கலிக்காமருக்கு நெஞ்சம் ஆறவேயில்லை . எவ்வாறு ஐயனை இவ்வாறு காலத் தேய தெருவில் நடக்க வைப்பார் . இந்த எண்ணம் அவரை வெகுவாக வாட்டியது . எல்லோரிடமும் சொல்லி சொல்லி புலம்பினார் . அவருக்கு ஆறவேயில்லை . அவரை கொல்ல வேண்டும் என்ற வெறி. இதை உணர்ந்த சுந்தரர் மிக்க துயரம் அடைந்தார் . தினமும் ஆரூர் ஈசனிடம் சொல்லி மாய்ந்து போனார் . ஆரூரருக்கு தன் பக்தன் படும் துயரம் பொறுக்கவில்லை . சுந்தரர் ஆரூரரிடம் உள்ள பெரும் அன்பினால் சலுகை மிக எடுத்துக்கொண்டு வன்தொண்டர் ஆனார் . ஆனாலும் அவருக்கு ஈசன் அடியார்களிடம் மிக்க மதிப்பு உண்டு . அவ்வாறு இருக்க தம் மீது இப்படி பழி ஏற்பட்டதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . ஐயனிடம் புலம்பினார் . ஐயன் மனம் இறங்கியது . அவர் தம் பக்தர்களிடையே ஏற்பட்ட இந்த பிணக்கை நீக்க எண்ணம் கொண்டார் . கலிக்காமருக்கு சூலை நோயை வர செய்தார் . அவர் நோயின் வேதனையால் மிக நொந்து போனார் .
No comments:
Post a Comment