Thursday 29 August 2019

பொன்னடிக்கே   மனம்   வைத்த   புகழ்த்துணைக்கும்   அடியேன் |

சேருவிலி வித்துர்  என்றொரு   ஊர் .  அங்கு   சிவமறையோர்   குலத்தில்   பிறந்த   புகழ்த்துணையார்   எனும்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  எம்பெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .  அபிஷேக   பிரியரான   எம்பெருமானை   ஆறு   காலமும்   அபிஷேகம்   செய்வதை   பேரின்பமாக   கருதி   செய்து   வந்தார் .  அவருடைய   போதாத   காலம்   அவரை   வறுமை   வாட்ட   தொடங்கியது .   இருந்தாலும்   விடாமல்   தன்   கடமையை   செய்து   வந்தார் .  நாள்   செல்ல   செல்ல   வறுமை   அவருடைய   உடல்   நிலையை   பாதித்தது .  உடல்   மெலிந்து   சக்தி   இழக்க   தொடங்கினார் .  ஒரு   நாள்   குடம்   தண்ணீரை   தூக்கி   அபிஷேகம் செய்யும்    போது   கை தவறி     குடம்   ஐயன்   மேல்   விழுந்து     விட்டது .  அவர்   பதறி ப்போய்   தன்   தவறை    மன்னிக்க   முடியாமல்   அங்கேயே   மயங்கி   விழுந்தார் .   கருணை   கடலான   ஐயன்   அவர்   கனவில்   காட்சி   தந்து   '' அன்பனே    வருந்தாதே .  உன்   வறுமை   தீரும்வரை   உமக்கு  தினம்   ஒரு   பொற்காசு   அளிப்போம்.  வருந்தாதீர் .  என்று   கூறி   மறைந்தார் .   எழுந்த   அவர்   ஒரு   பொற்காசு    இருப்பதை   கண்டு   மிகமகிழ்ந்தார் .  சந்தோஷமாக   தன்   திருத்தொண்டை   தொடர்ந்தார் .  சிலகாலம்   வாழ்ந்து    ஈசனடி   சேர்ந்தார் .  

No comments:

Post a Comment