அவர் தொடர்ந்து அவ்வாறே கற்களால் அர்ச்சனை செய்து பெரும் ஆனந்தம் அடைந்தார் . ஒரு நாள் அவர் கல்லெறிய மறந்து உணவு அருந்த அமர்ந்தார் . சட்டென்று அவருக்கு கல்லெறியாமல் அமர்ந்தது நினைவுவர உடனே சிவலிங்கத்தை தேடி ஓடி வந்தார் . அவர் வந்ததும் ஈசன் உமை அன்னையுடன் அவருக்கு காட்சி அளித்தார் . சாத்தனார் மெய்சிலிர்த்து போனார் . தன்னை மறந்து ஆனந்த கூத்தாடினார் . கருணை வள்ளலான எம்பெருமான் அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டார் . கல்லால் அடித்து தன்னை அர்ச்சித்தவரையும் ஏற்றுக்கொள்ளும் வள்ளல் எம்பிரான் . அவர் கருணை எழுத்தில் அடங்கா
No comments:
Post a Comment