Monday 22 April 2019

தொண்டை   நாட்டில்   திருவேற்காடு   என்றொரு   இடம் .  அங்கு  வேளாண்குடி   தலைவர்   ஒருவர்   இருந்தார்   அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களுக்கு   அமுது   படைப்பதை   தன்   பெரும்   தொண்டாக   செய்து   வந்தார் .   அவர்களுக்கு   அமுது   செய்வித்து   கடைசியில்   தான்   அவர்    உணவு   அருந்துவார் .   அடியார்கள்   கூட்டம்   நாளுக்கு   நாள்   அதிகரித்தது .   ஆனாலும்   மனம்   கோணாமல்   தொண்டை   தொடர்ந்தார் . தன்   சொத்துக்களையெல்லாம்   விற்று   தொண்டை   தொடர்ந்தார் .  அனால்   அவையும்   தீர்ந்தது .  ஆனாலும்   அவர்   தளரவில்லை.   அவர்   சூதாட்டத்தில்   வல்லவர்   சூதாடி   பணம்   சம்பாதித்து   அறப்பணியை   தொடர்ந்தார் .  அவர்    தொடர்ந்து   வென்றதால்   அவருடன்   சூதாட   யாரும்    தயாராக   இல்லை .  அவர்   ஆதனால்   பக்கத்திலுள்ள   சிவாலயங்களுக்கு   சென்று   அந்த            ஊர்களில்   ஆடி   அங்குள்ள   அடியார்களுக்கு    அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  ஆனால்   விதி   யாரை   விட்டது .   அவர்   திருக்குடந்தை   வந்து   சேர்ந்தார் .  அங்கு   அவர்   தோல்வி   காண   ஆரம்பித்தார் .  இருந்தும்   மனம்   தளராமல்   ஆடி   வெற்றி   கண்டார் .   எதிராளிகள்   அவருடன்   தகராறு   செய்ய   ஆரம்பித்தனர்  .  அவர்   எதிரிகளை   வாள்   தாக்கி   பணிய   வைத்தார் .  அதனால்   அவர்க்கு   மூர்க்கர்   என்ற   பெயர்   நிலைத்தது .  அவ்வாறே   தொண்டு   செய்தே  வாழ்ந்து   ஈசன்   அடி   சேர்ந்தார் .    

No comments:

Post a Comment