார் எட்டு ,போற்றித்திரு கலி  வெண்பா , இவையோடு  திரு  முருகாற்றுப்படை  ஆகும் .

இத்திருமுறையில்  அடுத்து  ஒரு  514 தொகுப்பை  பாடியவர்  கல்லாட தேவர் .திரு  கண்ணப்ப தேவர்  திரு  மறம் என்ப  தாகும்  . இவரை  பற்றி  சிறந்த  சிவ பக்தர்  என்பதை  தவிர  வேறு  விவரம்  ஏதும்  தெரியவில்லை .