Monday 12 March 2018

மகிழ்ச்சியுடன்   இரு  தரப்பினரும் திருமணத்திற்கான   ஏற்பாடுகளை   செய்ய   ஆரம்பித்தனர் .  துரதிஷ்டவசமாக   அப்போது   வடபகுதியில்   போர்   துவங்கி   கலிப்பகையார்   படை   நடத்தி   போருக்கு   செல்ல   வேண்டிய      நிலை .  அவரும்   போரில்   வெற்றி   வாகை   சூடி   வந்து   திலகவதியை   மணம்   செய்து   கொள்வதாக   வாக்களித்து   விட்டு   போருக்கு   சென்றார் .  திருமணம்   தடைப்பட்டதை   தாங்க   முடியாமல்   புகழனார்   சிறிது   நாட்களில்   மரணமடைந்தார் .  மாதினியார்   கணவன்   இறந்த   துக்கம்   தாளாமல்   கணவருடன்   தானும்   உடன்கட்டை   ஏறி   உயிரை   துறந்தார் .  அப்போது   விதி   விளையாடியது .  போருக்கு   சென்ற   கலிப்பகையார்   போர்க்களத்தில்   வீரசொர்க்கம்   எய்தினார் .  செய்தி   கேட்ட   திலகவதியார்   அனலிலிட்ட   புழுவாய்   துடித்தார் .  மணமாகவில்லை   என்றாலும்   மனத்தால்   அவரை   கணவனாக   வரித்து   விட்டக்காரணத்தால்   அவரை   பிரிந்து   வாழ   மனம்   ஒப்பாமல்   தன்   உயிரை   மாய்த்துக்கொள்ள   துணிந்தார் .  சிறுவனான   மருள்நீக்கியார்   அக்காவை   கட்டிக்கொண்டு   நீ   செய்யும்   இக்காரியம்   சரியா   தவறா   நான்   அறியேன் .  ஆனால்   பெற்றோர்கள்   இல்லாத   இந்நிலையில்   சிறுவன்   நான்   தனித்து   வாழ்வது   சாத்தியமில்லை.  நானும்   உன்னுடன்   தீக்குளிக்கிறேன் .  என்று   அழுதான் .  திலகவதியார்   நெஞ்சு   பொறுக்காமல்   தன்   மனதை   மாற்றிக்கொண்டு   ஈசன்   சேவை                     ஆ லையங்களில்   உழவாரப்பணி   இதையே   தன்   லட்சியமாக   கொண்டு   தவ  வாழ்க்கை   வாழ   தொடங்கினார் .

No comments:

Post a Comment