மனமுடைந்த அடிகள் ஆலயம் சென்று தியாகேசரி டம் தம் மனவருத்தத்தை சொல்லி புலம்பினார் . துக்கத்துடன் மடம் சென்று உறங்கினார் . இரவு அவர் கனவில் ஈசன் தோன்றி அன்பனே கவலை வேண்டாம் உமக்கு கண் அளிப்போம் என்று கூறினார் . ஈசன் மன்னருடைய கனவில் தோன்றி 'மன்னா எம்பக்தன் எமக்கு பணிபுரியும் போது சமணர்கள் அவனை தடுத்து அதோடு மிகவும் அவமானம் செய்து விட்டனர் . பக்தனின் உள்ளம் அறிந்து அவனுக்கு நீதி வழங்கு' என்று கூறினார் . உடனே மன்னன் புறப்பட்டு தண்டியடிகளை காண வந்தார் . அடிகள் அரசனிடம் நடந்ததை அப்படியே சொல்லி தனக்கு கண் வந்து அவர்கள் கண்களை இழந்தால் ஊரைவிட்டே சென்று விடுவதாக கூறியதையும் தெரிவித்தான் . சமணர்களும் அவ்வாறு தாங்கள் சொன்னதை ஒப்பு கொண்டனர் . அன்று அடிகள் கண்ணீர்மல்க ஐயனை துதித்தார் . அப்போது அந்த அதிசயம் நேரந்தது . அடிகள் தம் கண்ணொளியை பெற்றார் . அதே நேரத்தில் சமணர்கள் தங்கள் பா ர்வை இழந்தனர் . மன்னர் தன் ஆட்களை விட்டு சமணர்களை வெளியேற்றினார் . தண்டி அடிகள் பலகாலம் ஈசனுக்கு தொண்டு செய்து கொண்டு வாழ்ந்து பிறகு தியாகேசரின் பாதாரவிந்தம் சேர்ந்தார் .
No comments:
Post a Comment