திண்ணன் பெரியவர்களை வணங்கிவிட்டு தன்னை தயார் செய்து கொண்டு வேட்டைக்கு புறப்பட்டான் . அவனுடன் சிறந்த வில்லாளிகளான நாணன் காடன் இருவரும் உடன் செல்ல தயாரானார்கள் . தாரை தப்பட்டைகள் முழங்க வேட்டைக்கு புறப்பட்டனர். தாரை தப்பட்டை சப்தத்தை கேட்ட மிருகங்கள் வெளியே ஓடிவர தொடங்கின . இவர்களும் விருப்பப்படி மிருகங்களை வேட்டை ஆடினார் . திடீரென ஒரு பெரிய காட்டு பன்றி குறுக்கே ஓடி வந்தது . திண்ணன் அதை கண்டதும் அதை துரத்தி வேட்டை ஆட முற்பட்டான் .அதுவும் வெகு தூரம் ஓடி அலைக்கழித்தது .
Friday, 30 June 2017
Sunday, 25 June 2017
நாகன் தம் சாதி ஜனங்கள் துன்பத்தை கண்டு மிக வருத்தமுற்றான் . மகன் திண்ணன் குலத்தொழிலில் மிக தேர்ச்சி அடைந்து விட்டது நினைவில் வர அவனை குல தலைவனாக நியமிக்க முடிவு செய்தான். அதற்காக அதை முறைப்படி செய்ய . வேண்டியவர்களை வரவழைத்து விழாவாக கொண்டாடினான் . பிறகு அவனை சிறந்த வேடுவர் இருவர் துணையுடன் சாதி சனங்களின் துயர் துடைக்க அனுப்ப ஆவன செய்தான் .
Sunday, 18 June 2017
குழந்தைக்கு திண்ணன் என்று பெயரை சூட்டினான் . கண்ணும் கருத்துமாக குழந்தையை வளர்த்தனர் தம்பதியர் . அவனும் வளர்ந்து ஆளானான் அவன் தந்தை அவனுக்கு முறையாக தம் குல தொழிலுக்கு தேவையான பயிற்சிகளை கொடுக்க தொடங்கினார் . அவனும் அதில் தேர்ச்சி பெற தொடங்கினான் . அவர்கள் வேட்டை ஆடுவதிலும் சில நியதிகள் கடைபிடித்தனர். கர்ப்பமுற்ற அல்லது உடல் ஊனமுற்ற மிருகங்களை தாக்க கூடாது . வயது ஆகாத மிருகங்களையும் அடிக்க மாட்டார்கள் . இவ்வாறு குல தர்மங்களையும் சேர்த்தே பயிற்சி பெற்றான் . நாகன் வயது முதிர்ந்த காரணத்தால் வேட்டைக்கு செல்ல இயலாதவனாக இருந்தான் .அப்போது ஒரு நாள் அண்டை காடுகளை சேர்ந்தவர்கள் நாகன் தொழில் செய்யாத காரணத்தால் அவர்கள் இருப்பிடத்தில் காட்டு மிருகங்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டதாக மிக வருத்தத்துடன் ஓலமிட்டனர்
Thursday, 15 June 2017
Wednesday, 7 June 2017
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன் |
அடுத்து காணப்போவது இணை இல்லா பக்தன் கண்ணப்பன் ஆகும் .
உடுப்பூர் எனும் ஊரில் நாகன் என்பவன் வாழ்ந்து வந்தான் . வனபிரேதசமான அங்கு அவன் வேடர்களின் தலைவனாக இருந்தான் .அவன் வேட்டை ஆடுவதில் மிக கெட்டிக்காரன் . அப்பிரதேச வேடர்கள் அவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் . காட்டு மிருகங்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் நாகனையே நம்பினார்கள் . அவன் மனைவி தத்தை என்பவள் . தங்கள் குல தெய்வமான முருகனிடம் அபார பக்தி வைத்திருந்தார்கள் . அவர்களுக்கு ஒரே குறை மணமாகி வெகு நாட்கள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாததே

Subscribe to:
Posts (Atom)