Wednesday 2 May 2018

  திருவீழிமிழலையில்   அப்பரும்   சம்பந்தரும்   ஈசனை   மனமுருக   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தனர் .   அவ்வாறு   மகிழ்ந்து   இருக்கும்போது   அவ்வூரில்   பஞ்சம்  தோன்றியது .  நீர்நிலைகள்   வற்றி   மக்கள்   பெரும்   துன்பத்திற்கு    ஆளானார்கள்   அதை   கண்டு   இருவரும்   மிக   மனவேதனை   அடைந்தனர் . ஐயன்   அவர்கள்   கனவில்   தோன்றி   காலநிலை   மாற்றத்தால்   ஏற்பட்ட   இந்த   துன்பத்தை  கண்டு   கவலை   வேண்டாம் .    விமானத்தின்   கீழ்   தினமும்   கிழக்கிலும்   மேற்கிலும்   பொற்காசுகள்   வைக்கப்படும் .  அதைக்கொண்டு   பண்டங்கள்   வாங்கி   மக்களின்   பசி   தீருங்கள்.  என்று   கூறி   மறைந்தார் .  மறுநாள்   அங்கு   பொற்காசுகள்   இருப்பதை  கண்டு   மகிழ்ந்தனர் .  தண்டோரா   போட்டு   மக்களுக்கு   அறிவித்து   உணவு   வழங்க   திட்டமிட்டனர் .  அப்பர்   கடுமையாக   உழைத்து   உழவார   பணி   செய்து   ஐயனை   மகிழ்வித்தார் .  சம்பந்தரோ   தன்   பக்தியாலும்  பாடல்களாலும்   மட்டுமே   ஈசனை   மகிழ்வித்தார் .  ஆதலால்   அவர்     வாசியோடு   கூடிய   காசு   பெற்றார் .  ஆகையால்   அக்காசை   மாற்றி   பொருள்   வாங்க   அதிக   நேரம்   பிடித்தது .  ஈசனிடம்   வேண்டி   வாசியில்லாத   காசு   பெற்று   தன்   தொண்டை   சரிவர   நிறைவேற்றினார் .  அவ்வூர்   நிலைமை   சீர்   அடைந்தது .

No comments:

Post a Comment