Saturday, 7 September 2013

koteeswara3

கோடீஸ்வரர்   18 வயதானபோது  கடுமையாக  நோய்வாய்ப்பட்டார் . அப்போது  அவர்  கனவில்  அந்த  ஊர்  அம்மன்  தோன்றி  தன்னை  போற்றி  பாடல்  புனையும்படி  கேட்டு  கொண்டாளாம் .உடனேயே   அவர்   நலமடைந்து   பாடல்  புனைய  துவங்கி  விட்டதாக   கூறப்படுகிறது . கோவிலில்  அம்மனை  துதித்து   பாடினாராம் . இவருடைய   முக்கிய  படைப்புகள்  அழகர்  குறவஞ்சி , அழகரை  துதித்தும் ,அடைக்கலமாலை ,கயற்கண்ணி மாலை  இரண்டும்   மீனாக்ஷி  அம்மையை   துதித்தும் ,திருவேங்கடமாலை   வேங்கடவனை  போற்றியும்  பாடப்பெற்றன .சிவகங்கை ஜமீந்தார்  அவர்  பாடல்களி ல்  மயங்கி  அவருக்கு ' கவிகுஞ்சரம் '    என்று  பட்டம் வழங்கி  ஒரு  கிராமத்தையும்  பரிசளித்தாராம் .

No comments:

Post a Comment