Tuesday 3 April 2018

தருமசேனர்   தங்களால்   எத்தனை   முயற்சி   செய்தும்   தீர்க்க   முடியாத   அவருடைய   சூலை   நோய்   இத்தனை   சிறிய   காலத்தில்   தீர்ந்து   அவரை   சைவத்திற்கு   மாற்றிய   அதிசயம்   சமணர்களை  பெரும்   பீதியில்   ஆழ்த்தியது .  மன்னருக்கு   செய்தி   எட்டி னால்   என்ன   நேரும்   என்ற   பயம்   அவர்களை   வாட்டியது .  அரசனுக்கு   செய்தி   எட்டுவதற்குள்   அரசனை   சந்தித்து   செய்தியை   தமக்கு   சாதகமாக   மாற்றி   அமைத்து   சொல்ல  நினைத்து   சிலர்கள்   ரகசியமாக   தலைநகர்   நோக்கி   சென்றனர் .அரசனிடம்   அவருக்கு   நோயே   இல்லை   என்றும்   நோயென்று   நாடகமாடி   தன்   தமக்கையாரிடம்   சென்று   திருநீறு   அவர்   நோயை   நீக்கி   விட்டது   என்று   நாடகமாடி   சைவத்திற்கு   மாறி   விட்டதாக   திரித்து   கூறி   அரசனை   நம்ப   வைத்தனர் .  அரசன்   கடும்   கோபமுற்று   என்ன   செய்யலாம்   என   யோசனை  கேட்டார் .  சமண   பெரியோர்களும்   அவருக்கு   கடும்   தண்டனை   அளிக்குமாறு   அரசனை   வேண்டினர் .  அரசனும்   சம்மதித்து  அமைச்சர்களை   அழைத்து   அவரை   சிறை   பிடித்து   வர   ஆணை   இட்டார் .  அமைச்சர்களும்   வீரட்டானம்   சென்று   அரச   கட்டளையை   தெரிவித்தனர் .  ஈசனை   தவிர   வேறு   யாருக்கும்   தான்   கட்டுப்பட   மாட்டேன்   என்றும்   அன்புக்கு   தான்   தான்   அடி   பணிவேன்   என்றும்   திடமாக   கூறி   'நாமார்க்கும்   குடியல்லோம்   நமனை   அஞ்சோம் '  எனும்   பதிகத்தை   பாடி   பதிலுரைத்தார் .  அமைச்சர்கள்   பயந்துபோய்   மரியாதையுடன்   தங்களுடன்   தலைநகர்   வர   வேண்டி   கேட்டனர் .

No comments:

Post a Comment