சோழநாட்டில் திருப்பெருமங்கலம் என்று ஒரு ஊர் . அங்கு வாழும் வேளான்குடி மரபில் ஏயர்குடி என்றொரு பரம்பரை . அவர்கள் மன்னரிடம் சேனாதிபதி பதவி வகிப்பவர்கள் . அதை சேர்ந்தவர் கலிக்காமர் . அவர் சிறந்த சிவபக்தர் . அவர் பக்கத்திலுள்ள திருப்புன்கூர் ஆலயத்திற்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளா ர் . பக்கத்தில் கஞ்சானுரில் வசிக்கும் மானக்கஞ்சாறர் மகளை மணந்து கொண்டு இனிய இல்லறம் நடத்தி வந்தார் . அப்போது ஆரூரில் சுந்தரர் ஆரூரரின் அருமை தோழனாக பெருமை பெற்று வாழ்ந்து வந்தார் . சுந்தரருடைய பக்தி வர்ணனைக்கு அப்பாற்பட்டது . ஒரு முறை அவருக்கும் அவர் மனைவி பரவை நாச்சியாருக்கு ஏற்பட்ட பிணக்கை தீர்க்க ஆரூர் தெருவில் நடந்து தூது சென்றார் எம்பெருமான் . அந்த செய்தியை கேள்விப்பட்ட கலிக்காமர் எல்லையில்லா சீற்றம் அடைந்தார் . அவரை கொலை செய்ய கூட தயாரானார் . உலகமெல்லாம் போற்றிப்பணியும் எம்பிரானை மனைவியுடனான பிணக்கை தீர்க்க தூது அனுப்ப எப்படி துணிந்தான் .என்று அவன் மரண தண்டனைக்கே ஏற்றவன் என்று கர்ஜனை செய்தான்.
No comments:
Post a Comment