ஞானசம்பந்தர் மயிலை விட்டு புறப்பட்டு திருவான்மியூர் சென்று அங்கு பாடி துதித்து கழுங்குன்றம் சென்று வேதகிரியை வலம் வந்து கடைசியாக தில்லை அம்பலக்கூத்தனை வணங்க அங்கு சென்றார் . சிவபாதவிருதயர் மகன் சிதம்பரம் வந்திருப்பதை அறிந்து அங்கு சென்று மகனை பணிந்து தோணிபுரம் திரும்ப அழைத்தார் . அவரும் ஆடவல்லானிடம் வேண்டி விடை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினார் . தந்தைக்கு மகனை திருமணக்கோலத்தில் காண அவா எழுந்தது . சுற்றத்தாருடன் கலந்து பேசி நம்பியாண்டார் நம்பியின் மகளை ஏற்ற வரனாக தேர்ந்தெடுத்தார் . சம்பந்தர் முதலில் மறுத்தாலும் ஈசன் சித்தம் அதுவானால் அப்படியே நடக்கட்டும் என்று சம்மதித்தார் . சிபாதவிருதயர் சுற்றத்துடன் நல்லூர் சென்று முறைப்படி பெண் கேட்டு மணம் நிச்சயிக்க விரும்பினார் .
No comments:
Post a Comment