Wednesday 18 April 2018

அப்பர்   பெருமானும்   திருக்கோலக்காவிலிருந்து   புறப்பட்டு   தன்   யாத்திரையை   தொடங்கினார் .  காவிரி   கரையோரத்திலுள்ள   அநேக   தலங்களை   தரிசித்து   அங்கு   குடிகொண்டிருக்கும்   பரம்பொருளை   பதிகங்களால்   பாடி   மகிழ்வித்து   பரமானந்தம்   எய்தினார் .  அவர்   அவ்வாறு   திருப்புன்கூர் , மயிலாடுதுறை , ஐயன்   அன்னையை   மணமுடிக்க   வேள்வி   நடத்திய   திருவேள்விக்குடி ,  திருஆவடுது றை ,  திருநாகேஸ்வரம்   முதலிய   தலங்கள்   சில . அவர்   சத்திமுற்றம்     திருக்கோவிலை   அடைந்து   சிவக்கொழுந்திஸ்வரரை   கண்டு   வணங்கும்போது   அவருக்கு  ஒரு   ஆவல்   தோன்றியது .  தாம்   வயது   முதிர்ந்து   சக்தி   இழந்து   போவதற்குமுன்   தன்   தலைமீது   ஐயனின்   திருவடி   சூட்ட  வேண்டுமென்ற   பேராவல் .  ஈசனிடம் குறையை     மனமுருக   வெளியிட்டார் .  தன்   பக்தர்களின்   குறை   தீர்ப்பதில்   என்றும்   தயங்காத   தயாளன்  அசரீரியாக   அப்பனே   நல்லூருக்கு   வா   என்று அழைப்பு   விடுத்தார் .  அப்பர்   புல்லரித்து   போனார் .  உடனே   நல்லூருக்கு   பயணமானார் .  ஆலயத்திற்கு   சென்று   வணங்கி   அந்த   சன்னதியிலேயே   ஈசன்   பாதம்   தன்   தலையில்   பதிவதை   உணர்ந்து   மெய்சிலிர்த்து   உள்ளம்  உருகி   கண்ணீர்   பெருக ; 'நினைந்துருக்கும்   அடியாரை '  எனும்    தாண்டகம்   பாடினார் .  நல்லுரை   விட்டு   நகர   கால்கள்   எழவில்லை .  சில   நாட்கள்   அங்கு   தங்கினார் . 

No comments:

Post a Comment