சுந்தரரை கண்ட அம்மையார் அவரை அவமதிக்க மனம் வராமல் அவரை வரவேற்று அமரச்சொல்லி தன் கணவர் பூர்ண குணமடைந்து உறங்குவதாக கூறினாள் . சுந்தரர் ஈசன் குணமாக்க தம்மை அனுப்பி இருக்கும்போது அவர் எவ்வாறு குணமாகி இருக்க முடியுமென்று சந்தேகப்பட்டு நான் அவரை கண்டே ஆகவேண்டும் ஈசன் கட்டளை என்று கூறி வற்புறுத்தினார் . அம்மையார் மீற முடியாமல் அவரை உள்ளே அழைத்து சென்றார் . அவர் உடலை கண்ட சுந்தரர் கலங்கி போனார் . ''ஐயனே என்னை காண மாட்டேன் என்ற அவருடைய சபதத்தை அவர் நிறைவேற்றிக்கொள்ள நீ எவ்வாறு அனுமதித்தாய் ?'' என்று மிக துக்கத்தோடு வினவினார் . கலிக்காமர் இறந்த பிறகு நான் வாழ்வதில் பொருளே இல்லை . நானும் வருகிறேன் . என்று கூறி உடை வாளை உருவினார் . அப்போது கலிக்காமர் உறக்கத்திலிருந்து எழுந்தவர்போல் சுந்தரர் கையிலுருந்து வாளை பிடுங்கி எறிந்துவிட்டு அவர் காலில் விழுந்தார் . இறைவனின் பேற ன்பிற்கு பாத்திரமான தங்களை நான் புரிந்து கொள்ளாமல் தவறு செய்து விட்டேன் . என்னை மன்னியுங்கள் என்கிறார் . சுந்தரர் அவரை நெஞ்சார தழுவிக்கொண்டார் . இருவரும் சேர்ந்து ஆரூர் சென்று அங்கு தங்கி இருந்து விட்டு கலிக்காமர் ஊர் திரும்பினார் . கலிக்காமர் பக்தி நெறி தவறாது சில காலம் வாழ்ந்து பிற கு சிவபதம் அடைந்தார் .
No comments:
Post a Comment