Tuesday 6 August 2019

கறைக்கண்டன்   கழலடியே   காப்புக்   கொண்டிருந்த
கணம்புல்ல   நம்பிக்கும்   காரிக்கும்   அடியேன் |

வட  வெள்ளாற்றின்   தென்கரையில்  இருக்குவேளூர்   என்றொரு   ஊர்   உள்ளது .  அவ்வூரில்  சிறந்த   சிவபக்தர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   அவ்வூர்   எம்பெருமான்   ஆலயத்தில்   தினமும்   திருவிளக்கேற்றும்   தொண்டிலே   ஈடுபட்டிருந்தார் .  அவரை   சோதனையாக   வறுமை   சூழ்ந்தது .   அப்போதும்   அவர்   அத்திருப்பணியை   விடவில்லை .  ஒரு   சமயம்   தில்லை   சென்று   அம்பலக்கூத்தனை  வணங்க   சென்றார் .   அப்போது    தன்   சொத்தையெல்லாம்   விற்று   எடுத்துக்கொண்டு   தில்லையில்          உள்ள   திருப்புலீச்சரம்   குடியேறி   அங்குள்ள   எம்பெருமான்   ஆலயத்தில்  தன்   விளக்கேற்றும்   திருப்பணியை   தொடர்ந்தார் .   கொண்டுசென்ற   பணம்   கரைந்தது .  அவர்   மனம்   தளராமல்   வயற்காட்டில்   புல்   வெட்டி   விற்று   தம்   திருப்பணியை   தொடர்ந்தார் .  அதன்   காரணமாக   அவர்   கணம்புல்லர்   என்று   அழைக்கப்பட்டார்.   ஐயன்   சோதனை   யாரை   விட்டது .  ஒரு   நாள்  புல்   விருபடவில்லை .    உடனே   அவர்   அசரவில்லை   ஈசனை    மனதில்   நிறுத்தி   புல்லையே   திரியாக்கி   விளக்குகளை   ஏற்றினார் .  ஈசன்   லீலை  விளக்குகள்   எரிந்தன .  ஆனால்   சோதனை   புல்   தீர்ந்தது   ஆனால்   சில   விளக்குகள்   மீதம்   இருந்தன .  சிறிதும்   தயங்காமல்   தன்   தலைமயிரை   திரியாக்க   துணிந்தார் .  ஈசன்   தோன்றி   அவரை  தன்னில்   சேர்த்துக்கொண்டார் .   

No comments:

Post a Comment