Monday 9 March 2020

சிவ   பெருமானின்   பெருமையை     பாடிய   பன்னிரு   திருமுறைகள்   எளிமையான   தமிழில்   யாவருக்கும்   படித்து   அறியும்   வகையில்   எழுதி   உள்ளேன் .  ஆதரவுக்கு   நன்றி .  பன்னிரெண்டாம்   திருமுறை   எழுத   மட்டும்   திருவாளர் .  கார்த்திகேயன்   அவர்கள்   எழுதிய   பெரிய   புராணம்   படித்தது   மிக்க   உதவியாக   இருந்தது .  அன்னாருக்கு   என்   மனமார்ந்த   நன்றி   உரித்தாகும் .     
                                                      லலிதா  விஜயராகவன் 

Friday 6 March 2020

 அநபாய   சோழன்  ' தொண்டர்   சீர்பரவுவார் '  எனும்   திருநாமத்தை   மந்திரிக்கு   சூட்டி    வணங்கினார் .  பதினோரு   திருமுறைகளோடு   இந்நூலை   பனிரெண்டாம்     திருமுறை    என்று   வகுத்து   செப்பேடு   செய்து   சன்னிதானத்தில்   ஏற்ற   உத்தரவிட்டான்.   நடராஜர்   ஆலய   மணிகள்   மங்கள   ஓசை   எழுப்பின .   அநபாயன்   அமைச்சர்    இருவரையும்   மணியோசை   புளகாங்கிதம்   அடைய   செய்தது .  சன்னதியில்   மங்கள   ஆர்த்தி   செய்யப்பட்டது .  அவர்கள்   இரு   கரம்   கூப்பி   ஐயனை   தொழுதனர் .   இம்மாபெரும்   பணி   நிறைவேறியதில்   அவர்கள்   மனம்   நிறைந்து   இருந்தது .  இப்பெரும்   நூல்    அரங்கேறியது . ஆடலரசனின்   பெரும்   கருணையால்   இம்மாபெரும்   காரியம்   அமோகமாக    நிறைவு       பெற்றது .   மக்கள்    மகிழ்ச்சி   சொல்ல   முடியாதது .               



                                                            சுபம் 
சுந்தரர்   வரலாற்றை   கூறி   முடித்த   உபமன்யு    முனிவர்   கண்கள்   கலங்க   ''அடியார்களிடம்   இறைவன்    காட்டும்   அன்பு   விவரிக்க   ஒண்ணாதது ''  என்று   கூறி   அதை   எண்ணி   மெய்மறந்து   நின்றார் .  கூடியிருந்த   முனிவர்கள்   அடியார்கள்   நெஞ்சம்   நெகிழ்ந்தது . 
      சித்திரை     மாதம்   திருவாதிரை   நாள்   எம்பெருமானுக்கு    உகந்த   நாள்   அன்று   அருண்மொழி   தேவர்   பாடிவந்த   திருத்தொண்டர்   புராணம்   சரியாக   ஓர்   ஆண்டுக்குப்பின்      நிறைவு   பெற்றது .   
     மக்கள்    பக்திப்   பெருக்கோடு   அமைச்சரின்   இத்தொண்டை   வெகுவாக   போற்றி   கொண்டாடினர் .  அநபாய   சோழன்   மிக்க   மகிழ்ச்சியில்   மூழ்கி   இருந்தான் .   அமைச்சர்    பாடிய   இத்திருப்புராணத்திற்கு    மிக்க   பக்தியோடு   பூஜை    செய்து    அதை      யானை   மேல்       ஏற்றி   அமைச்சரை   அமர   செய்து   தானும்   அமர்ந்து   சாமரம்    வீசியபடி   தில்லை   நான்கு   வீதிகளிலும்   ஊர்வலமாக   வந்தார்        

