தண்டி அடிகள் அவ்வாறு குளத்தை ஆழமாக்க முனைவதை கண்ட சமணர்கள் பொறுக்காமல் அவரை அவ்வாறு தோ ண்டுவதால் புழு பூச்சிகள் இறக்கும் ஆதலால் அவர் தோண்டுவதை நிறுத்துமாறு கூறினர் . அதற்கு அடிகள் ஐயனுக்கு சேவை செய்யும்போது அது பாவமாகாது என்று கூறிவிட்டு வேலையை தொடர்ந்தார் . அவர்கள் மீண்டும் மீண்டும் அவரை எச்சரித்தனர் . இவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தார் . அவர்கள் கோபமடைந்து கண் தான் குருடு என்றால் காதும் செவிடு போலும் என்று ஏளனம் செய்தனர் . அவர் மனம் பொறுக்காமல் 'மூடர்களே நான் மனக்கண்ணால் ஐயனை தினம் காண்கின்றேன் . அதை அறியாமல் ஏளனம் செய்கிறீர்கள் . நாளை எனக்கு கண் கிடைத்து உங்கள் கண் போனால் என்ன செய்விர்கள் ?' என்று மிக வேதனையுடன் கேட்டார் . அவர்கள் அப்படி ஆனால் நாங்கள் இந்த ஊரை விட்டே சென்று விடுவோம் . என்று பதில் உரைத்தனர் .
No comments:
Post a Comment