Saturday 21 April 2018

அப்பர்   நல்லூரில்   சில   நாட்கள்   தங்கிவிட்டு   திருப்பழனம்   புறப்பட்டு   சென்று   அங்குள்ள   ஈசனை   சேவித்துக்கொண்டு   பக்கத்திலுள்ள   திங்களூர்  செல்ல  எண்ணி   கிளம்பினார் .  வழியெல்லாம்   திருநாவுக்கரசர்   மடம் ,  அன்ன   விடுதிகள் ,  தண்ணீர்   பந்தல்   என   அத்தனை  தர்ம   கைங்கைர்யங்களும்   அவர்   பேராலேயே   இருப்பதை   கண்டு   வியப்பு   மிகுதியால்   அங்குள்ளவர்களை   வினவினார் .  அவர்கள்   அவ்வூரில்  அப்பூதி   அடிகள்   என்றொரு  சிவனடியார்   வாழ்வதாகவும்   அவர்   அப்பரடிகள்   மீது   அளவிலா   பக்தி   கொண்டவர்    என்றும்   அவரே   அவர்   பெயரில்   இத்தனை  தர்ம   காரியங்களும்   செய்வதாக   கூறினர்.  ஆச்சர்யம்   அடைந்த   அப்பர்   அவரை   காண   விரைந்தார் .  அப்பூதியடிகளும்   இவரை   வரவேற்க   வந்து   கொண்டிருந்தார் .  அப்பரை   கண்டதும்   அவரை   வணங்கி   அமுது   செய்ய   தமது  கிருஹத்திற்கு    அழைத்து   சென்றார் .  அப்பரும்   ஆலயம்   சென்று   வந்து   விடுவதாக   கூறி   சென்றார் .  அப்பூதி   அடிகளின்   மனைவி   அமுது   தயாரித்து   விட்டு   தன்   மகனை   வாழை   இலை   பறித்து   வர   அனுப்பினார் .   தோட்டத்தில்   பையனை   பாம்பு   தீண்டியது .  பையன்   இலையை   தாயிடம்   கொடுத்துவிட்டு   விஷம்   தலைக்கேறி   இறந்து   போனான் .  திரும்பி  வந்த   அப்பர்   தெய்வ   அருளால்   நடந்ததை   அறிந்து   அவர்கள்   மகனின்   உடலை   சுமந்து   கொண்டு   ஈசன்   முன்   கிடத்தி   மனமுருக  ' ஒன்று  கொலாம் '  எனும்   பதிகம்   பாடி   மனமுருக   வேண்டினார் .  ஆச்சர்ய தக்க   விதமாக   சிறுவன்   துக்கத்திலிருந்து   விழிப்பது   போல்   எழுந்து   வந்தான் .  பெற்றோர்களுக்கு   ஆனந்தம்   தாங்கவில்லை .  அப்பர்   நிகழ்த்திய   இந்த   அற்புதம்   எல்லோரையும்   மெய்சிலிர்க்க   வைத்தது .

No comments:

Post a Comment