Thursday 5 March 2020

இறைவன்   மிக்க   மகிழ்ச்சி    அடைந்து   சேராமனுக்கு   அவர்   எழுதிய   ஞான   உலாவை   பாட   அனுமதி   அளித்தார் .   தேவர்கள்   ஞானியர்கள்   கூடி   இருந்த   சபையில்    இறைவன்   முன்   பாடினார் .   இறைவன்   மனம்   மகிழ்ச்சி     அடைந்து   ''நீங்கள்   இருவரும்   இங்கு   நம்   கணங்களுக்கு   தலைவர்களாய்    இருந்து   வாருங்கள்   என்று    கூறி   வாழ்த்தி   அனுப்பினார் .ஆனால்   சுந்தரர்   முன்பு   செய்த   அதே   தொண்டுகளில்    ஆழ்ந்தார் .   சேரமானார்    கணங்களின்    தலைவரானார் . 
   ஆரூரிலிருந்து    பறவையாரும்   ஒற்றியூரிலிருந்து    சங்கிலியாரும்   கைலாயம்   வந்து    பழையபடி    கமலினி ,  அனந்திதை யாக   தேவியின்   சேடிகளாக    தங்கள்   பணிகளை   தொடர்ந்தனர் . 
    ஆரூரர்   அருளிய  ' தானெனை '   எனும்   பதிகம்   பக்தியுடன்   அஞ்சைக்களத்தில்   சேர்த்தனர் .   சேரமான்   பாடிய   ஞான உலா    திருப்பிடவூரில்    உலகம்   அறிய   செய்யப்பட்டது .   
சுந்தரர்   இறைவனை   மீண்டும்    வணங்கி   ''ஐயனே   என்   நண்பன்   சேரமான்   பெ ருமானார்   வாயிலேயே   நிறுத்தப்பட்டார் .   தயை   கூர்ந்து   அவருக்கும்    கிருபை   செய்ய   பிரார்த்திக்கிறேன் ''  என்று   கேட்டுக்கொண்டார் .  உடனே   இறைவன்   தம்   கணங்களுக்கு   அவரையும்   அழைத்து   வருமாறு    ஆணையிட்டார் .   அவ்வாறே   அவரை   அழைத்து   வந்தனர் .   சேரமானார்    வந்ததும்   எம்பெருமான்    காலில்   விழுந்து    வணங்கினார் .    ஐயன் ' நாம்   உன்னை   அழைக்காதபோது   எப்படி   இங்கு   வந்தாய் '   என்று     வினவினார் .   அதற்கு   சேரமான்   ''ஆரூரரை    நான்   வணங்கிக்கொண்டே    வந்தேன் .   தங்கள்   அன்புமிக்க   அடியார்   மீது    நான்   கொண்ட   பக்தி   என்னை   தங்கள்   திருவடிகள்   வரை   கொண்டு   சேர்த்ததில்    ஆச்சர்யம்   என்ன   இருக்கிறது ?  நான்   தங்கள்   மீது    ஞான   உலா   ஒன்று     பாடினேன் .  அதை   உங்கள்    படிக்க   உத்தரவு    வேண்டுகிறேன் என்றார் .     

Tuesday 3 March 2020

சுந்தரர்   ''தானெனை   முன்   படைத்தான் ''  எனும்    திருப்பதிகம்   பாடியபடி   திருக்கயிலாயம்    தென்   வாயிலை   அடைந்தார் .   அங்கே    சேரமான்   அவருக்காக   காத்திருந்தார் .   இருவரும்    பல    வாயில்களை   கடந்து   பிரதான    வாயிலை    அடைந்தனர் .   அங்கு   சேரமானை    அனுமதிக்க    மறுத்து   விட்டனர் .   சுந்தரர்   கைலாயநாதர்   சன்னதியை   அடைந்தார் .  அவர்     காலில்   விழுந்து   சேவித்தார் .   அன்பு   மிகுதியால்   கயிலை   பதி   ''ஆலால   சுந்தரா    வந்து   விட்டாயா ?''   என்று    நெஞ்சார    வரவேற்றார் .   அவரை    நோக்கி   மனமுருகி   ''  ஐயனே   பாசவினைகளில்    சிக்கி    உழலாமல்    என்னை   காத்து    என்   தவறுகளை   மன்னித்து   என்னை   தடுத்து   ஆட்கொண்ட   அண்ணலே   உமது   கருணையை   எவ்வாறு   போற்றுவேன்''     என்று  ஆனந்த   கண்ணீர்      உகுத்தார்    சுந்தரர் .  .