Wednesday 4 April 2018

தலைநகரை   அடைந்ததும்   அரசன்   தகுந்த   தண்டனை   அளிக்க   திட்டமிட்டு   சமண   தலைவர்களை   யோசனை   கேட்டான் .   அவர்கள்   நாவுக்கரசரை   சுண்ணாம்பு   காள வாயில்   இடுமாறு   யோசனை   கூறினர்.   நாவுக்கரசர்   சிறிதும்   அஞ்சவில்லை   ஈசன்   தன்னை   காப்பான்   என்ற    முழு   நம்பிக்கை   அவரை   இத்தண்டனையை   கேட்ட   பிறகும்   சிறிதும்   அசரவைக்கவில்லை .    அவருக்கு   மனக்கண்ணில்   கண்டது   'ஈசன்   திருவடி  நிழலே '.  மாசில்   வீணையும்   மாலை   மதியமும்   வீசு   தென்றலும்' இவ்வாறு   அவர்   அனுபவித்து   பாடினார் .  ஆறு   நாட்கள்   பிறகு   திறந்தால்   அவர்   முன்பைவிட   பொலிவுடன்   வெளியே   வந்தார்   எல்லோருக்கும்    அதிர்ச்சி .  சமண   தலைவர்கள்   தங்களிடம்   கற்ற   பயிற்சிகளால்தான்   இவ்வாறு    வெளிவரமுடிந்தது   என்று   சொல்லி   விஷமிட   யோசனை   கூறினர் .  ஆலகால   விஷமுண்ட   ஐயன்   துணை   இருக்கும்போது   இந்த விஷம்   என்ன   செய்யும் .  அரசனுக்கு   அதிர்ச்சி .  ஆனால்   சமணர்கள்   விடுவதாக    இல்லை .  பட்டது   யானையை   விட்டு   அதன்   காலால்   இடற   செய்தனர் .  நாவுக்கரசர்  'சுண்ணவெண்    சந்தன   சாந்தும்   சுடர்   திங்கள்   சூளாமணியும் '  என்ற   பதிகம்   பாடி   அஞ்சுவது   யாதொன்றுமில்லை   என   பாட   யானை   மண்டியிட்டு   வணங்கி   சென்றது .

No comments:

Post a Comment