Monday 2 April 2018

இதனிடையில்   பாடலிபுரத்தில்   மறுநாள்   காலை   தருமசேனரை   காணாத   சமண   சீடர்கள்   பதறி   போயினர்   அவருடைய   பேரறிவு   காரணமாகவே   அந்த   பள்ளி   பல்லவ   மன்னனுடைய   பேராதரவு   பெற்று   வளர்ந்து   வந்தது .  அவர்   இல்லையென்றால்   மன்னனிடமிருந்து   மான்யம்   பெறுவது   கூட   அறிதே .  அவரை   தேடி   பார்த்து   எங்கும்   காணாமல்   அவர்   அறையில்  அவருடைய   உடை   களையப்பட்டு   கிடந்ததையும்   மற்ற   பொருள்களும்  கிடந்ததை   கண்டு   அவர்   நோயின்   கடுமை   தாங்காமல்   தன்   தமக்கையை  தேடி   தான்   சென்றுருக்க   வேண்டும்   என்று   ஊ கித்த னர் .  மதம்   மாறி   விட்டிருப்பாரோ   என்ற   ஐயமும்   எழுந்து   கலங்கி    போனார்கள் .  எல்லோரும்   அவரை   தேடி   வீரட்டானம்   வந்தனர் .  ஆனால்   அதற்குள்ளேயே   அவர்  கோலத்தை   கண்டு   திகைத்தனர் .  புத்தாடை   கட்டி   திருநீறு   பூசி   ருத்ராக்ஷம்   அணிந்து   உழவாரப்படையுடன்   ஆலயத்தை    தூய்மைப்படுத்தும்   கோலத்தில்   அவரை   கண்டதும்   காரியம்   கைமீறி   போய்விட்டதை   உணர்ந்து  பெரும்   திகைப்பில்   ஆழ்ந்தனர் .

No comments:

Post a Comment