Thursday 15 March 2018

பாடலிபுத்திரத்தில்   அந்த   சமயத்தல்   சமண மதம்   ஓங்கி   இருந்தது .  பல்லவ   மன்னன்   பேராதரவு   இருந்ததால்   அங்கு   சமண   பள்ளி   துவங்கப்பட்டு   நிறுவப்பட்டு   அம்மதம்   பரப்பப்பட்டு   தழைத்து   வந்தது .  மருள்நீக்கியார்   அங்கு   சென்றதும்   அப்பள்ளியை   அடைந்தான் ..  இவனுடைய   கூர்மையான   அறிவு   அவர்களை   மயக்கியது .  அவனை   ஏற்றுக்கொண்டு   அப்பள்ளி   பொறுப்பையும்   அளிக்க   செய்தது .  தன்னை   ஆளாக்கிய   சைவ   சமயத்தை   மறந்தான் .  தருமசேனர்   என்ற   பெயருடன்   புகழடைந்தான் . 
    சகோதரன்   சென்ற   பிறகு   திலகவாதியாருக்கு  திருவாய்மூர்   கசந்தது .  எம்பெருமானை  தேடி   திருவதிகைக்கு   சென்று  அங்கு   ஆலயத்தில்   தங்கி    பூப்பறித்து   எம்பெருமானுக்கு   மாலை   தொடுப்பது   ஆலயத்தை   சுத்தம்   செய்வது   போன்ற   பணிகளை   செய்துகொண்டு   ஈசனே   கதி   என்று   வாழ   தொடங்கினாள் . அவள்   மனம்   தம்பியின்   செய்கையால்   மிகவும்   நொந்து   போயிற்று .  அதை   மட்டும்   அவளால்   தாங்கி   கொள்ள   இயலவில்லை .  அவனுக்கு   நல்ல   அறிவு   புகட்ட   ஈசனை   பிரார்த்தித்த   வண்ணம்   காலம்   கடத்தினாள் .

No comments:

Post a Comment