தமிழ் மூவரில் மூத்தவர் முத்து தாண்டவர் இவர் சீர்காழியில் இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்தார் . பிறந்தபோதே கொடிய தோல் நோயோடு பிறந்தார் .ஆதலால் எல்லோராலும் உதாசீன படுத்தப்பட்டு தனிமையில் வாழ்ந்தார் .சதாகாலமும் பக்கத்தில் ஒரு அம்மையார் பாடும் சிவதுதி பாடல்கள் கேட்ட வண்ணம் காலம் தள்ளினார் . பிறகு தில்லை சென்று சிவனை துதி த்த வண்ணம் இ ருந்தார் . அங்கும் பக்தர்கள் பாடும் பாடல்களை கேட்டவண்ணம் வாழ்ந்தார் . ஒருநாள் இவர் கோவில் வாகன அறையில் மயங்கி கிடக்கையில் அர்ச்சகர் அந்த அறையை பூட்டிக் கொண்டு போய்விட்டார் . அப்போது அம்பாள் அர்ச்சகர் பெண் வடிவில் வந்து அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அவரிடம் நாளை கோவிலுக்கு சென்று அங்கு கேட்கும் முதல் வார்த்தையை வைத்து ஐயன் மேல் பாட்டு பாடு என்று சொல்லி ம்றைந்தாளாம் . மறுநாள் அவர் உடல் நலம் பெற்று இருப்பதை ஊணார்ந்தாராம் . அன்று முதல் நடராஜரை பாடுவதிலேயே காலம் கழித்தார்
No comments:
Post a Comment