யோகியார் வழியில் ஒரு கிராமத்தில் ஒரு இடையன் இறந்து கிடந்ததையும் அவனை சுற்றி மாடுகளும் கண்ணீர் மல்க கதறிக்கொண்டு இருந்தன . தினம் அவைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவான் போலும் . ஆவினங்கள் அவன் மேல் உயிரை வைத்திருக்கும் போல் தோன் றுகிறது . விதிவசத்தால் அவன் இறந்து விடவே மாடுகள் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்த ன . அதை கண்ட யோகியின் மனம் உருகியது . அவன் உயிர் பிழைத்தால்தான் அந்த ஆவினங்கள் மனசாந்தி அடையும் என்று முடிவு செய்து தன் உயிரை அந்த உடலில் கூடுவிட்டு கூடுபாயும் யோக சக்தியால் செலுத்தினார் . அந்த வாயில்லா ஜீவன்கள் அடைந்த ஆனந்தம் சொல்லில் அடங்காது . தன் உடலை ஒரு மறைவான இடத்தில் கிடத்திவிட்டு மாடுகளை அவைகள் இடங்களில் சேர்த்தார் . அங்கு இறந்த இடையன் மூலன் என்று அறிந்து கொண்டார் .
No comments:
Post a Comment