சிவபாதவிருதயர் தம் உறவினர்களுடன் மறுநாளே நல்லூர் புறப்பட்டார் .நம்பிகளுக்கு அவர்கள் வந்த செய்தி அறிந்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் . ஞானப்பாலுண்ட அப்பெருமகனை பற்றி அவர் அறிந்திருந்ததால் அவர் தம் மகள் கொடுத்து வைத்தவள் என்று பெருமிதம் அடைந்தார் . அவர்களை மிக்க மகிழ்ச்சியுடன் தம் சுற்றத்தாருடன் வரவேற்றார் . மணம் பேசி முடித்து சம்பந்தரின் தந்தையார் ஊர் திரும்பினார். புரோதிகர்களை கலந்து பேசி முகூர்த்த நாள் நிச்சயித்தார் . தோணிபுரமே விழாக்கோலம் பூண்டது . நீலநக்கர் முருகனார் எல்லோரும் திருமணத்தில் கலந்து கொள்ள தோணிபுரம் வந்து சேர்ந்தனர் . திருமண நாள் நெருங்கியது . விதிப்படி காரியங்கள் செய்து முடித்துக்கொண்டு சம்பந்தர் ஆலயம் சென்று தோணியப்பரை சேவித்து கொண்டு சுற்றத்தாருடன் நல்லூர் பயணமானார் .
No comments:
Post a Comment