பிள்ளையார் நல்லூர் வருவதை கேட்டு ஊர் மக்கள் திரளாக அவரை தரிசிக்க வந்தனர் . ஊரெல்லாம் அலங்கார பந்தல்களாலும் தோரணங்களால் அலங்கரிக்க பட்டது . காழிப்பிள்ளை நீராடி புத்தாடை அணிந்து மாப்பிள்ளை கோலம் தரித்து வந்தார். நம்பியாண்டார் நம்பியும் அவர் மனைவியும் அவரை ஈசனாக பாவித்து ஆசனத்தில் அமரச்செய்து பாலால் கால் அலம்பி மரியாதை செய்து மகளை கன்னியாதானம் செய்தனர் . நீலநக்கர் நீலநக்கர் வைதீக சம்பிரதாயங்களை செய்து வைத்தார் . திருமண தம்பதிகள் அக்கினியை வலம் வந்தனர் . சம்பந்தர் 'இறைவா இவளுடன் சேர்ந்து நான் உன் திருவடியை அடையவே விரும்புகிறேன் ' என்று மனமுருக பிரார்த்தித்தார் . பிறகு ஆலயம் சென்றனர் . அங்கு 'நல்லூர் பெருமணம் ' எனும் பதிகம் பாடி வணங்கினார் . அப்போது அதிசயிக்க வகையில் பெரும் ஜோதி தோன்றியது . ஒரு அசரீரி வாக்கு 'வந்திருந்த விருந்தினர் அனைவரையும் அஜ்ஜோதியில் புகுந்து தன்னிடம் வந்து சேருமாறு கூறியது . எல்லோரும் மகிழ் ச்சியுடன் ஜோதியில் கலந்தனர் . பிறவி பற்று அறுந்தது . பிறகு தம் மனைவி கரம் பற்றி காதலாகி கசிந்து எனும் பதிகம் பாடி ஜோதியில் கலந்து ஈசனுள் ஐக்கியமானார் .
No comments:
Post a Comment